போர் நிறுத்தம் தொடர்பில் உக்ரேனுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ள அமெரிக்கா
ரஷ்யா-உக்ரேன் இடையிலான போரை நிறுத்த பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. சவூதி அரேபியாவின் ஜெட்டாவில் மார்ச் 23ஆம் திகதி உக்ரேன் அதிகாரிகளுடன் அமெரிக்கா பேச்சு நடத்தும் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் சிறப்புத் தூதர் ஸ்டீவ் விட்காஃப் தெரிவித்தார். அதிபர் டிரம்ப் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடன் நீண்ட நேரம் தொலைபேசியில் பேசினார், அதையடுத்து விட்காஃப் உக்ரேன் அதிகாரிகளை வரும் ஞாயிற்றுக்கிழமை ஜெட்டாவில் சந்திக்கப்போவதாகக் கூறினார். அமெரிக்கப் பேராளர்களை வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவும் தேசியப் […]