தமிழ்நாடு

கோவை-ரத்தினபுரியில் இரு கார்களுக்கு தீ வைத்து விட்டு தப்பிச்சென்ற மர்ம நபர்கள்

  • September 2, 2023
  • 0 Comments

கோவை ரத்தினபுரி பகுதியில் இரண்டு கார்களுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து விட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரத்தினபுரி நேரு வீதியில் உள்ள பள்ளி அருகே அந்தப் பகுதியை சேர்ந்த இரண்டு பேர் நேற்று இரவு தங்களது கார்களை நிறுத்தியிருந்தனர். நள்ளிரவு அங்கு வந்த மர்ம நபர்கள் இரண்டு கார்களுக்கும் தீ வைத்து தப்பி சென்றதாக தெரிகிறது. கார் மளமளவென தீ பிடித்து எரிவதை கண்ட அந்த பகுதி மக்கள் தீயணைப்பு துறையினர் மற்றும் […]

இலங்கை

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கு கிடைத்த அங்கீகாரம்!

  • September 2, 2023
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க 2023 ஆம் ஆண்டுக்கான 21 உலக ‘A’ தர மத்திய வங்கி ஆளுநர்களில் ஒருவராக பெயரிடப்பட்டுள்ளார். நியூயோர்க்கை தளமாகக் கொண்ட “குளோபல் ஃபைனான்ஸ் சஞ்சிகை” வருடாந்தம் நடத்திய கணக்கெடுப்பின்படி, அவருக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. 1994 ஆம் ஆண்டு முதல், “குளோபல் ஃபைனான்ஸ் இதழ்”, பணவீக்கக் கட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சி, நிதி நிலைத்தன்மை மற்றும் வட்டி விகித மேலாண்மை ஆகியவற்றில் அவர்களின் சிறந்த செயல்திறனுக்காக மத்திய வங்கி […]

இலங்கை

யாழில் இளம் வியாபாரியொருவர் கடத்தல்! பொலிஸார் தீவிர விசாரணை

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு பகுதியில் பழ வியாபாரத்தில் ஈடுபடும் 23 வயதுடைய வியாபாரியொருவர் பட்டப்பகலில் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் வியாபாரி கடத்தப்பட்டதாக கோப்பாய் பொலிஸில் முன்வைத்த முறைப்பாட்டில் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இன்று முற்பகல் 10 மணியளவில் கிளிநொச்சியிலிருந்து வாகனம் ஒன்றில் வருகை தந்த 12 பேர் கொண்ட கும்பல், பழ வியாபாரியை தாக்கிவிட்டு அவரை கடத்திச் சென்றதாகவும் முறைப்பாட்டில் […]

இலங்கை

இன்று ஆரம்பமான ஆயித்தியமலை சதாசகாய மாதா தேவாலயத்தினை நோக்கிய பாதயாத்திரை பயணம்

  • September 2, 2023
  • 0 Comments

இலங்கையில் யாத்திரை செல்லுத் திருத்தலங்களில் ஒன்றாகவும் கிழக்கில் பழமையான தேவாலயங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு ஆயித்தியமலை சதாசகாய மாதா தேவாலயத்தினை நோக்கிய பாதயாத்திரை பல்லாயிரக்கணக்கான அடியார்களுடன் இன்று அதிகாலை ஆரம்பமானது. வடக்கில் மடுமாதா திருத்தலமும் கிழக்கில் ஆயித்தியமலை சதாசகாய மாதா தேவாலயமும் பக்தர்கள் யாத்திரை செல்லும் திருத்தலங்களாகயிருந்துவருகின்றது. ஆயித்தியமலை சதாசகாய மாதா தேவாலயத்தின் திருவிழா நடைபெற்றுவரும் நிலையில் இன்று மட்டக்களப்பு புனித மரியால் பேராலயத்தில் ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகையினால் நடாத்தப்பட்ட வழிபாடுகளை தொடர்ந்து பாத யாத்திரை […]

உலகம்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம்!

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலையில் சற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி, பிரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 89.00 அமெரிக்க டொலராக உள்ளது. கடந்த சில மாதங்களுடன் ஒப்பிடுகையில், இந்த மாதத்தில் மசகு எண்ணெய் விலை அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பா

பிரித்தானியாவில் தற்காலிகமாக மூடப்படும் 150 பள்ளிகள்..!

  • September 2, 2023
  • 0 Comments

பிரித்தானியாவில் பாதுகாப்பு காரணங்களுக்காக கிட்டத்தட்ட 150 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. பிரித்தானியாவில் அடுத்த வாரம் முதல் கோடை விடுமுறைகள் நிறைவடைந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.இதற்கிடையில் பிரித்தானியாவில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் மோசமான கான்கிரீட் தள கட்டிடங்களில் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. மேலும் இத்தகைய பள்ளி கட்டிடங்கள் எப்போது வேண்டும் என்றாலும் இடிந்து விழுந்து விடலாம் என்ற அபாயத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மாணவர்களின் நலன் கருதி பிரித்தானியாவில் மோசமான கட்டிடங்களில் செயல்படும் 150 பள்ளிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. […]

ஐரோப்பா

எரித்திரியாவில் பொலிஸாருக்கும், புகலிடக்கோரிக்கையாளர்களுக்கும் இடையில் மோதல்!

  • September 2, 2023
  • 0 Comments

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் எரித்திரியா தூதரகம் இன்று (02.09) ஏற்பாடு செய்திருந்த ஒரு நிகழ்விற்கு எதிரான போராட்டத்தின்போது புகலிடக்கோரிக்கையாளர்களுக்கும், இஸ்ரேலிய பொலிஸாருக்கும், இடையில் வன்முறை ஏற்பட்டுள்ளது. இதில் 27 அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  குறைந்தது மூன்று எதிர்ப்பாளர்கள் “தங்கள் உயிருக்கு உண்மையான ஆபத்தை” உணர்ந்த பின்னர் நேரலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் இஸ்ரேலிய காவல்துறை கூறியது. இஸ்ரேலில் உள்ள 30,000க்கும் மேற்பட்ட ஆப்பிரிக்க புகலிடக் கோரிக்கையாளர்களில் எரித்திரியா நாட்டினர் பெரும்பான்மையாக உள்ளனர். ஆப்பிரிக்காவின் வட கொரியா” […]

இலங்கை

ஜனநாயகத்திற்கு விரோதமாக ஜனாதிபதி செய்ல்படுகிறார் – MP இரா.சாணக்கியன்

  • September 2, 2023
  • 0 Comments

பௌத்த மக்களையும் தமிழ் மக்களையும் ஒரு முறுகல் நிலைக்குள் கொண்டுசென்று தாங்கள் ஆட்சிக்கு வரலாமா என்கின்ற ஆய்வு செய்வதற்கான முதல்கட்டபடியாக வடக்கு கிழக்கிலே இந்த சில சம்பவங்களை பார்க்க கூடியதாக இருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார். ஜனநாயக விரோதமாக செயல்படும் ஒரு ஜனாதிபதி ஜனநாயக ரீதியாக மக்களுக்கு தீர்மானத்தை வழங்குவதற்கான சந்தர்ப்பத்தை இந்த ஜனாதிபதி தேர்தலை தவிர்த்து ஏனைய தேர்தல் ஊடாக சந்தர்ப்பம் வழங்குவார் என்ற நம்பிக்கை […]

பொழுதுபோக்கு

தளபதி விஜய்யின் ‘லியோ’ படத்தில் ஏன் நடிக்கவில்லை! உண்மையை உடைத்த விஷால்

நடிகர் விஷால் இப்போது தனது பான்-இந்தியன் படமான ‘மார்க் ஆண்டனி’ வெளியீட்டிற்கு தயாராகி வருகிறார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பேண்டஸி கேங்ஸ்டர் படம் செப்டம்பர் 15 ஆம் திகதி வெள்ளித்திரைக்கு வருகிறது. படத்தின் வெளியீடு காரணமாக சமீபத்திய பேட்டியில், நடிகர் தளபதி விஜய்யின் ‘லியோ’ படத்தில் தான் செய்யவிருந்த பாத்திரம் பற்றி மனம் திறந்து பேசினார். முன்னதாக, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விஷாலை சந்தித்து லியோவில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார். இதுபற்றி விஷால் பேசுகையில், […]

இலங்கை

கருத்தடை மாத்திரைகளை விற்பனை செய்த பெண் கைது!

  • September 2, 2023
  • 0 Comments

அனுராதபுரம் – யாழ்ப்பாண சந்திப் பகுதியில் சட்டவிரோதமாக கருத்தடை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அனுராதபுரம் மாவட்ட உணவு மற்றும் மருந்து பரிசோதனை பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது குறித்த பெண் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பெண் அனுராதபுரத்தில் பிரபலமான வைத்தியர் ஒருவரிடம் பணிப்புரிந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் 07 கருத்தடை மாத்திரைகளை 35 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. மேலும் குறித்த […]