இலங்கையில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்து – 23 பேர் படுகாயம்
இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியில் மீன்னான பகுதியில் பேருந்தும் ஒன்றும் கொள்கலன் லொறி ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை நிகழ்ந்ததுடன், விபத்துக்குப் பிறகு கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்தில் காயமடைந்த சுமார் 23 பேர் எஹெலியகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை மோசமாக இல்லை என்பதுடன், விபத்து குறித்து எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.