இலங்கை

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் : இழப்பீடு கோரி வழக்கு தொடர்ந்தது ஐக்கிய மக்கள் சக்தி!

  • May 11, 2023
  • 0 Comments

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கான இழப்பீட்டை கோரி ஐக்கிய மக்கள் சக்தி வழக்கு தாக்கல் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பான இரண்டாம் நாள் விவகாதம் நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற நிலையில் இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர்,  ‘எக்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் ஐக்கிய மக்கள் […]

பொழுதுபோக்கு

பல எதிர்ப்புகளையும் தாண்டி 37-க்கும் மேற்பட்ட நாடுகளில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம்

  • May 11, 2023
  • 0 Comments

விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் அடா சர்மா, சித்தி இட்னானி உட்பட பலர் நடித்துள்ள படம், ‘தி கேரளா ஸ்டோரி’. கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் கேரளாவை சேர்ந்த 32 ஆயிரம் இந்து இளம் பெண்களை மூளைச் சலவை செய்து மதம் மாற்றி ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தில் சேர்த்ததாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு சில அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அதுமட்டுமல்லாமல் தமிழகத்தில் மால்களில் உள்ள திரையரங்குகளில் மட்டும் […]

இலங்கை

பொதுமக்களின் வைப்புத்தொகை பாதுகாக்கப்படும் – நந்தலால் வீரசிங்க

  • May 11, 2023
  • 0 Comments

கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டாலும் பொதுமக்களின் வைப்புத்தொகை மற்றும் வங்கி முறைமை பாதுகாக்கப்படும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உறுதியளித்துள்ளார். பொருளாதாரத்தின் நிலை  சவால்கள் மற்றும் முன்னோக்கு மத்திய வங்கியின் 2022 வருடாந்த அறிக்கை என்ற தலைப்பில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பல்வேறு ஊகங்கள் இருந்தாலும்,  நிதி அமைப்பு ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த மத்திய வங்கி எப்போதும் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் எதிர்காலத்திலும் அவ்வாறே செயற்படும் என்றும் ஆளுநர் கூறியுள்ளார். ஒருவித உள்நாட்டுக் […]

இலங்கை

களுத்துறை மாணவி மரணத்தில் திடீர் திருப்பம்

  • May 11, 2023
  • 0 Comments

களுத்துறையில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மூன்றாம் மாடியில் இருந்து நிர்வாணமாக கீழே விழுந்து மரணமடைந்த 16 வயதான மாணவின் மரணம் தொடர்பில் பல கோணங்களில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. வயது குறைந்த பெண்பிள்ளையின் அடையாளத்தை உறுதிப்படுத்தாமல் பணத்தை பெற்றுக்கொண்டு அறையை ஒதுக்கிக் கொடுத்தமை தொடர்பில் அந்த விடுதியின் உரிமையாளரின் மனைவி, இன்று (11) கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த விவகாரம் தொடர்பில் இதுவரையிலும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்தமாணவி மாடியிலிருந்து விழுந்து கடந்த 6 ஆம் திகதியன்று மரணமடைந்தார். சம்பவத்தை விசாரணைக்கு […]

ஐரோப்பா

பின்லாந்தில் நடை பாலம் இடிந்து விழுந்ததில் 27 பேர் காயம்!

  • May 11, 2023
  • 0 Comments

பின்லாந்தில் நடைபாலம் ஒன்று இடிந்ததால் சுமார் 27 பேர் காயமடைந்துள்ளனர். தலைநகர் ஹெல்சிங்கிக்கு அருகிலுள்ள எஸ்பூ நகரில் இன்று வியாழக்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் சிறார்கள் என உள்ளூர் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். நிர்மாணப் பகுதியொன்றில் அமைக்கப்பட்டிருந்த இந்த தற்காலிக நடைபாலம் ஈடிந்ததால்இ அதில் நடந்து கொண்டிருந்த மக்கள் பல மீற்றர் பள்ள்திலுள்ள வீதியில் வீழ்ந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வட அமெரிக்கா

டேட்டிங் செய்ய AI குளோனிங் கவர்ச்சி மொடல்… நிமிடத்திற்கு 1டொலர்., குவிந்த ஆண்கள்!

  • May 11, 2023
  • 0 Comments

செயற்கை நுண்ணறிவு (AI) என்பது தொழில்நுட்பத்தில் மிகவும் பிரபலமான வார்த்தைகளில் ஒன்றாகும். செயற்கை நுண்ணறிவு என்பது கணினி, கணினியால் கட்டுப்படுத்தப்படும் ரோபோ அல்லது மென்பொருளை மனித மனதைப் போலவே புத்திசாலித்தனமாக சிந்திக்க வைக்கும் செயல்முறையாகும். மனித மூளையின் வடிவங்களைப் படிப்பதன் மூலமும், அறிவாற்றல் செயல்முறையை பகுப்பாய்வு செய்வதன் மூலமும் இது நிறைவேற்றப்படுகிறது. இந்த ஆய்வுகளின் விளைவாக அறிவார்ந்த மென்பொருள் மற்றும் அமைப்புகளை உருவாக்குகிறது. இந்த தொழில்நுட்பத்தால் ஏற்கனவே ஏற்பட்ட தீங்குகளையும், இனி வர இருக்கும் ஆபத்துக்களையும் நினைவில் […]

பொழுதுபோக்கு

கேலியும், கிண்டலுக்கும் உள்ளான “லால் சலாம்” போஸ்டர்!! தலைவர் கூட கைகோர்த்த செம கூட்டணி

  • May 11, 2023
  • 0 Comments

ஐஸ்வர்யா இயக்கத்தில் லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் மும்மரமாக போய்க் கொண்டிருக்கிறது. இப்படத்தில் விஷ்ணு விஷால், முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். மேலும் இப்படத்தை லைக்கா புரொடக்ஷன் தயாரிக்கிறது. அத்துடன் இப்படம் முழுக்க முழுக்க கிரிக்கெட் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் லால் சலாம் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த போஸ்டர் வெளியானதில் இருந்து தற்போது வரை அதிக அளவில் கேலியும், […]

இலங்கை

மியன்மாருக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடிமைகளாக்கப்பட்ட இலங்கை இளைஞர்கள்!

  • May 11, 2023
  • 0 Comments

தாய்லாந்தில் வேலை வாய்ப்பை வழங்குவதாகக் கூறி மியன்மாருக்கு அழைத்துச் செல்லப்பட்டு,  சீன நிறுவனமொன்றில் அடிமைகளாகப் பயன்படுத்தப்பட்ட மேலும் எட்டு இலங்கை இளைஞர்கள் தொடர்பில் தெரிய வந்துள்ளது. இந்த எண்மரில் மாரடைப்புக்கு உள்ளான அம்பாந்தோட்டையைச் சேர்ந்த இளைஞன் ஒருவரும் கடந்த 8ஆம் திகதி அங்குள்ள இருட்டு அறையில் அடைக்கப்பட்டிருந்தமையும் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த இளைஞருக்கு அவசர இதய அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தெரிய வந்துள்ளது. இலங்கையைச் சேர்ந்த இவர்களை மீட்பதற்கு உடனடியாக தலையிடுமாறு மியான்மரில் […]

ஐரோப்பா

ரஷ்யாவின் எண்ணெய் சேமிப்பு கிடங்கின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷ்யா!

  • May 11, 2023
  • 0 Comments

ரஷ்ய எல்லைப் பகுதியான பிரையன்ஸ்கில் உள்ள எண்ணெய் சேமிப்புக் கிடங்கு மீது உக்ரேனிய ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியதாக உள்ளூர் ஆளுநர் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் ரோஸ் நேபிட் எண்ணெய் நிறுவனத்திற்குச் சொந்தமான கிளின்ட்ஸி நகருக்கு அருகில் உள்ள தொழிற்சாலை மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அதிஸ்டவசமாக இந்த தாக்குதலில் உயிர் சேதம் ஏற்படவில்லை எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் ரஷ்ய மண்ணில் ஏராளமான ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக மாஸ்கோ சமீபத்தில் கூறியது, இதில் கிரெம்ளினை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக […]

ஐரோப்பா

உக்ரேனிய அகதிகளுக்கு உதவ 1 பில்லியன் வழங்கும் ஜப்பான்!

  • May 11, 2023
  • 0 Comments

உக்ரைனைச் சுற்றியுள்ள நாடுகளுக்கு அகதிகளை ஏற்றுக்கொள்வதற்காக  ஒரு பில்லியன் வழங்குவதாக ஜப்பான் அறிவித்துள்ளது. இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள நிதியமைச்சர் Shunichi Suzuki இந்த உதவித் தொகை சர்வதேச ஒத்துழைப்புக்கான ஜப்பான் வங்கி மூலம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். ஜி7  நாடுகளின் நிதித் தலைவர்களின் மூன்று நாள் கூட்டத்திற்குத் தலைமை தாங்குவதற்காக, டோக்கியோவின் வடக்கே உள்ள நிகாட்டாவை வந்தடைந்தபோது  சுஸுகி இந்த அறிவிப்பை வெளியிட்டார். ரஷ்யா தனது படையெடுப்பிற்குப் பிறகு விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளைத் தவிர்ப்பதைத் தடுப்பது […]

You cannot copy content of this page

Skip to content