இந்தியா செய்தி

பிரக்ஞானந்தாவை நேரில் சந்தித்து பாராட்டிய பிரதமர் மோடி

  • August 31, 2023
  • 0 Comments

ஃபிடே உலகக்கோப்பை செஸ் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் சமீபத்தில் நடைபெற்று முடிந்து. இதில் இந்திய இளம் வீரர் தமிழகத்தை சேர்ந்த பிரக்ஞானந்தாவும், நம்பர் ஒன் வீரரும், 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றவருமான மாக்னஸ் கார்ல்செனும் இறுதிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தினர். டை-பிரேக்கரில் கார்ல்சென் வெற்றி பெற்றார். இளம் வயதிலேயே சிறப்பாக விளையாடி 2-வது இடம் பிடித்த 18 வயதாகும் பிரக்ஞானந்தாவுக்கு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தமிழக முதலமைச்சர் வாழ்த்து தெரிவித்ததுடன், வீடியோ கால் மூலம் […]

செய்தி வட அமெரிக்கா

தாயின் மரணத்திற்கு விடுமுறை கேட்ட ஊழியர் – பணிநீக்கம் செய்த அமெரிக்க நிறுவனம்

  • August 31, 2023
  • 0 Comments

தாயின் மரணத்திற்கு பின் விடுப்பு கேட்ட ஊழியரை பணிநீக்கம் செய்த அமெரிக்க நிறுவனம் ஒன்று சமூக வலைதள பயன்பாட்டாளர்களின் கோபத்தை சந்தித்து வருகிறது. சுவர் உறைகளைத் தயாரிக்கும் நிறுவனம் கொரோசல், அதன் அனைத்து சமூக ஊடக சுயவிவரங்களையும் செயலிழக்கச் செய்தது. கொரோசல் ஊழியர் ஒருவர் தனது தாயின் மரணத்தைத் தொடர்ந்து மூன்று நாட்கள் துக்க விடுமுறை எடுத்துள்ளார். இருப்பினும், அவர் தனது விடுமுறையை நீட்டிக்கக் கோரியபோது, நிறுவனம் அவரது வேலையை நிறுத்த முடிவு செய்தது. பணிநீக்கம் செய்யப்பட்ட […]

விளையாட்டு

Asia Cup – இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி

  • August 31, 2023
  • 0 Comments

2023 ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ண தொடரின் 2 வது போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது. பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி தலைவர் ஷகிப் அல் ஹசன் முதலில் துடுப்பெடுத்தாட முடிவு செய்தார். அதன்படி களம் இறங்கிய பங்களாதேஷ் அணி வீரர்களால், இலங்கை அணி பந்துவீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பான முறையில் துடுப்பெடுத்தாட முடியவில்லை. பங்களாதேஷ் அணி 42.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் […]

இலங்கை

எங்களுடைய உரிமைக்காகவும், இருப்புக்காகவும் நாம் இறுக்கமாக இருந்தால் முன்னேற்றத்தை அடையலாம்! கஜேந்திரகுமார் எம்பி.

அநியாயம் நடக்கும் போது நாம் துணிந்து எங்களுடைய உரிமைக்காகவும், இருப்புக்காகவும் நாம் இறுக்கமாக இருந்தால் எமக்கான முன்னேற்றத்தை அடையலாம் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தின் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியிலே அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை உள்ளிட்ட கட்டுமான பணிகள் தொடர்பிலான வழக்கின் கட்டளை இன்றையதினம் வழங்கப்பட்டிருந்தது. வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினருக்கும் , மக்களுக்கும் […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அமைச்சரவையில் புதிய இந்திய வம்சாவளி

  • August 31, 2023
  • 0 Comments

பிரிட்டிஷ் பிரதம மந்திரி ரிஷி சுனக்கின் நெருங்கிய உதவியாளரான Claire Coutinho, ஒரு சிறிய மறுசீரமைப்பில் அவரது புதிய ஆற்றல் பாதுகாப்பு மற்றும் நிகர ஜீரோ செயலாளராக ஒரு பெரிய பதவி உயர்வு பெற்றார். 38 வயதான திருமதி குடின்ஹோ, சுனாக் அமைச்சரவையில் உள்துறைச் செயலர் சுயெல்லா பிரேவர்மேனுக்குப் பிறகு கோவா வம்சாவளியைச் சேர்ந்த இரண்டாவது அமைச்சராகிறார், மேலும் ரஷ்யா-உக்ரைன் மோதலை அடுத்து எரிசக்தி செலவுகள் அதிகரித்து வருவதால் அவருக்கு ஒரு கடினமான சுருக்கம் உள்ளது. வாழ்க்கைச் […]

இலங்கை

குருந்தூர்மலைக்கு கிடைத்த நீதி ஒற்றுமைக்காக கிடைத்த வெற்றி! கந்தையா சிவநேசன்

குருந்தூர்மலைக்கு கிடைத்த நீதி ஒற்றுமைக்காக கிடைத்த வெற்றியே என முன்னாள் வடமாகாண சபை விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன் தெரிவித்துள்ளார். தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை பகுதியிலே அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரை உள்ளிட்ட கட்டுமான பணிகள் தொடர்பிலான வழக்கின் கட்டளை இன்றையதினம் வழங்கப்பட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார், அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும். ஏனென்றால் இது நீண்டகால பிரச்சினை […]

செய்தி வட அமெரிக்கா

ஜார்ஜியா தேர்தல் மோசடி வழக்கில் டொனால்ட் டிரம்ப் குற்றமற்றவர் என அறிவிப்பு

  • August 31, 2023
  • 0 Comments

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தனது 2020 தேர்தல் தோல்வியை முறியடிக்க முயன்றது தொடர்பான பரந்த அளவிலான ஜார்ஜியா குற்றவியல் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார், 2024 குடியரசுக் கட்சி வேட்பாளருக்கான முன்னோடியான டிரம்ப், குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள அடுத்த வாரம் அட்லாண்டாவில் உள்ள ஃபுல்டன் கவுண்டி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக மாட்டார் என்பது அந்த மனுவின் பொருள். ஃபுல்டன் கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் ஃபானி வில்லிஸ், 2020 தேர்தல் தோல்வியைத் திரும்பப் பெறுமாறு மாநில அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததற்காகவும், […]

இலங்கை

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடத்தப்பட்ட தங்கம் பறிமுதல்!

இலங்கையில் இருந்து கடல் வழியாக இந்தியாவுக்கு கடத்திச் செல்லப்பட்ட 14.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து கடல் வழியாக தங்கம் கடத்தப்பட்டுள்ளதாக சுங்கத்துரை அதிகாரிகளுக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே களிமண்குண்டு கடற்கரை பகுதியில் நேற்று புதன்கிழமை (30) ராமநாதபுரம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதன் போது இலங்கையில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்டு இருசக்கர வாகனத்தில் எடுத்து வரப்பட்ட 14.8 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் […]

இலங்கை

கனடா அனுப்புவதாக கூறி பல இலட்சம் பண மோசடி!

கனடா அனுப்புவதாக கூறி வவுனியாவில் 6 பேரிடம் பணம் பெற்று மோசடி செய்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவரை வவுனியா பொலிசார் இன்று (31.08) கைது செய்துள்ளனர். வவுனியாவின் பட்டக்காடு, திருநாவற்குளம், தவசிகுளம், மல்லாவி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 6 நபர்களிடம் கனடா அனுப்புவதாக கூறி யாழ்ப்பாணம், நாவற்குழி பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் பணம் பெற்றுள்ளார். ஒருவரிடம் இருந்து 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வீதம் 6 பேரிடம் பணம் பெற்றுள்ளதுடன், பிறிதொருவரிடம் 3 பவுண் […]

உலகம்

ரீ-ட்வீட் செய்தவருக்கு மரண தண்டனை! வெளியான அதிர்ச்சி தகவல்

ஒருவர் பதிவேற்றிய ட்வீட்டை ரீ-ட்வீட் செய்து, யூடியூப்பில் கருத்து தெரிவித்ததற்காக சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மனித உரிமை ஆர்வளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். உலகிலேயே அதிகமாக மரண தண்டனை விதிக்கப்படும் நாடுகளில் சீனா மற்றும் ஈரானுக்கு அடுத்த இடத்தில் உள்ள நாடு சவுதி அரேபியா. இங்கு மதத்திற்கு எதிராக பேசவோ எழுதவோ முடியாது. கொலை, போதை பொருள் கடத்தல் உள்பட பல்வேறு விஷயங்களுக்கு நிச்சயம் மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இந்நிலையில் சவுதி அரேபியாவில் […]