அணு மின் நிலையத்தின் நீரை கடலில் வெளியேற்றும் ஜப்பான்!
பல்வேறு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி புகுஷிமா அணுமின் நிலையத்தில் இருந்து கதிரியக்க நீர் வியாழக்கிழமை கடலில் விடப்படும் என ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்துள்ளார். 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் காரணமாக புகுஷிமா அணுமின் நிலையத்திற்குள் கடல் நீர் புகுந்தது. இதனால், மின்சாரம் துண்டிக்கப்பட்டதுடன், குளிா்விக்கும் இயக்கம் நின்று போனது. அதையடுத்து, அந்த மின் நிலையத்தின் 3 அணு உலைகள் உருகின. அதிலிருந்த கதிரியக்க எரிபொருள்கள் கடலில் கலந்தன. இதையடுத்து, ஜப்பானில் இருந்து […]