கொழும்பில் தீப்பற்றி எரிந்த சொகுசு கார்கள்
கொழும்பு 07, ரோயல் மாவத்தையில் இன்று (04) மூன்று கார்கள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீயை கட்டுப்படுத்த இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தீயை அணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தீயணைப்பு சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த கார்களுக்கு சிலர் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிசார் சந்தேகிக்கின்றனர்.