ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட சுமார் 02 லட்சம் கார்கள் மீளக்கோரல்

  • August 3, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் விற்பனை செய்யப்பட்ட சுமார் 02 லட்சம் Mazda கார்கள் மீள அழைக்கப்பட்டுள்ளன. 2013 மற்றும் 2020 க்கு இடையில் தயாரிக்கப்பட்ட Mazda3 BM – BN / CX-3 DK மாடல்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன. கார்களின் பின்பக்க கமராக்களில் ஏற்படும் குறைபாட்டால் அதிக விபத்துகள் ஏற்படுவதுதான் இதற்கு முக்கியக் காரணமதகும். தொடர்புடைய மோடல்களின் காரை வைத்திருக்கும் எவரும் இலவச ஆய்வுக்கு Mazda ஆஸ்திரேலியா பிரதிநிதிகளைத் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அறிவியல் & தொழில்நுட்பம்

பெண்களுக்கு ஆபத்தாக மாறும் – AI தொழில்நுட்பம்

  • August 3, 2023
  • 0 Comments

தொழில் நுட்பமான செயற்கை நுண்ணறிவு தற்போது மக்களை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கிக் கொண்டிருக்கிறது. சமீபத்தில் மெக்கின்சி என்ற நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றின் அறிக்கையின்படி, 2030 வரை தொழிலாளர்களின் விருப்பங்கள் என்ன என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. அதில் தங்களின் பணி சார்ந்து, ஆண்களை விட பெண்களே அதிகம் கவலைப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த காலத்தில் ஆண்களை விட பெண்களே அதிகமாக புதிய வேலைகளுக்கு மாறி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறைந்த ஊதியம் கொண்ட வேலைகளில் பெண்களை சேர்த்துக் கொள்வதாலேயே […]

உலகம் முக்கிய செய்திகள்

டைட்டன் நிறுவனத்தின் அடுத்த திட்டம் – வெள்ளி கிரகத்திற்கு 1000 பேரை அனுப்ப நடவடிக்கை

  • August 3, 2023
  • 0 Comments

2050 ஆம் ஆண்டுக்குள் முதற்கட்டமாக ஆயிரம் பேரை வெள்ளி கிரகத்திற்கு அனுப்பி வைக்க திட்டமிட்டுள்ளதாகவும் டைட்டன் நிறுவனம் தெரிவித்துளடளது. வெள்ளி கிரகத்தில் மனிதர்களின் குடியேற்றம் அமைக்கப்படும் என்பதனால் இந்த திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க்பபட்டுள்ளது. ஏற்கனவே டைட்டானிக் கப்பலை பார்வையிட சென்ற டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் வெடித்து சிதறியதில் ஐந்து பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. இது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்து நடந்து ஒரு மாதம் மட்டுமே ஆகியுள்ள நிலையில், டைட்டன் நிறுவனம் […]

ஆசியா

சீனாவில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொட்டித் தீர்த்த மழை – வெள்ளத்தில் மூழ்கிய நகரங்கள்

  • August 3, 2023
  • 0 Comments

சீன தலைநகர் பெய்ஜிங்கில் கடும் மழை அச்சுறுத்தும் நிலையில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை கொட்டித் தீர்த்தாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளார். கடந்த 1891ஆம் ஆண்டுக்குப் பிறகு பெய்ஜிங் நகரமே வெள்ளத்தால் மூழ்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் 29ஆம் திகதி முதல் ஒகஸ்ட் முதலாம் வரை 29 அங்குலத்திற்கு மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டோக்சுரி புயல் காரணமாக இந்த மழை பெய்துள்ளதாகவும் மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவு […]

ஐரோப்பா

பிரான்ஸ் தலைநகரில் பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி – கணவனின் மோசமான செயல்

  • August 3, 2023
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பெண் ஒருவர் தனது கணவரால் காத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். பாரிஸ் 10 ஆம் வட்டாரத்தில் உள்ள வீடொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். பல வெட்டுக்காயங்களுக்கு உள்ளான அவர் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். காலை 8 மணி அளவில் Gare de l’Est நிலையத்துக்கு அருகே உள்ள பொலிஸ் நிலையத்துக்கு வருகை தந்த 51 வயதுடைய ஒருவர், தமது மனைவியை கத்தியால் குத்தி கொன்றதாக […]

ஆசியா

சிங்கப்பூரில் விளையாடிக்கொண்டிருந்த தமிழ் இளைஞன் திடீர் மரணம் – அதிர்ச்சியில் குடும்பத்தினர்

  • August 3, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் கால்பந்து விளையாடிக்கொண்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 33 வயதான மணிமாறன் அசோக்குமார் என்பவருக்கு ஏற்பட்ட திடீர் மரணம் அனைவருக்கும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவன் விளையாட்டு மைதானத்தில் 15 பேருடன் அவர் விளையாடியதாகவும், அப்போது நிலை தவறி மயக்கநிலைக்கு சென்ற அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஜூலை 29 ஆம் திகதி நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவரின் இந்த திடீர் மரணத்துக்கு மாரடைப்பு தான் காரணம் என தெரியவந்துள்ளது. மணிமாறனுக்கு […]

ஐரோப்பா

ஜெர்மனியில் வாகனம் செலுத்துவதற்கான சட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தல்

  • August 3, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் இஸ்லாமிய பெண்கள் முக்காடு அணிந்து வாகனம் செலுத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்க்பபட்டுள்ளது. ஜெர்மனியில் இஸ்லாமிய பெண்கள் முக்காடு அதாவது ஹிஜாப்பை அணிந்து வாகனத்தை ஓட்டுதல் ஜெர்மனியின் சட்டத்துக்கு புறம்பான ஒரு விடயம் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக நோயஸ்சஸ்ட் என்ற பிரதேசத்துடைய நீதிமன்றமானது ஒரு வழக்கில் தனது தீர்ப்பை இவ்வாறு தெரிவித்து இருக்கின்றது. அதாவது ஒரு இஸ்லாமிய பெண் அப்பிரதேசத்தில் உள்ள வாகன சாரதி அனுமதி பத்திர அலுவலகத்தில் தான் இவ்வாறு வாகனத்தை ஓட்டுவதற்கு குறிப்பாக இஸ்லாமிய […]

இலங்கை

வெளிநாடு சென்ற மனைவி – இலங்கையில் கணவன் எடுத்த விபரீத முடிவு

  • August 3, 2023
  • 0 Comments

கிரியெல்ல பிரதேசத்தில் மனைவி வெளிநாடு சென்ற துக்கத்தை தாங்க முடியாத கணவன் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று முன் தினம் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கிரியெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறிசமன்புர கரந்தனையைச் சேர்ந்த 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வறுமையிலும் மனைவி வெளிநாடு செல்வதை அவரால் தாங்க முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தற்கொலை என பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக […]

இலங்கை செய்தி

எட்டு மாதங்களின் பின் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கோடீஸ்வரின் உடல்

  • August 2, 2023
  • 0 Comments

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள சொகுசு ஹோட்டல் ஒன்றில் படுகொலை செய்யப்பட்ட இலங்கையின் கோடீஸ்வர வர்த்தகரான அலோஷ் சுபசிங்கவின் சடலம் படுகொலை செய்யப்பட்டு எட்டு மாதங்களுக்குப் பின்னர் நேற்று (1) இரவு இலங்கைக்கு கொண்டுவரப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்தனர். இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட கோடீஸ்வர வர்த்தகரின் சடலம் நீர்கொழும்பு பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவிருந்தது. இந்தோனேசியாவில் இந்த கோடீஸ்வர வர்த்தகரின் மரணம் தொடர்பில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். […]

செய்தி மத்திய கிழக்கு

வெளிநாட்டவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கும் நாடு!! ஆய்வு அறிக்கை

  • August 2, 2023
  • 0 Comments

சவுதி அரேபியா மீண்டும் வெளிநாட்டவர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கும் நாடாக அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டில் உள்ள வேலைவாய்ப்பு நிலைமைகள் சர்வதேச ஆலோசனை நிறுவனத்தால் ‘MyExpatriate Market Pay Survey’ல் சவுதி அரேபியா தேர்ந்தெடுக்கப்பட்டது. வெளிநாட்டவர்களின் பணி நிலைமைகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், உலகிலேயே வெளிநாட்டில் இருந்து வரும் நடுத்தர மேலாளர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் நாடாக சவுதி அரேபியா தேர்வு செய்யப்பட்டுள்ளது. சம்பளம், சலுகை கொடுப்பனவுகள் மற்றும் வரி ஆகிய மூன்று முக்கிய காரணிகளை கணக்கெடுப்பில் பரிசீலிக்கப்பட்டுள்ளது. சவுதி […]