ஆசியா செய்தி

வன்முறை அதிகரிப்பால் சமூக ஊடக தளங்களை முடக்கிய பாகிஸ்தான்

  • May 9, 2023
  • 0 Comments

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டதையடுத்து நாட்டில் வன்முறைகள் அதிகரித்து வரும் நிலையில், ட்விட்டர், பேஸ்புக் மற்றும் பிற சமூக ஊடக தளங்களுக்கான அணுகலை பாகிஸ்தான் அதிகாரிகள் கட்டுப்படுத்தியுள்ளனர். “கூடுதலாக, சில பிராந்தியங்களில் மொத்த இணைய முடக்கம் காணப்பட்டது” என்று உலகளாவிய இணைய கண்காணிப்பாளரான NetBlocks தெரிவித்துள்ளது.. பாக்கிஸ்தானின் தொலைத்தொடர்பு ஆணையத்தின் அதிகாரிகள் இங்கிலாந்தை தளமாகக் கொண்ட உரிமைக் குழுவிடம், கட்டுப்பாட்டாளர்கள் சமூக ஊடகங்களைத் தடுத்ததாகவும், இஸ்லாமாபாத் மற்றும் பிற நகரங்களில் இணைய சேவை […]

இலங்கை செய்தி

நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு ஜூலை 1 முதல் வழங்கப்படும்

  • May 9, 2023
  • 0 Comments

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய முன்னெடுக்கப்படும் ´அஸ்வெசும´ (ஆறுதல்) நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு வழங்கும் பணிகள் ஜூலை 01 முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அதிகாரங்களுக்கமைய இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி இடைநிலை, பாதிக்கப்படக்கூடிய, வறிய மற்றும் மிகவும் வறுமையான குடும்பங்களுக்கு 04 பிரிவுகளின் கீழ் கொடுப்பனவுகள் வழங்கப்பட உள்ளதோடு, அங்கவீனமானவர்கள், முதியவர்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்கள் ஆகியோருக்கும் ´அஸ்வெசும´ […]

இலங்கை செய்தி

எக்ஸ்பிரஸ் பேர்ல்’ கப்பல் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம் நாளை

  • May 9, 2023
  • 0 Comments

எதிர்வரும் வியாழக்கிழமை (11) விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த இலங்கை மத்திய வங்கி சட்டமூலத்தின் இரண்டாவது மதிப்பீட்டுக்குப் பதிலாக ‘எக்ஸ்பிரஸ் பேர்ல்’ கப்பல் விபத்து தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை இரண்டாவது தினத்திலும் முன்னெடுப்பதற்கு இன்றையதினம் (09) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகப் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க தெரிவித்தார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (09) நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவிலேயே இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது. இதற்கமைய […]

இலங்கை செய்தி

இம்மாத இறுதிக்குள் முட்டை விலை மேலும் குறையும்

  • May 9, 2023
  • 0 Comments

முட்டைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலையை விட முட்டைகளை குறைந்த விலையில் கொள்வனவு செய்ய முடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர்.எம்..சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இதன்படி, அதிக விலை கொடுத்து முட்டைகளை வாங்க வேண்டாம் என நுகர்வோரிடம் கோரிக்கை விடுக்கப்படுவதாக அவர் கூறினார். ஒரு வெள்ளை முட்டை மொத்த விலையில் 40 ரூபாய்க்கும், பழுப்பு முட்டை 41 ரூபாய்க்கும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், பேக்கரிகளில் இருந்து 44-45 ரூபாய்க்கு முட்டை கொள்முதல் செய்யப்படுவதாகவும் […]

ஆசியா இலங்கை

பாடசாலை கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து குதித்த மாணவி

  • May 9, 2023
  • 0 Comments

கண்டியில் உள்ள பெண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயது மாணவி ஒருவர் பாடசாலை கட்டிடத்தின் முதல் மாடியில் இருந்து குதித்துள்ளார். காயமடைந்த மாணவி கண்டி தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த மாணவி நேற்று (08) காலை 11.30 மணியளவில் பாடசாலையில் அமைந்துள்ள கட்டிடமொன்றில் சுமார் 15 அடி உயரத்தில் இருந்து தரையில் குதித்துள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாணவன் பாடசாலையின் மாணவர் தலைவராகவும் கடமையாற்றி வருவதுடன்இ கடுகஸ்தோட்டை களுகமுவ […]

இலங்கை செய்தி

கடன் வழங்குநர்களுடன் விசேட சந்திப்பு பற்றிய அப்டேட்

  • May 9, 2023
  • 0 Comments

இலங்கையில் கடன் மறுசீரமைப்பு செயல்முறையை ஒருங்கிணைக்கும் வகையில் கடன் வழங்கும் நாடுகளின் முதலாவது கூட்டம் இன்று (09) ஆன்லைனில் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்காவின் வாஷிங்டனில் ஜப்பான்இ இந்தியா மற்றும் பிரான்ஸ் இணைந்து புதிய கட்டமைப்பின் கீழ் உள்ளது. எவ்வாறாயினும்இ நாட்டின் மிகப்பெரிய இருதரப்பு கடன் வழங்கும் நாடான சீனாஇ இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்பது குறித்து நிச்சயமற்ற நிலையில் இருப்பதாக ஜப்பான் தெரிவித்திருந்தது. இவ்வாறானதொரு பின்னணியில் இன்றைய கலந்துரையாடலில் பார்வையாளராக இணைந்து கொள்ள சீனா தீர்மானித்துள்ளதாக […]

இந்தியா விளையாட்டு

பெங்களூரு அணியை பந்தாடிய மும்பை

  • May 9, 2023
  • 0 Comments

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 68 ரன்களும், டூ பிளசிஸ் 41 பந்துகளில் 65 ரன்களும் விளாசினர். 3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 120 ரன்கள் […]

இலங்கை செய்தி

எப்படியும் காப்பாற்றுவேன் – மஹிந்த கஹதகம

  • May 9, 2023
  • 0 Comments

போராட்டத்தின் போது தாக்குதலுக்கு உள்ளான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹதகம இன்று (09) பேரா ஏரிக்கு அருகில் இருந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். போராட்டத்தின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகளை பார்வையிட வந்ததாக அவர் தெரிவித்தார். அங்கு முன்னாள் மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹதகம இது தொடர்பில் கருத்து வெளியிட்டார்.  

ஆசியா செய்தி

தேர்தலுக்கு முன் பொது ஊழியர்களின் சம்பளத்தை 45% உயர்த்தும் துருக்கி

  • May 9, 2023
  • 0 Comments

துருக்கிய அரசாங்கம் தனது தொழிலாளர்களின் சம்பளத்தை 45 சதவிகிதம் உயர்த்துகிறது என்று ஜனாதிபதி Recep Tayyip Erdogan கூறினார், எர்டோகன் அங்காராவில் நடைபெற்ற கூட்டத்தில் ஊதிய உயர்வை அறிவித்தார். அதில் பொதுத் தொழிலாளர்களின் பொருளாதார மற்றும் சமூக உரிமைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. அரசு ஊழியர்களின் ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தை உயர்த்துவதில் தொடர்ந்து பணியாற்றுவேன் என்று எர்டோகன் கூறினார்.

செய்தி விளையாட்டு

பங்களாதேஷ் மகளிர் அணி வெற்றி

  • May 9, 2023
  • 0 Comments

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பங்களாதேஷ் மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிரான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை மகளிர் அணி ஆறு விக்கெட்டுகளால் தோல்வியடைந்தது. கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி இருபது ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 145 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் கிரிக்கட் அணி 19 ஓவர்கள் 5 பந்துகளில் 4 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது. இதேவேளை, இலங்கையுடனான […]

You cannot copy content of this page

Skip to content