அலாஸ்காவில் வெடிக்கும் தருவாயில் இருக்கும் எரிமலை : உன்னிப்பாக கண்காணிக்கும் விஞ்ஞானிகள்!
அலாஸ்காவில் வெடிக்கும் விளிம்பில் இருப்பதாகத் தோன்றும் ஒரு பிரம்மாண்டமான எரிமலையை விஞ்ஞானிகள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். ஆங்கரேஜிலிருந்து 81 மைல் மேற்கே அமைந்துள்ள 11,000 அடி உயர ஸ்ட்ராடோவோல்கானோவான மவுண்ட் ஸ்பர்ர், தற்போது வெடிக்கும் தருவாயில் இருப்பதாக கூறப்படுகிறது. குறித்த எரிமலையானது இறுதியாக 1992 இல் மார்ச் 7 அன்று வெடித்தது. தற்போது அதிக அளவு வாயுவை வெளியிடத் தொடங்கியது. இந்த உமிழ்வுகள் எரிமலையின் அமைதியின்மையில் ஒரு புதிய கட்டத்தைக் குறிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.