ஆசியா

வெள்ளத்தில் தத்தளிக்கும் சீனா – 4.97 லட்சம் மக்கள் பாதிப்பு

  • May 9, 2023
  • 0 Comments

கிழக்கு சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் கடும் மழையால் சுமார் 4 லட்சத்து 97 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொட்டித் தீர்த்த கனமழையால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அம்மாகாணத்தின் 43 மாவட்டங்களில் பெய்த மழையால் சுமார் 67 ஆயிரத்து 600 ஹெக்டேர் பரப்பிலான விவசாய நிலங்கள் சேதமாகியுள்ளன. பாதிக்கப்பட்ட இடங்களில் இருந்து 14 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஐரோப்பா

பிரான்ஸில் தீடீரென தீப்பிடித்து எரிந்த பயணிகள் பேருந்து – தவிர்க்கப்பட்ட உயிர்ச்சேதம்

  • May 9, 2023
  • 0 Comments

பிரான்ஸில் பயணிகள் பேருந்து ஒன்று நடுவழியில் தீடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது. சுற்றுவற்ற வீதியில் உள்ள porte de Clignancourt பகுதியில் இச்சம்பவம் நேற்று நண்பகல் இடம்பெற்றுள்ளது. பயணிகள் எவருமின்றி தனியே சாரதியுடன் பயணித்த குறித்த பேருந்து நடுவழியில் திடீரென தீப்பிடித்துள்ளது. பயணிகள் இல்லாததால் பெரும் விபத்து மற்றும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. RATP நிறுவனத்துக்குச் சொந்தமான இந்த பேருந்தினை MAN எனும் நிறுவனம் தயாரித்திருந்தது. இது ஒரு மின்சார பேருந்து எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீயணைப்பு படையினர் தலையிட்டு தீயை […]

இலங்கை

களுத்துறையில் மாணவி உயிரிழப்பு – சிக்கிய பிரதான சந்தேக நபர்

  • May 9, 2023
  • 0 Comments

களுத்துறை பிரதேசத்தில் 16 வயதான பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பில் 29 வயதுடைய பிரதான சந்தேக நபர் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சந்தேக நபர் காலியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட நபர் களுத்துறை, இசுரு உயன பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். மேலும் இந்த சம்பவம் கொலையா? அல்லது தற்கொலையா? என்பது இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை எனவும் இது கொலையாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் பொலிஸார் விசாரணைகளை […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp பயனர்களுக்கு முக்கிய எச்சரிக்கை!

  • May 9, 2023
  • 0 Comments

உலகளவில் பெரும்பலோனரால் வாட்ஸ் அப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. செய்திகளை அனுப்புவதற்கும், மற்றோர்களை தொடர்பு கொள்வதற்கும் மக்கள் WhatsApp பயன்படுத்தி வருகிறார்கள். இத்தகைய WhatsAppஇல் பயனர்களை ஏமாற்றி சிலர் மோசடி செய்து வருகின்றனர். கடந்த சில நாட்களாகவே, WhatsApp பயனர்கள் பலருக்கும் எத்தியோப்பியா (+251), மலேசியா (+60), இந்தோனேசியா (+62), கென்யா (+254), வியட்நாம் (+84) மற்றும் பிற நாடுகளிலிருந்து சர்வதேச எண்களிலிருந்து அழைப்புகள் வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. மக்கள் எந்த நாட்டிலிருந்தும் கூடுதல் கட்டணங்கள் இல்லாமல் WhatsAppஇல் […]

ஐரோப்பா

ஜெர்மனிக்கு தப்பி செல்ல முயன்ற தமிழருக்கு நேர்ந்த கதி

  • May 9, 2023
  • 0 Comments

கொலை மிரட்டல், மோசடி வழக்குகளில் தஞ்சை காவல் துறையால் தேடப்பட்டு வந்த நபர் ஜெர்மன் தப்பிச்செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டார். தஞ்சாவூரை சேர்ந்த ஸ்ரீராம் ராஜகோபால் வயது 34 இவர் மீது கடந்த பிப்ரவரி மாதம் தஞ்சை காவல் நிலையத்தில் கொலை மிரட்டல், நம்பிக்கை மோசடி, தகாத வார்த்தைகளால் திட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதை அறிந்த ஸ்ரீராம் ராஜகோபால் தலைமறைவு ஆகிவிட்டார். இதையடுத்து தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இவரை […]

ஆசியா

சிங்கப்பூரில் வங்கிகளில் பணம் வைத்திருப்போர் தொடர்பில் வெளியான தகவல்

  • May 9, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் வங்கிகளில் பணம் வைத்திருப்போர் 89 சதவீதத்திற்கும் அவர்கள் போட்ட பணத்துக்குக் காப்புறுதி உள்ளதென வர்த்தக, தொழில் துணையமைச்சர் ஆல்வின் டான் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் வைப்புத்தொகைக் காப்புறுதித் திட்டம் வங்கிகளுக்கும், நிதிநிறுவனங்களுக்கும் காப்புறுதி தருகிறது. அதன்படி காப்புறுதி பெற்றுள்ள வங்கியோ, நிதிநிறுவனமோ நொடித்துப்போனால் அதில் முதலீடு செய்த பொதுமக்களுக்கு அவர்கள் போட்ட பணத்தில் அதிகபட்சம் 75,000 வெள்ளிவரை கொடுக்கப்படும். வைப்புத்தொகைக் காப்புறுதி நிதியில் போதுமான பணம் இருப்பதாகத் ஆல்வின் டான் உத்தரவாதம் தந்தார். நிதியின் இலக்கு […]

பொழுதுபோக்கு

அஜித் மகள் அனிகாவிற்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் !! அதிர்ச்சியில் திரையுலகம்

  • May 9, 2023
  • 0 Comments

அஜித் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான “என்னை அறிந்தால்” படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான அனிகா, பல படங்களில் நடித்து தற்போது கதாநாயகியாகவும் வலம் வருகின்றார்.. சமீபத்தில் அனிகா நடிப்பில் “ஓ மை டார்லிங்” வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர். இதனால் பாக்ஸ் ஆபிஸில் படம் தோல்வி அடைந்தது. இந்நிலையில் நந்தினியின் பெயரில் அனிகாவின் புகைப்படத்தை வைத்து கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. இந்த போஸ்டர் எதாவது […]

இலங்கை

முதலிடத்தை பிடித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க

  • May 9, 2023
  • 0 Comments

மக்கள் மத்தியில் ஆதரவு பெருகிவரும் அரசியல் வாதிகளின் பட்டியலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முதலிடத்தை பிடித்துள்ளார் . கட்சிகளின் பட்டியலில் தேசிய மக்கள் சக்தி முதலிடத்தில் உள்ளது எனவும் தெரியவந்துள்ளது. சமகால அரசியல் நிலைவரம் மற்றும் மக்களின் நிலைப்பாடு என்னவாக உள்ளது என்பது தொடர்பில் அரச நிறுவனமொன்று அண்மையில் நடத்திய கருத்து கணிப்பிலேயே இவ்விடயம் தெரியவந்துள்ளது. இதற்கமைய அரசியல்வாதிகளுள் ரணில் விக்கிரமசிங்கவுக்கு 33 வீதமானோரும், அநுரகுமார திஸாநாயக்கவுக்கு 16 வீதமானோரும், சஜித் பிரேமதாசவுக்கு 12 வீதமானோரும் ஆதரவு […]

இலங்கை

இலங்கையில் வாகனம் வைத்திருப்பவர்களுக்கு எச்சரிக்கை

  • May 9, 2023
  • 0 Comments

இலங்கையில் 05 வருடங்களாக வருமான அனுமதிப்பத்திரம் பெறாத வாகனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களம் இதனை தீர்மானித்துள்ளது. அத்துடன், குறித்த வாகனங்களை திணைக்களத்தின் தகவல் அமைப்பிலிருந்து நீக்குவதற்கும் தீர்மானித்துள்ளது. மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் தற்போது 8.3 மில்லியன் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும், 6 மில்லியன் வாகனங்கள் மட்டுமே QR குறியீட்டு முறைமை மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த அனுருத்த விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டு […]

செய்தி வட அமெரிக்கா

85 வயது முதியவரை திருமணம் செய்துகொண்ட 24 வயதான இளம்பெண்

  • May 8, 2023
  • 0 Comments

காதலிப்பவர்கள் தங்கள் துணையின் வயதைக் கண்டுகொள்வதில்லை. இதை நீங்கள் பலமுறை கேட்டிருப்பீர்கள், இப்போது அப்படிப்பட்ட ஒரு காதல் ஜோடியின் கதை ஒன்று வெளியாகியுள்ளது. இதில் 24 வயதான யுவதி 85 வயதான முதியவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 100 வயது ஆனாலும் பரவாயில்லை என்று முதியவரிடம் மனதை பறிகொடுத்த யுவதி திருமணத்திற்குப் பிறகு தெரிவித்துள்ளார். டெய்லி எக்ஸ்பிரஸ் அறிக்கையின்படி, அமெரிக்காவின் மிசிசிப்பியில் வசிக்கும் 24 வயதான மிராக்கிள் போக், 2019 இல் 85 வயதான சார்லஸ் […]

You cannot copy content of this page

Skip to content