வடகிழக்கினை இந்தியாவின் ஒரு பகுதியாக இணைத்துக்கொள்ளுமாறு நாங்கள் கோரவேண்டும்! செல்வம் அடைக்கலநாதன்
இந்த நாட்டில் தமிழர்களுக்கான தீர்வு இல்லையென்றால் வடகிழக்கினை இந்தியாவின் ஒரு பகுதியாக இணைத்துக்கொள்ளும் சந்தர்ப்பத்தினை நாங்கள் கோரவேண்டும். அதன் மூலமே தமிழர்களின் இறையான்மையினை பாதுகாக்காமுடியும் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். யூலைக் கலவரத்தின் ஒரு அங்கமாக இடம்பெற்ற வெலிக்கடை சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கதின் முன்னாள் தலைவர்களான குட்டிமணி, தங்கதுரை உட்பட 53 போராளிகளின் நினைவான தமிழ்த் தேசிய வீரர்கள் தினத்தின் 40வது […]