பறக்கும் பாதையில் இருந்து விலகி இந்திய பெருங்கடல் பகுதியை நோக்கி சென்ற MH370 விமானம்!
11 ஆண்டுகளுக்கு முன்பு பெய்ஜிங்கிற்குச் சென்ற போது காணாமல் போன MH370 விமானத்தைத் தேடும் பணியைத் தொடங்க டெக்சாஸை தளமாகக் கொண்ட ஒரு கடல் ரோபாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலின் புதிய பகுதியைத் தேடும் பணி தொடங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370, மார்ச் 8, 2014 அன்று மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே 227 பயணிகள் மற்றும் 12 பணியாளர்கள் உட்பட 239 பேருடன் மாயமானது. […]