செய்தி தமிழ்நாடு

வீட்டிற்குள் புகுந்த மழைநீர் பொதுமக்கள் அவதி

  • May 6, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் மாநகராட்சியில் நேற்று மாலை பெய்த கன மழையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கி வெளியேறாததால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர். அந்த வகையில் காஞ்சிபுரம் மாநகராட்சி 10வது வார்டு பகுதியில் சாத்தான்குட்டை தெரு, வெள்ளகுளம் தெரு ஆகிய பகுதிகள் தாழ்வான பகுதியாக உள்ளதால் அனைத்து தெருக்களில் இருந்தும் மழைநீர் மற்றும் கழிவுநீர் கால்வாய் வழியாக காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய பிரதான கால்வாயான மஞ்சள் நீர் கால்வாய் வழியாக மழை நீர் சென்று வடிய தொடங்குகிறது. இந்நிலையில் சாத்தான்கோட்டை […]

உலகம் செய்தி முக்கிய செய்திகள்

அமெரிக்காவின் உள்நாட்டு ஆலோசகராக நியமிக்கப்பட்ட இந்திய வம்சாவளிப் பெண்!

  • May 6, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் உள்நாட்டு கொள்கை ஆலோசகராக இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண்ணான நீரா தாண்டன் நியமி்க்கப்பட்டுள்ளார். இது சம்பந்தமான உத்தரவை, அதிபர் ஜோ பைடன் பிறப்பித்துள்ளார். இது கரு்த்து வெளியிட்டுள்ள ஜோ பைடன்,  பொருளாதார இயக்கம் மற்றும் இனச்சமத்துவம் முதல் சுகாதார பாதுகாப்புஇ குடியேற்றம்இ கல்வி வரை எனது உள்நாட்டுக் கொள்கையை உருவாக்கி செயல்படுத்துவதை நீரா தாண்டன் தொடர்ந்து முன்னெடுப்பார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். வரலாற்றில் மூன்று முக்கிய கொள்கை கவுன்சில்களில் ஏதேனும் ஒன்றை வழி நடத்தும் […]

ஆஸ்திரேலியா

சிட்னியில் உள்ள இந்து கோவில் மீது மீண்டும் தாக்குதல்

  • May 6, 2023
  • 0 Comments

இந்த மாத இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி ஆஸ்திரேலியா செல்லவுள்ளார். இந்த நிலையில், அந்நாட்டின் சிட்னி நகரில் உள்ள இந்து கோவில் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிட்னி நகரில் உள்ள சுவாமி நாராயண் கோவில் சுவரை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அக்கோவிலில் காலிஸ்தான் கொடி ஏற்றப்பட்டிருந்தது. இதனால் இத்தாக்குதலை நடத்தியது காலிஸ்தான் ஆதரவாளர்களா என பொலிஸார் தீவிர விசாரணை […]

ஐரோப்பா

முடியாட்சி எதிரான ஆர்ப்பாட்ட குழுவின் தலைவர் கைது!

  • May 6, 2023
  • 0 Comments

பிரிட்டனில் முடியாட்சியை எதிர்க்கும் குழுவின் தலைவர்கைது செய்யப்பட்டுள்ளார். இன்று இடம்பெறவுள்ள முடிசூட்டும் நிகழ்விற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். மன்னர் சார்ல்ஸின் ஊர்வலபாதையில் ஆர்ப்பாட்டம் செய்த நபரே கைதுசெய்யப்பட்டுள்ளார். ரிப்பப்ளிக்கின் தலைமைநிறைவேற்று அதிகாரி கிரஹாம் ஸ்மித் டிரபல்ஹார் , முடிசூட்டும் நிகழ்வு பிரதானமாக இடம்பெறும் டிரபல்கர் சதுக்கத்தில் ஆர்ப்பாட்டங்களிற்காக குளிர்பானங்கள் பதாகைகளை சேகரித்துக்கொண்டிருந்தவேளை பொலிஸார் அவரை கைதுசெய்துள்ளனர். வான் ஒன்றின் பின்னால் நூற்றுக்கணக்கான பதாகைகளுடன் நடந்துசென்றுகொண்டிருந்தவேளை ஸ்மித் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இன்றைய தினத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் நடவடிக்கைகளை […]

இலங்கை

பொருளாதார நெருக்கடியால் இலங்கையை சேர்ந்த 10 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

  • May 6, 2023
  • 0 Comments

பொருளாதார நெருக்கடியால் மேலும் 10 இலங்கை தமிழர்கள் இன்று   தமிழகத்தை சென்றடைந்துள்ளனர். நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர். இதனால் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இலங்கையில் இருந்து 244 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடிக்கு அகதிகளாக சென்றுள்ளனர். இந்நிலையில் இலங்கை முல்லைத்தீவு மாவட்டம் 8 ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்த இரண்டு ஆண்கள்,  நான்கு பெண்கள்,  மூன்று ஆண்குழந்தை ஒரு பெண் குழந்தை உட்பட 10 பேர் முல்லைத்தீவு […]

வட அமெரிக்கா

பாடசாலைக்கு வெளியே கனேடிய சிறுமிக்கு ஏற்பட்ட துயரம்!

  • May 6, 2023
  • 0 Comments

ஒன்ராறியோ பர்லிங்டனில் பாடசாலைக்கு வெளியே சிறுமி ஒருவர் வாகனம் மோதி பலியான நிலையில், குடும்பத்தினர் அவரை அடையாளம் கண்டுள்ளனர். கடந்த புதன்கிழமை மதியத்திற்கு மேல், சுமார் 5.30 மணியளவில் 8 வயதான Jayne Hounslow என்ற மாணவி வாகனம் மோதி குற்றுயிராக மீட்கப்பட்டார்.பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பெற்றோரின் காரில் இருந்து இறங்கிக் கொண்டிருந்த போது, அவர் மீது வாகனம் மோதியுள்ளது. உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்தாலும், உயிரை காப்பாற்ற முடியாமல் போனது. இதனிடையே வாகனத்தால் […]

செய்தி தமிழ்நாடு

காளைகள் முட்டியதில் 11 பேர் காயம்

  • May 6, 2023
  • 0 Comments

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே மகிபாலன்பட்டியில் உள்ள பூங்குன்ற நாயகி அம்மன் ஆலய சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடந்த வாடிமஞ்சுவிரட்டு போட்டியில் சிவகங்கை , திருப்பத்தூர், பொன்னமராவதி, கீழச்சிவல்பட்டி, திருமயம் உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து சுமார் 208 காளைகளும், 50 க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இதில் சீறி பாய்ந்த காளைகளை, காளையர்கள் விரட்டி பிடித்தனர். இந்த மஞ்சுவிரட்டை காண தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கானோர் கண்டு களித்தனர். தொடர்ந்து வாடிவாசல் வழியாக […]

செய்தி தமிழ்நாடு

ஊரக வளர்ச்சி துறை அலுவலர்களுக்கு பாராட்டு

  • May 6, 2023
  • 0 Comments

காஞ்சிபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டமான ஜல் ஜீவன் திட்டத்தில் 2020-2021 ஆம் ஆண்டு ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை மூலம் செயல்படுத்தி குறித்த காலத்தில் 100% திட்ட இலக்கினை அடைந்ததற்காக நல்ஆளுமைக்கான விருதினை பாரத பிரதமர் அவர்களால் 21.04.2023 தேசிய குடிமை பணி தினத்தன்று புதுதில்லியில் நடைபெற்ற விழாவில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்திக்கு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தில் […]

செய்தி தமிழ்நாடு

இயக்குனர் பாண்டியராஜிடம் இரண்டு கோடி மோசடி ஜவுளி கடை உரிமையாளர் கைது

  • May 6, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் விராச்சிலை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியராஜ். இவர் பசங்க உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களை இயக்கிய திரைப்பட இயக்குனராக உள்ளார். இவரிடம் இவருடைய நண்பராக இருந்த குமார் என்பவர் புதுக்கோட்டை திருப்பத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரபல ஜவுளி கடை நடத்தி வருகிறார். நிலம் வாங்கி தருவதாக கூறி திரைப்பட இயக்குனர் பாண்டியராஜிடம் இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. குறித்த நேரத்திற்குள் பணமும் தரவில்லை நிலமும் வாங்கித் தரவில்லை. இது குறித்து பலமுறை […]

இந்தியா

மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பியது!

  • May 6, 2023
  • 0 Comments

மணிப்பூர் வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பற்றி எரிந்த மணிப்பூர் இன்று இயல்பு நிலைக்கு திரும்பியது. மணிப்பூரின் இம்பால் மற்றும் இதர பகுதிகளில் உள்ள கடைகள்,  சந்தைகள் திறக்கப்பட்டு,  சாலையில் வாகனங்கள் ஓடத்துவங்கியுள்ளன. நகரின் முக்கிய பகுதிகளில் ராணுவம்இ மத்திய காவல் படையினர் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். பொது மக்கள் இன்று காலை முதலே காய்கறிகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியில் வரத்துவங்கியுள்ளனர். எவ்வாறாயினும் குறித்த பகுதியில் […]

You cannot copy content of this page

Skip to content