ஐரோப்பா

மாணவர்களின் பரீட்சை விடைத்தாள்களை தீயிட்டுக் கொளுத்திய ஆசிரியர்!

  • May 12, 2023
  • 0 Comments

பிரான்சில் மாணவர்களுடைய பரீட்சை விடைத்தாள்களை தீயிட்டுக் கொளுத்திய ஆசிரியர் நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தப்பட இருக்கிறார். பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராகப் பணியாற்றுபவர் விக்டர் (29). அவர், தன் வகுப்பில் பயிலும் 63 மாணவர்களுடைய ஆங்கில விடைத்தாள்களை தீயிட்டுக் கொளுத்தியுள்ளார்.பிரான்சின் கல்வி அமைப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக விக்டர் இவ்வாறு செய்துள்ளார். விக்டர் நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தப்பட உள்ள நிலையில், அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 160,000 டொலர்கள் அபராதமும் விதிக்கப்படலாம் என பிரான்ஸ் அரசு சட்டத்தரணி அலுவலகமும், பள்ளிக்கல்வித்துறையும் […]

ஐரோப்பா

ரஷ்யாவிற்கு ஆயுதங்களை வழங்கியதா தென்னாப்பிரிக்கா?

  • May 12, 2023
  • 0 Comments

ரஷ்யாவிற்கு எந்த ஆயுதக் கப்பலையும் வழங்குவதற்கு  ஒப்புதல் அளிக்கவில்லை என்று தென்னாப்பிரிக்காவின்  தேசிய மரபு ஆயுதக் கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவர் தெரிவித்தர். பிரிட்டோரியாவின் அறிவிக்கப்பட்ட நடுநிலைமையை மீறும் வகையில், கடந்த ஆண்டு ரஷ்ய கப்பல் தென்னாப்பிரிக்காவின் ஆயுதங்களை எடுத்துச் சென்றதாக கூறப்பட்டுள்ள நிலையில், இந்த தகவல் வெளிவந்துள்ளது. இவ்வாறான விடயங்களால் தென்னாப்பிரிக்கா மேற்கத்தேய நாடுகளின் பொருளாதார தடைகளை எதிர்கொள்ள நேரிடும் என நாணய வர்த்தகர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ராமபோசாவின் அலுவலகம் வியாழனன்று தனது […]

பொழுதுபோக்கு

சாப்பாட்டால் வந்த வினை! திட்டித்தீர்க்கும் ரசிகர்கள்

  • May 12, 2023
  • 0 Comments

தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழிகளிலும் கலக்கி வருபவர் ராஷ்மிகா மந்தனா. தற்போது, அல்லு அர்ஜுனுடன் ‘புஷ்பா 2’, தமிழ், தெலுங்கில் உருவாகும் ‘ரெயின்போ’ ஆகிய படங்களில் நடித்து வரும் அவர், இந்தியில் ரன்பீர் கபூர் ஜோடியாக ‘அனிமல்’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்த அசைவ உணவு விளம்பரம், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சைவ உணவு மட்டுமே சாப்பிடுவதாக பல பேட்டிகளில் கூறிய அவர், அசைவ உணவுக்கு விளம்பரம் செய்துள்ளதை […]

செய்தி தமிழ்நாடு

பால்குடம் எடுக்க ஆர்வம் காட்டிய பெண்கள்

  • May 12, 2023
  • 0 Comments

அதிமுக பொது செயலாளர் பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு பால்குடம் எடுக்க ஆர்வம் காட்டிய பெண்கள். அதிக அளவில் பெண்கள் திரண்டதால் கூடுதலாக பால் குடங்களை உடனடியாக ஏற்பாடு செய்த அதிமுகவினர். அதிமுக பொது செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி பிறந்த நாளை முன்னிட்டு குன்றத்தூர் ஒன்றிய அதிமுக சார்பில் பால் குட ஊர்லம் நடைபெற்றது. குன்றத்தூர் கந்தழீஸ்வரர் கோவிலில் இருந்து பால் குட ஊர்வலம் நடைபெற்றது. முன்னாள் எம்எல்ஏக்கள் பழனி, சோமசுந்தரம், வாலாஜாபாத் கணேசன் […]

இலங்கை

மின் கட்டண உயர்வு : உலக வங்கியின் உதவியை கோரும் காஞ்சன!

  • May 12, 2023
  • 0 Comments

சமீபத்திய மின் கட்டண உயர்வின் விநியோக பாதிப்பின் மதிப்பீட்டை நடத்த உலக வங்கியின் உதவியை மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கோரியுள்ளார். இது குறித்து ருவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், சமீபத்திய மின் கட்டண கட்டமைப்பு, ஏழை மற்றும் நலிவடைந்த பிரிவினரிடம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து முழுமையான மதிப்பீட்டை நடத்த உலக வங்கியின் உதியை கோரியுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பான விளக்காட்சி இன்று நடைபெற்றதுடன், இது குறித்த உலகளாவிய நடைமுறையை உலக வங்கிக் குழு வழங்கியுள்ளது.

இலங்கை

உலகின் முதலாவது சர்வதேச சுற்றுச்சூழல் பல்கலைக்கழகத்தை இலங்கையில் அமைக்க ஜனாதிபதி உறுதி!

  • May 12, 2023
  • 0 Comments

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான உலகளாவிய முயற்சிக்கு ஆதரவளிக்கும் வகையில் உலகின் முதலாவது சர்வதேச சுற்றுச்சூழல் பல்கலைக்கழகம் இலங்கையில் நிறுவப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த  மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்ற  நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டார். காலநிலை மாற்றம் உலகிற்கு ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக இருந்தாலும், அதை ஆய்வு செய்வதற்கு மத்திய ஆய்வு மையம் இல்லை என்பதை ஒப்புக்கொண்ட ஜனாதிபதி, இந்த முயற்சியில் இலங்கையுடன் […]

இலங்கை

ஆசிரியையின் பெயரை எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்ட மாணவன்!

  • May 12, 2023
  • 0 Comments

வவுனியா  ஆச்சிபுரம் பகுதியில் ஆசிரியரின் பெயரை எழுதி விட்டு பாடசாலை மாணவன் ஒருவர் நேற்று (11) தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். கோவிற்குளம் பகுதியில் உள்ள கல்லூரியில் தரம் 10 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய பாடசாலை மாணவனே இவ்வாறு  தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். என் சாவிற்கு காரணம் தனது கல்லூரி ஆசிரியர் என எழுதி வைத்திருந்த கடிதமும் மாணவனின் வீட்டிலிருந்து பொலிஸாரினால் மீட்கப்பட்டது. குறித்த மாணவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக  வவுனியா மாவட்ட […]

இலங்கை

மீண்டும் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கும் எயார் சைனா!

  • May 12, 2023
  • 0 Comments

சீன விமான சேவை நிறுவனமான எயார் சைனா ஜூலை மாதம் முதல் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பிக்கும் என சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். அமைச்சர் வெளியிட்டுள்ள  தகவலின்படி ஏயார் சீனா ஆரம்பத்தில் வாரத்துக்கு மூன்று விமான சேவைகளை இயக்கும் என தெரிய வருகிறது.

இலங்கை

சீமெந்தின் விலை குறைவடைய வாய்ப்பு!

  • May 12, 2023
  • 0 Comments

அடுத்த வாரம் முதல் சீமெந்தின் விலை குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சீமெந்து மூடை ஒன்றின் விலை 2,750 ரூபாவாக உள்ளது. எவ்வாறாயினும் அடுத்த வாரம் ஒரு மூடை சீமெந்து விலையில் கணிசமான அளவு குறையும் என எதிர்பார்ப்பதாக சீமெந்து உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.  

செய்தி தமிழ்நாடு

திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி

  • May 12, 2023
  • 0 Comments

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா பனையப்பட்டி அருகே வீரணாம்பட்டியில் ஸ்ரீ கற்பக விநாயகர் ஸ்ரீ சூலப்பிடாரி அம்மன் சந்தனக்காப்பு சித்திரை திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கி வெகு விமர்சையாக  நடைபெற்றது. இந்தப் போட்டியில் 350 காளைகள் 60 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு. தமிழகத்திலேயே அதிகப்படியான வாடிவாசலை கொண்ட மாவட்டம் புதுக்கோட்டை மாவட்டம். இந்த மாவட்டத்தில்தான் அதிகப்படியான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதன் ஒரு பகுதியாக இன்று புதுக்கோட்டை மாவட்டம்  திருமயம் தாலுக்கா […]

You cannot copy content of this page

Skip to content