உலகம்

இந்த ஆண்டின் வெப்பமான மாதமாக ஜுலை மாதம் தெரிவு!

  • July 28, 2023
  • 0 Comments

இந்த ஆண்டு ஜூலை மாதம் உலகிலேயே அதிக வெப்பமான மாதமாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் வெப்ப அலைகளின் தாக்கம் காரணமாக, வெப்பநிலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. கடந்த 120,000 ஆண்டுகளில் ஜூலை மாதம் மிகவும் வெப்பமான மாதமாக இருக்கலாம் என்று சில விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுகின்றனர். அதேபோல் கடந்த 2019-ம் ஆண்டுதான் அதிக வெப்பமான ஆண்டாக இருந்தது. கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவையின்படி, உலகின் மிக வெப்பமான நாளாக ஜூலை 6 என்று […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் 2 இலகுரக விமானங்கள் மோதியதில் 2 பேர் பரிதாபமாக பலி

  • July 28, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் வடக்கு பிரிஸ்பேனில் உள்ள விமான ஓடுதளத்தில் இரண்டு இலகுரக விமானங்கள் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். விமானம் ஒன்றின் விமானி மற்றும் அதில் பயணித்த 60 வயது பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக குயின்ஸ்லாந்து ஆம்புலன்ஸ் சேவை மற்றும் மாநில பொலிசார் உறுதிப்படுத்தியுள்ளனர். விமானம் பலத்த சேதம் அடைந்திருப்பதை தொடர்புடைய காட்சிகள் காட்டுகின்றன. எனினும், மற்றைய விமானம் சேதமடையாததால், விமானி உயிர் தப்பினார். இரண்டு விமானங்களும் தனியாருக்குச் சொந்தமானவை என அடையாளம் காணப்பட்டுள்ளதாக குயின்ஸ்லாந்து காவல்துறை தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு

சிரிய தலைநகரில் குண்டுத் தாக்குதல் : அறுவர் உயிரிழப்பு!

  • July 28, 2023
  • 0 Comments

சிரியாவின் தலைநரில் இடம்பெற்ற வெடிகுண்டு தாக்குதலில் ஆறுபேர் உயிரிழந்துள்ளதுடன், ஏராளமானோர் காயமடைந்தனர் என அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறித்த தாக்குதல் நேற்று (27.07)  இடம்பெற்றுள்ளது. சிரியாவில் அதிகம் பார்வையிடப்பட்ட ஷியா புனித யாத்திரை தளமான சயீதா ஜெய்னாப் கல்லறைக்கு அருகே வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஏழாம் நூற்றாண்டில் நடந்த போரில் முகம்மது நபியின் பேரனான இமாம் ஹுசைன் இறந்ததை ஷியாக்கள் நினைவுகூரும் போது, டமாஸ்கஸுக்கு தெற்கே கொடிய குண்டுவெடிப்பு நடத்ததாக விவரிக்கப்பட்டுள்ளது. “அடையாளம் தெரியாத நபர்களால் […]

ஆசியா

சீனாவுக்கு காத்திருக்கும் புயல் ஆபத்து – எதிர்கொள்ள தயாராகும் மீட்பு குழுவினர்

  • July 28, 2023
  • 0 Comments

சீனாவை தாக்கவுள்ள Doksuri என்ற மிகவும் வலுவான புயலை எதிர்கொள்ள மீட்பு குழுவினர் தயாராகியுள்ளது. இந்த புயல் மிகவும் கடுமையாக இருக்கும் என்று, அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், புயல்காற்று அசுர வேகத்தில் நேரடியாக வீசும் என்பதால் நாட்டின் எச்சரிக்கை நிலையைச் சீனா உயர்த்தியுள்ளது. இந்தப் புயலை எதிர்கொள்ள தாய்வான் மற்றும் ஹொங்கொங் ஆகிய நாடுகளும் தயாராகியுள்ளன. முன்னதாக, பிலிப்பீன்ஸைக் கடந்துசென்ற புயல் அங்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியதுடன், மணிக்கு 175 கிலோமீட்டர் வேகத்தில் […]

இலங்கை

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என அறிவிப்பு!

  • July 28, 2023
  • 0 Comments

அடுத்த வருடம் கண்டிப்பாக ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர தெரிவித்தார். ஸ்திரமான நாட்டிற்கு ஒரு வழி என்ற தொனிப்பொருளில் ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது மேலும் தெரிவித்த அவர், எல்லை நிர்ணய குழு அறிக்கை தொடர்பான பரிந்துரைகளை அமுல்படுத்துவது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக […]

அறிவியல் & தொழில்நுட்பம்

புதிதாக அறிமுகமாகும் ஸ்மார்ட் ரிங் – மோதிரம் வடிவில் தொழில்நுட்பம்

  • July 28, 2023
  • 0 Comments

புதிதாக ஸ்மார்ட் ரிங் என்ற சாதனம் சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. இனி மக்கள் அனைவருமே ஸ்மார்ட் வாட்ச்சிலிருந்து ஸ்மார்ட் ரிங்குக்கு மாறப் போகிறார்கள். சமீப காலமாகவே சாம்சங், போட் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் அவர்களின் ஸ்மார்ட் ரிங் சாதனங்களின் மாடல்களை அறிமுகம் செய்து வருகின்றனர். இனி ஸ்மார்ட்வாட்சுக்கு பதில் ஸ்மார்ட் ரிங்தான் மக்கள் அதிகம் பயன்படுத்துவார்கள் என சொல்லப்படுகிறது. சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் இது ஒரு ஹெல்த் ட்ராக்கிங் மற்றும் பிட்னஸ் சாதனமாகும். ஏற்கனவே தங்களின் உடல் […]

இலங்கை

நலன்புரி கொடுப்பனவை பெற்றுக்கொள்ள வங்கிக் கணக்கு அவசியம்!

  • July 28, 2023
  • 0 Comments

சமூக நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கான வங்கிக் கணக்குகளை இந்த வார இறுதிக்குள் ஆரம்பிப்பதற்கும், கொடுப்பனவுகளை வழங்குவதற்கும்  உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் பிரதமர் தினேஷ் குணவர்தன அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார். மஹரகம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தலைமையில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறினார். இதன்போது  குடியேற்றம் தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் பிரதேசத்தை பாதிக்கும் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் சமூக நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக வங்கிக் […]

ஆசியா

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

  • July 28, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களில் மேம்பட்ட பாதுகாப்புத் தரநிலைகள் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அழைப்பின் இரண்டாவது அறிக்கை புதன்கிழமை காலை வெளியானது. இரண்டு நாட்களுக்கு முன்னர் கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில், பாதுகாப்பு கோரி மற்றொரு குழு கையொப்பமிட்ட வேறொரு அறிக்கை தற்போது வெளியிடப்பட்டது. “Lorry rides, Save Workers Lives – Ban Them Immediately” என்ற தலைப்பிலான அந்த கடிதம், சமூக அமைப்புகள் மற்றும் மனித உரிமைக் குழுக்கள் உள்ளிட்ட 53 […]

இலங்கை

2022 (T20) கிரிக்கெட் போட்டியில் இடம்பெற்ற முறைக்கேடுகள் அம்பலமாகின!

  • July 28, 2023
  • 0 Comments

2022 T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை கிரிகெட் சபை முறைக்கேடு செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், அது குறித்து கணக்காய்வு அறிக்கையின் வரைவு வெளியாகியுள்ளது. கணக்காய்வு அறிக்கையின்படி இடம்பெற்ற முறைக்கேடுகள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன. 1. விளையாட்டு அமைச்சின் அனுமதியின்றி ஊடகவியலாளர்கள் உட்பட ஆறு பேருக்கு உலகக் கிண்ணப் போட்டிகளைக் காண அனுசரணை வழங்குதல். 2. ஊடகவியலாளர்களின் விமானப் பயணச்சீட்டு உட்பட அனைத்துச் செலவுகளுக்காகவும் 55 இலட்சம் ரூபாவுக்கு மேல் எவ்வித நிறுவன உடன்படிக்கையும்  இன்றிச் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் 18 வயதை எட்டியவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • July 28, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் பாரம்பரிய கலைகளை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், 18 வயதை எட்டும் அனைவருக்கும் கலாசார பாஸ் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் இளைஞர்கள் நேரடியாக கலை சார்ந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை ஊக்குவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் அழிவின் விளிம்பில் உள்ள கலைகளுக்கு ஆதரவளிக்கும் வகையில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது 200 யூரோ மதிப்பிலான கலாசார பாஸ், 18 வயதை எட்டிய 7.5 லட்சம் பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, […]