கட்டாரில் வேலையின்றி சிக்கியிருக்கும் இலங்கை இளைஞர்கள்
கட்டாருக்கு வேலைக்குச் சென்று தொழில் வாய்ப்பு கிடைக்காத இரண்டு இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர். இவர்கள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்துவிட்டு, வேலை செய்யும் இடத்தின் கடிதமோ, வேலைவாய்ப்பு ஒப்பந்தக் கடிதமோ இல்லாமல் கட்டாருக்கு பணிக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்டாருக்குச் சென்றிருந்த இருவரும், இரண்டு மாதங்கள் அங்கு தங்கியிருந்த நிலையில், மீண்டும் நாட்டிற்கு திரும்பியுள்ளனர். இவ்வாறே நிகவெரட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் நாடு திரும்பியுள்ளனர். உள்ளூர் தரகரிடம் தலா 05 லட்சம் ரூபா […]