ஐரோப்பா

ஆஸ்திரியாவில் 20 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்ட சடலம்

  • August 24, 2023
  • 0 Comments

ஆஸ்திரியாவில் உள்ள பனியோடையில் சுமார் 20 ஆண்டுக்கு முன்னர் உயிரிழந்தவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரியாவில் மிக வேகமாக உருகும் பனியோடையில் அது கண்டுபிடிக்கப்பட்டது. பருவநிலை மாற்றத்தால் பனியோடைகள் அதிக வேகத்தில் உருகுகின்றன. அதன் விளைவாக உறைந்த மலையேறிகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்படுகின்றன. மலையேறும் வழிகாட்டி ஒருவர் சடலத்தை 2,900 மீட்டர் உயரத்தில் கண்டுபிடித்ததாக அந்நாட்டுக் காவல்துறை தெரிவித்தது. சடலத்தின் அருகே ஒரு பை இருந்தது. அதில் ரொக்கம், வங்கி அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவை இருந்தன. அவை 2001ஆம் […]

இலங்கை

இலங்கையில் பாடசாலை மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள பாதிப்பு!

  • August 24, 2023
  • 0 Comments

இலங்கையில் பாடசாலை மாணவர்களிடையே புகையிலை பாவனை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேசிய அபாயகரமான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபை இதனை தெரிவித்துள்ளது. கடந்த மூன்று வருடங்களுடன் ஒப்பிடுகையில் ஐஸ் மருந்துகளின் பாவனையில் சிறிதளவு குறைந்துள்ளதாக அதன் தலைவர் சக்கிய நாணயக்கார சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு குறிப்பிட்ட குழு மாணவர்களிடையே புகையிலை பயன்படுத்தப்படுவதாகவும், அது போதைப்பொருளுக்கு திரும்பும் போக்கைத் தூண்டுவதாகவும் வாரியம் மேலும் கூறியது.

ஆசியா

2020ஆம் ஆண்டின் பின் முதல் முறையாக எல்லைகளைத் திறந்திருக்கும் வடகொரியா!

  • August 24, 2023
  • 0 Comments

2020ஆம் ஆண்டின் பின் முதல்முறையாகப் பயணிகள் விமானம் அங்கிருந்து புறப்பட்டுள்ளது. வடகொரியாவில் 2020ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட COVID-19 முடக்கநிலையைத் தொடர்ந்து தற்போது திறக்கப்பட்டுள்ளது. பியோங்யாங்கிலிருந்து புறப்பட்ட Air Koryo விமானம் பெய்ச்சிங்கில் நேறறு முன்தினம் தரையிறங்கியது. விமானப் பயணிகள் யார் என்பது தெரியவில்லை. அது சீனாவில் சிக்கியிருக்கும் வட கொரியர்களைத் திருப்பிக் கொண்டுசெல்லும் சிறப்பு விமானம் என்று என்று நம்பப்படுகிறது. உலகில் அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் தனிமைப்படுத்தப்பட்ட நாடுகளில் ஒன்றான வடகொரியா, அதன் எல்லைகளை COVID-19 […]

அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய அம்சங்கள்!

  • August 24, 2023
  • 0 Comments

WhatsApp நிறுவனம் பல்வேறு அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தற்போது முக்கிய ஐந்து அம்சங்களை கூடுதலாக WhatsApp அறிமுகப்படுத்தி இருக்கிறது. உலகம் முழுவதும் அதிக பயனாளர்களைக் கொண்ட செயலியாக WhatsApp உள்ளது. இது மட்டுமல்லாது WhatsApp மிக முக்கிய தொலைத்தொடர்பு செயலியாக உருவெடுத்து இருக்கிறது. WhatsApp நிறுவனத்தை கடந்த ஆண்டு பேஸ்புக் நிறுவனத்தின் முதன்மை நிறுவனமான மெட்டா கைப்பற்றியது. மெட்டா WhatsAppபை கையகப்படுத்திய பிறகு WhatsAppபில் பல்வேறு அதிரடி மாற்றங்களை தொடர்ச்சியாக செய்து வருகிறது. […]

ஐரோப்பா

இஸ்ரோவை வாழ்த்திய ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்!

  • August 24, 2023
  • 0 Comments

இஸ்ரோவை வாழ்த்திய ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ளது. சந்திரயான்-3, இந்தியாவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து 14 ஜூலை 2023 அன்று ஜிஎஸ்எல்வி LVM3 M4 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது. விண்கலம் ஒகஸ்ட் 5 ஆம் திகதி நிலவின் சுற்றுப்பாதையை சென்றடைந்தது. ஆகஸ்ட் 17 அன்று, லேண்டர் மாட்யூல் உந்துவிசை தொகுதியிலிருந்து பிரிக்கப்பட்டு, மேற்பரப்பில் இறங்குவதற்கான பணியை தொடங்கியது. சந்திரயான் -3 இன் லேண்டர் திட்டமிட்டபடி சந்திரனின் தென் […]

ஐரோப்பா

பிரான்ஸ் தலைநகரில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட அகதிகள்

  • August 24, 2023
  • 0 Comments

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அகதிகள் பலரை அரசாங்கம் மீள் குடியேற்றம் செய்துள்ளது. நகரசபைக்கு முன்னால் தங்கியிருந்து தங்குமிட கோரிக்கை வைத்திருந்த அகதிகளே மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒகஸ்ட் மாத ஆரம்பத்தில் இருந்து பரிஸ் நகரசபைக் கட்டிடத்தின் (Hôtel de ville) முற்றத்தில் அகதிகள் பலர் தங்கியுள்ளனர். அங்கு கின்னியா, ஐவரி கோஸ்ட், மாலி போன்ற மேற்கு ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்த 226 அகதிகள் சிறிய கூடாரங்கள் அமைத்து தங்கியிருந்ததனர். அத்துடன், தங்குமிட கோரிக்கையும் வைத்திருந்தனர். ஆனால் […]

ஐரோப்பா

ஜெர்மனியில் முக்கிய நகரங்கள் பலவற்றில் வாழ்ந்து வருகின்ற மக்களுக்கு 500 யூரோ நிதி உதவி

  • August 24, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் சுற்றுப்புற சூழலை கருத்தில் கொண்டு முக்கிய நகரங்கள் பலவற்றில் வாழ்ந்து வருகின்ற மக்களுக்கு 500 யுரோ நிதி உதவி வழங்கப்பட இருக்கின்றது. ஜெர்மனியி்ன் சில பெரிய நகரங்கள் சுற்றுப்புற சூழலை பாதுகாக்கின்ற நடவடிக்கையில் ஈடுப்படுவதற்காக மக்களுக்கு சில நிதி உதவிகளை மேற்கொள்ளவுள்ளதாக தெரிய வந்து இருக்கின்றது. குறிப்பாக பெரிய நகரங்களில் மக்கள் உந்துருளியில் செல்வதற்குரிய வசதியை ஏற்படுத்துவதற்காக இவர்களுக்கு ஆக கூடிய தொகையாக 500 யுரோக்களை வழங்குவதற்கு முன் வந்துள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக போகன் […]

உலகம் செய்தி

பீட்சா சிக்கன் கோரி காவலரை பணயக்கைதியாக பிடித்து வைத்த கைதிகள்

  • August 24, 2023
  • 0 Comments

சிறைகளிலும் சீர்திருத்த இல்லங்களிலும் நல்ல உணவு கிடைப்பதில்லை என்று அடிக்கடி கேள்விப்படுகின்நோம். பல சிறைகளில் கைதிகள் இதைக் கோருவதைக் காணலாம். ஆனால் சமீபத்தில் மிச்சிகன் சிறைச்சாலையில் இந்த உணவு தொடர்பாக நடந்தது ஆச்சரியமாக இருந்தது. உண்மையில், இங்குள்ள செயின்ட் லூயிஸ் சிறையின் கைதிகள் நல்ல உணவைக் கோருவதற்கான வரம்புகளைக் கடந்துள்ளனர். 70 வயது காவலர் பிணைக் கைதி இங்குள்ள கைதிகள் 70 வயது காவலரை பணயக்கைதியாக பிடித்து சென்றனர். எனினும், காவலாளி காயமின்றி இருந்ததால், கைதிகளால் விடுவிக்கப்பட்டார். […]

செய்தி மத்திய கிழக்கு

சவூதி அரேபியாவில் சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பு

  • August 24, 2023
  • 0 Comments

சவூதி அரேபியாவில் சிறிய மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பொது ஆணையம் அல்லது முன்ஷா வெளியிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் எண்ணிக்கையில் 2.6 சதவீத வளர்ச்சி பதிவாகியுள்ளது. நாட்டிலுள்ள மொத்த நிறுவனங்களின் எண்ணிக்கை பன்னிரெண்டு இலட்சத்து முப்பதாயிரத்தைத் தாண்டியுள்ளதாக அதிகாரசபை வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. ரியாத் மாகாணம் 42.3 சதவீத நிறுவனங்களைக் கொண்டுள்ளது. 18.6 […]

இலங்கை

இலங்கையில் கடும் நெருக்கடி நிலை – மக்களுக்கு எச்சரிக்கை

  • August 24, 2023
  • 0 Comments

இலங்கையின் வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களுக்கும் மொனராகலை மாவட்டத்திற்கும் வெப்பம் தொடர்பான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியளவு வெப்பம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ஆகவே அந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் வெப்பம் தொடர்பில் அவதானமாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கமைய, அதிகளவு நீரைப் பருகுமாறும் நிழலான இடங்களில் ஓய்வெடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேவேளை, வறட்சி காரணமாக 132,000-இற்கும் அதிகமான குடும்பங்களுக்கு குடிநீரை விநியோகிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. […]