இலங்கை செய்தி

இலங்கைக்குள் நுழைய முற்பட்ட சீன நாட்டவர்

  • May 21, 2023
  • 0 Comments

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கைக்குள் பிரவேசிக்க முயன்ற சீன பிரஜை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த சீனப் பிரஜையிடம் சீன விமான அனுமதிப்பத்திரம் மற்றும் ஆபிரிக்க நாடான கினியாவிற்கு சொந்தமான விமான அனுமதிப்பத்திரம் இருந்ததாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய தெரிவித்துள்ளார். குறித்த சீனர் கடந்த 18ஆம் திகதி இரவு மேலும் இருவருடன் டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு குடிவரவு துறை அதிகாரிகள் மேற்கொண்ட […]

இலங்கை செய்தி

பாக்முட் நகரை கைப்பற்றியதாக ரஷ்யா அறிவிப்பு

  • May 21, 2023
  • 0 Comments

உக்ரைனில் உள்ள பக்முட் நகரம் முழுமையாக கைப்பற்றப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் அறிக்கை ஒன்றில் அறிவித்துள்ளது. பாக்முட் நகரை கைப்பற்றிய இராணுவத்துக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பக்முட் நகரில் சண்டை தொடர்ந்ததாக உக்ரைன் படைகள் அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, ரஷ்யப் படைகள் பாக்முட்டை கைப்பற்றின. பாக்முட் சுமார் 70,000 மக்கள் வசிக்கும் நகரம், மேலும் இரு தரப்புப் படைகளும் மோதலின்போது சேதமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாக்முட் நகரைக் […]

ஆஸ்திரேலியா செய்தி

அவுஸ்திரேலியா கடற்கரையில் இலங்கையர் என கூறப்படும் இளைஞனின் சடலம் மீட்பு

  • May 21, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலியாவின் டிரான்மீர் கடற்கரையில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1.40 மணியளவில் பிரதேசவாசி ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் பொலிசார் சடலத்தை கண்டெடுத்துள்ளனர். இது சந்தேகத்திற்கிடமான மரணமாக இருக்க முடியாது எனவும், மரணத்திற்கான காரணத்தை கண்டறிய மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவுஸ்திரேலிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 18 – 25 வயதுக்கு இடைப்பட்ட இலங்கையர் என நம்புவதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். எனினும் உயிரிழந்தவரின் அடையாளத்தை இதுவரையில் […]

இலங்கை செய்தி

ஹம்பாந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் சாவு

  • May 21, 2023
  • 0 Comments

ஹம்பாந்தோட்டை சுச்சி கிராமத்தில் இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று இரவு 9 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. ஹம்பாந்தோட்டை சிறிபோபுர பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய ஒருவரே இவ்வாறு […]

பொழுதுபோக்கு

“ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விக்” விஜய் குறித்து வெளியான செய்தியால் பெரும் சர்ச்சை

  • May 21, 2023
  • 0 Comments

தளபதி விஜய்யின் ஹேர் ஸ்டைல் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசியிருப்பது இணையத்தி விவாதமாகியுள்ளது. விஜய் விக் வைத்திருக்கிறார் என பலரும் கூறும் சூழலில் விஜய்யின் ரசிகர்கள் அதனை தீவிரமாக மறுத்துவருகின்றனர். சமீபத்தில் மனோபாலா இறப்புக்கு வந்தபோதுகூட விஜய்யின் தலைமுடி குறித்த விவாதம் எழுந்தது. இந்தச் சூழலில் பயில்வான் ரங்கநாதன் விஜய்யின் முடி குறித்து பேசியிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கிறது. “விஜய் கடந்த ஏழு ஆண்டுகளாக படங்களில் விக் வைத்துதான் நடித்துவருகிறார். ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகருக்கு இன்னமும் முடி நன்றாக இருக்கிறது. […]

ஆசியா முக்கிய செய்திகள்

சிங்கப்பூரில் சட்ட விரோதமாக வீசாவுக்கான பத்திரங்களை வழங்கிய 27 பேர் கைது

  • May 21, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் வேலைசெய்வதற்காக வெளிநாட்டு தொழிலார்களை அழைத்து வர சட்டவிரோதமாக வீசா பெறுவதற்கான பிரகடன பத்திரங்களை பொய்யாக மேற்கொண்டதாக 27 பேர் சிங்கப்பூர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்தவர்கள் மீது சட்டவிரோதமாக வேளையில் அமர்த்தியது, பொய்யான உறுதி ஆவணம் வழங்குதல் , நிறுவங்களுக்கு அரசால் நிர்ணயிக்கப்பட்ட தொழிலார்களுக்குக்கான எண்ணிக்கையில் மோசடி செய்தல் போன்ற குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்டு உள்ளதாக மனிதவள அமைச்சு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் இரண்டு நாட்கள் நடத்தப்பட்ட சோதனைகளின் பொழுது 19 இடங்களுக்கு […]

இலங்கை

தேர்தல்கள் ஆணைக்குழுவில் இருந்து இன்னும் 200 மில்லியன் கிடைக்கவில்லை – அரச அச்சகம்

  • May 21, 2023
  • 0 Comments

அரச அச்சகத் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட அச்சிடும் பணிகளுக்காக தேர்தல்கள் ஆணைக்குழு 200 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலுவைத் தொகையைத் தீர்ப்பதற்காக அரசாங்க அச்சகத் திணைக்களம் பல முறைதேர்தல்கள் ஆணைக்குழு விற்கு அறிவித்துள்ளதாகவும் அதன் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். கொடுப்பனவுகளை ஆணைக்குழு பூர்த்தி செய்யத் தவறியமையால் திணைக்களம் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. தேர்தல்கள் ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கு இணங்க அரசாங்க அச்சக திணைக்களம் உள்ளுராட்சி தேர்தலுக்கான ஆவணங்கள் மற்றும் வாக்குச்சீட்டுகளை அச்சிடும் பணியை […]

உலகம் ஐரோப்பா

ரஷ்யாவால் மேற்கு நாடுகள், தவிர்க்க முடியாத அழிவை சந்திக்கும் – செலன்ஸ்கி எச்சரிக்கை!

  • May 21, 2023
  • 0 Comments

‘ரஷ்யாவின் நடவடிக்கைகளை தடுக்காமல் விட்டால் மேற்கு நாடுகள், தவிர்க்க முடியாத அழிவை சந்திக்கும் என உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். G7 உச்சிமாநாட்டில் பேசிய அவர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து தெரிவித்த அவர்,  ரஷ்யா ஆக்கிரமித்துள்ள நிலப்பரப்பில் ஒரு சிறிய பகுதியைக் கூட வைத்திருக்க அனுமதித்தால், சர்வதேச சட்டம் ஒருபோதும் பொருந்தாது. “ரஷ்யா கதிர்வீச்சு மற்றும் அணு ஆயுதங்களால் உலகை அச்சுறுத்துவதை நிறுத்திவிட்டு, தற்போது ஆக்கிரமித்துள்ள அணுமின் நிலையத்தை உக்ரைனின் புள்ளிக் கட்டுப்பாட்டிற்கு ஒப்படைக்க வேண்டும்” எனத் தெரிவித்தார். […]

ஆசியா

உலக பாதுகாப்புக்கு சீனா மிகப்பெரிய சவால்: பிரதமர் ரிஷி சுனக் பேச்சு

  • May 21, 2023
  • 0 Comments

உலக பாதுகாப்புக்கு சீனா மிகப்பெரிய சவாலாக உள்ளது என ஜி7 மாநாட்டில் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார். பிரித்தானியா, அமெரிக்கா, கனடா மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஜி7 நாடுகளின் உச்சி மாநாடு ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் நடைபெற்று வருகிறது.மூன்று நாள் நடைபெறும் இந்த உச்சிமாநாட்டில் உக்ரைன் போர் மற்றும் சீனாவால் வளர்ந்து வரும் அச்சுறுத்தல்கள் குறித்து முக்கிய விவாதங்களை உலக தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். ஜப்பானின் ஹிரோஷிமா நகரில் ஜி7 உச்சி மாநாட்டில் […]

ஐரோப்பா

பக்முட்டின் ஒருபகுதி தங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருப்பதாக உக்ரைன் அறிவிப்பு!

  • May 21, 2023
  • 0 Comments

பக்முட்டை ரஷ்யா முழுமையாக கைப்பற்றியுள்ளதாக வாக்கனர் கூலி படையின் உறுப்பினர் யெவ்கெனி பிரிகோஜின் தெரிவித்துள்ள நிலையில், இதனை உக்ரைன் மறுத்துள்ளது. இதன்படி பக்முட்டின்   ஒரு பகுதியை உக்ரைன் இன்னும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக துணை பாதுகாப்பு மந்திரி ஹன்னா மாலியார் தெரிவித்துள்ளார். “எங்கள் படைகள் நகரத்தை ஒரு அரை சுற்றிவளைப்பில் எடுத்துள்ளன, இது எதிரிகளை அழிக்க எங்களுக்கு வாய்ப்பளிக்கிறது,” என்று அவர் கூறினார். “எனவே, எதிரி தனது கட்டுப்பாட்டில் உள்ள நகரத்தின் ஒரு பகுதியில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள […]

You cannot copy content of this page

Skip to content