ஐரோப்பா

புட்டினின் ‘பவர் பிளேக்களுக்கு ஐரோப்பா பயப்படக்கூடாது – ஜெர்மன் தலைவர்!

  • May 9, 2023
  • 0 Comments

புட்டினின் ‘பவர் பிளே’களால் ஐரோப்பா பயப்படாது  என ஜேர்மன் தலைவர் Olaf Scholz, தெரிவித்துள்ளார். ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர், ஐரோப்பிய ஒன்றியத்தின் பாதுகாப்பு முயற்சிகளை மிக நெருக்கமாக ஒருங்கிணைக்க வே்ண்டும் எனத் தெரிவித்தார். வடகிழக்கில் புடின் 2200 கிலோமீற்றர் தொலைவில், தனது வீரர்கள், டாங்கிகள், மற்றும் ஏவுகணைகளை நிலைநிறுத்தியுள்ளார். ஆகவே பாதுகாப்பு தொழில்களை ஒருங்கிணைக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும். உக்ரைனுக்கான வெடிமருந்துகளை கூட்டாக வாங்க வேண்டும். […]

ஆசியா

முன்னாள் பிரதமர் இம்ரான்கான் கைது- பாகிஸ்தானில் பதற்ற நிலை

  • May 9, 2023
  • 0 Comments

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பிடிஐ தலைவருமான இம்ரான் கான் இஸ்லாமாபாத் உயர் நீதிமன்ற வளாகத்தில் கைது செய்யப்பட்டார். இம்ரான்கான் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையில் பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர் அவரை கைது செய்துள்ளனர். நீதிமன்றம் வெளியே வைத்து பொலிஸார் அவரை கைது செய்து விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். இம்ரான்கானை பொலிஸார் கைது செய்ய முயன்றபோது தடுக்க முயன்ற அவரது வழக்கறிஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. ராணுவம், உளவு அமைப்புகள் குறித்து அவதூறாக […]

ஐரோப்பா

ஜெர்மனியில், வெடி வைத்து தகர்க்கப்பட்ட பாலம்!

  • May 9, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் மோட்டார் பாதை பாலம் ஒன்று வெடி வைத்து  தகர்க்கப்பட்ட வீடியோ வைரலாகி வருகிறது. கடந்த 7ம் திகதி  அன்று ஜெர்மனியின் லுடென்ஷெய்டில் உள்ள 450 மீட்டர் நீளமுள்ள ரஹ்மேட் பள்ளத்தாக்கு பாலம் சில நொடிகளில் இடிந்து விழுந்தது. 1965 மற்றும் 1968 க்கு இடையில் கட்டப்பட்ட பாலத்தை தகர்ப்பதற்கு சுமார் 150 கிலோ வெடிபொருட்கள் தேவைப்பட்டன. இதைதவிர  அண்டை கட்டிடங்களை பாதுகாக்க ஒரு தடையை உருவாக்க 50 அடுக்கப்பட்ட கொள்கலன்கள் பயன்படுத்தப்பட்டன. இதற்கிடையில் தாக்கத்திலிருந்து சேதத்தைத் […]

ஐரோப்பா

வெற்றி விழாவில் அதிபர் புதின் சொன்ன அந்த ஒரு வார்த்தை., உற்று நோக்கும் உலக நாடுகள்

  • May 9, 2023
  • 0 Comments

ரஷ்யாவின் வெற்றி விழா அணிவகுப்பில் கலந்து கொண்ட ரஷ்ய அதிபர் புதின், உக்ரைன் போர் குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். மேலும், மேற்கத்திய நாடுகளையும் அவர் கடுமையாகச் சாடினார். இதுவரை இல்லாத அளவுக்கு ரஷ்யா மீது உலக நாடுகள் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. உண்மையில் இதை ரஷ்யா துளியும் எதிர்பார்க்கவில்லை. இதனால் ரஷ்யாவின் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் கோபமும் இப்போது அதிகரித்து வரும் நிலையில், நிலைமையைச் சமாளிக்க புதின் பல முயற்சிகளை எடுத்து […]

ஆசியா

பாகிஸ்தானில் விபத்தில் சிக்கிய வேன் : இருவர் உயிரிழப்பு!

  • May 9, 2023
  • 0 Comments

பாகிஸ்தானின் கைபர் பக்துங்வா மாகாணம் ஸ்வாட் பகுதியில் வேன் ஒன்று விபத்துகுள்ளானதில் அதில் பயணித்த 2 பேர் உயிரிழந்துள்ளதுடன், ஏழு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கபால் என்ற இடத்துக்கு அருகே வேன் சென்றபோது திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து  விபத்துக்குள்ளாகியது. இந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 7 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மீட்பு படையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி […]

ஐரோப்பா

மீன் விந்துவால் தயாரிக்கப்படும் புதிய வகை உணவு!

  • May 9, 2023
  • 0 Comments

ஸ்பெயினில் உள்ள உணவகம் ஒன்றில் மீனின் விந்துவால் செய்யப்பட்ட உணவு ஒன்று பரிமாறப்படுகிறது. இது கிரீமியாக இருப்பதாக மக்கள் விரும்பி உண்கிறார்கள். டேபிஸ் முனோஸ் என்ற சமையல் கலைஞரே இந்த புதுவிதமான உணவை தயாரித்துள்ளார்.இவர் டைவர் எக்ஸ் ஓ எனும் உணவகத்தின் உரிமையாளர் ஆவார். மீனிலிருந்து சிறு பைகளில் விந்து எடுக்கப்படுகிறது. அவை வெள்ளை அல்லது வெளிர் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த திரவத்தை உணவில் சேர்க்கிறார்கள், அல்லது உணவு சமைத்த பிறகு அதில் கலக்கப்படும். இந்த […]

வட அமெரிக்கா

சிறையிலிருந்து தப்பிய இரு கைதிகள் – கனேடிய பொலிஸார் விடுத்துள்ள கோரிக்கை

  • May 9, 2023
  • 0 Comments

கனடா சிறைச்சாலையொன்றிலிருந்து இரு கைதிகள் தப்பியோடியுள்ளனர். மானிடோபாவின் பாஸ் என்றழைக்கப்படும் சிறைச்சாலையிலிருந்து இக் கைதிகள் தப்பிச் சென்றுள்ளனர். தப்பிச் சென்ற இருவரும் குற்றப் பின்னணி உடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.சிறைச்சாலையிலிருந்து மூன்று பேர் தப்பிச் சென்றதாகவும் அதில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. பாஸ் மற்றும் ப்ளோன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.இந்தப் பகுதிகளில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏதேனும் சந்கேதத்திற்கு இடமான விடயத்தை அவதானித்தால் அதனை உடனடியாக பொலிஸாருக்க அறிவிக்குமாறு […]

ஆசியா

தைவானில் பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்துமாறு சீனா எச்சரிக்கை!

  • May 9, 2023
  • 0 Comments

தைவானில் பிரிவினைவாத சக்திகளுக்கு ஆதரவளிப்பதை நிறுத்துமாறு சீனா வெளியுறவு அமைச்சர் குயின் கேங் தெரிவித்துள்ளார். சீன வெளியுறவு மந்திரி குயின் கேங் அமெரிக்க தூதர் நிக்கோலஸ் பர்ன்சை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்போதே அவர் மேற்படி வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து தெரிவித்த அவர்,  சீனாவின் பாதுகாப்பு, இறையாண்மை போன்றவற்றின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். தைவானை தங்களது நாட்டின் ஒருங்கிணைந்த பகுதி என சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இதற்கிடையே தைவானுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியது. அதன் […]

இந்தியா செய்தி

பாஜக ஆட்சி வேதனை ஆட்சியாகவே நடைபெற்றன

  • May 9, 2023
  • 0 Comments

ஒன்பதுக்கு ஆண்டு கால பாஜக ஆட்சி தமிழக மக்களுக்கு வேதனை அளிக்கக்கூடிய ஆட்சியாகவே நடைபெற்றன உத்திரமேரூர் எம் எல் ஏ பேச்சு. திமுக இரண்டு ஆண்டு ஆட்சி கால சாதனை விளக்க பொது கூட்டம் மாவட்ட செயலாளர் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் க.சுந்தர் தலைமையில் ஈஞ்சம்பாக்கம் ஊராட்சியில் நடைபெற்றன. காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம் ஊராட்சியில் திமுக இரண்டு ஆண்டு ஆட்சி கால சாதனை விளக்க பொதுக்கூட்டம். திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற […]

ஆப்பிரிக்கா

சூடானில் உள்நாட்டு போர் : அமைதி பேச்சுவார்த்தை தோல்வி!

  • May 9, 2023
  • 0 Comments

ஆப்பிரிக்க நாடான சூடானில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் ராணுவம்-துணை ராணுவம் இடையே உள்நாட்டு போர் மூண்டுள்ளது. இதில் 500 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  ஆயிரக்கணக்கானோர் காயம் அடைந்துள்ளனர். சூடானில் தவித்த வெளிநாட்டினரை மீட்கும் நடவடிக்கைக்காக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. ஆனாலும் சண்டை தொடர்ந்தபடி இருந்தது. சண்டையை நிறுத்தி விடு இருதரப்பினரும் பேச்சு வார்த்தையில் ஈடுபட வேண்டும் என்று ஐ.நா. சபை மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தின.  இதற்கிடையே இரு ராணுவ தளபதிகளும் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் […]

You cannot copy content of this page

Skip to content