இலங்கை

குடிபோதையில் சாரதி பல வாகனங்கள் மோதியதில் ஒருவர் பலி: 06 பேர் படுகாயம்

எம்பிலிபிட்டிய, கல்வாங்குவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 06 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி, முச்சக்கர வண்டிகள், கார் மற்றும் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 73 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் காரின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

பொழுதுபோக்கு

இயக்குனர் சேரனுடன் இணையும் சுதீப் ! – அதிகாரப்பூர்வ அறிவிப்பு

கன்னட சினிமாவின் பாட்ஷாவான கிச்சா சுதீப் ஏற்கனவே கலைப்புலி எஸ் தாணுவின் வி கிரியேஷன்ஸ் உடன் இணைந்து ‘மேக்ஸ்’ படத்தில் பணியாற்றி வருகிறார். இப்போது, ​​நடிகர் தமிழ் மூத்த இயக்குனர் சேரனுடன் ஒரு புதிய பெரிய படத்திற்காக இணைந்துள்ளார். இயக்குனர் சேரன் இயக்கத்தில் கிச்சா சுதீப் நடிக்கும் புதிய படம் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகி வருகிறது. இதற்கு தற்காலிகமாக ‘கிச்சா 47’ என்று பெயரிடப்பட்டுள்ளது. நடிகரின் பிறந்தநாளான நேற்று இந்த திட்டம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இப்படத்தின் […]

இலங்கை

மீட்கப்பட்ட பழ வியாபாரி : ஐவர் கைது

  • September 3, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் கல்வியங்காட்டு பகுதியில் ஆள்கடத்தலில் ஈடுப்பட்ட குற்றச்சாட்டில், கிளிநொச்சி , கனகாம்பிகை குளம், கரடிப்போக்கு சந்தி, பரந்தன் ஆகிய பகுதிகளை சேர்ந்த 21 மற்றும் 22 வயதுடைய ஐந்து இளைஞர்கள் கோப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்வியங்காட்டு பகுதியில் பழ வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபர் ஒருவர் , வான் ஒன்றில் வந்த கும்பலால் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக, நேற்றைய தினம் சனிக்கிழமை உறவினர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். கிளிநொச்சியில் இருந்து வான் ஒன்றில் யாழ்ப்பாணம் […]

வட அமெரிக்கா

கனடாவில் தேவாலயம் ஒன்றில் குண்டு பீதி: பதற்றத்தில் மக்கள்!

  • September 3, 2023
  • 0 Comments

கனடாவின் றொரன்டோவில் அமைந்துள்ள தேவாலயமொன்றில் குண்டுப் பீதி காரணமாக மக்கள் அச்சமடைந்திருந்தனர். ரொறன்ரோவின் நோர்த் யோர்க் பகுதி தேவாலயம் ஒன்றில் குண்டு வைக்கப்பட்டதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து மக்கள் பதற்றமடைந்தனர். இருப்பினும், பொலிஸார் மேற்கொண்ட சோதனைகளின் பின்னர் இந்த தகவல் ஓர் போலியான தகவல் என்பது தெரிய வந்துள்ளது.பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தனர். இந்த குண்டு தொடர்பான தகவல் வெளியான போது தேவாலயத்திற்குள் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது பற்றிய விபரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.எவ்வாறெனினும் […]

மத்திய கிழக்கு

உலகெங்கிலும் உள்ள தூதர்களை திரும்ப அழைத்துக் கொண்ட நைஜீரிய ஜனாதிபதி

  • September 3, 2023
  • 0 Comments

உலகெங்கிலும் உள்ள நைஜீரியாவின் தூதர்களை திரும்ப அழைக்க ஜனாதிபதி போலா டினுபு உத்தரவிட்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியின் செய்தித் தொடர்பாளர் Ajuri Ngelale தெரிவிக்கையில், குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் வருங்கால பார்வையாளர்களுக்கு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சேவைகளை வழங்குவதன் மூலம் உலகத் தரம் வாய்ந்த செயல்திறன் மற்றும் தரம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதில் ஜனாதிபதி உறுதியாக உள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அனைத்து தூதர்களையும் திரும்ப அழைத்த நிலையில், நைஜீரியாவின் நியூயார்க் மற்றும் ஜெனிவாவில் உள்ள […]

தமிழ்நாடு

டிரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்க்ளேவின் 2ம் பதிப்பில் இவ் ஆண்டுக்கான மாணவர் முயற்சியாளர் விருது

  • September 3, 2023
  • 0 Comments

ட்ரான்ஸ்பார்மிங் இந்தியா கான்க்ளேவ் 2023 நிகழ்ச்சியில் – மாணவர்களின் கண்ணைக் கவர்ந்த லேசர் ஷோ.கோவை பட்டினம் பகுதியில் உள்ள SSVM நிறுவனங்கள் ட்ரான்ஸ்ஃபார்மிங் இந்தியா கான்க்ளேவ் 2023″க்கு நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். பல்வேறு துறைகளில் இருந்து ஏண்டர் பிரனவ்,டிஜிட்டல் கிரியேட்டர்,போர்ட் கம்பெனியின் CEO ,காமெடி”என பல்வேறு துறைகளில் இருந்து வல்லுநர்கள் கலந்து கொண்டு மாணவர்களுடன் கலந்துரையாடினர். இதனை தொடர்ந்து 15″ நிமிடங்களுக்கு மேலாக லேசர் சோ நிகழ்ச்சி […]

இலங்கை

இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை (SLTDA) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிபரங்களின்படி, இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை இந்த ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் திகதி 900,000 ஐத் தாண்டியுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை,, இந்த ஆண்டு இதுவரை 900,708 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வந்துள்ளனர், இது 2022 ஆம் ஆண்டு முழுவதுமாக பதிவான 719,978 மொத்த வருகைகளுடன் ஒப்பிடுகையில் அதிகரித்துள்ளது. இலங்கையின் சுற்றுலாத் துறையானது 2023 ஆம் ஆண்டில் 2 மில்லியன் பார்வையாளர்களை ஈர்ப்பதை நோக்கமாகக் […]

இந்தியா

இந்தியாவில் மின்னல் தாக்கி 08 பேர் உயிரிழப்பு!

  • September 3, 2023
  • 0 Comments

இந்தியாவின் பல மாவட்டங்களில் மின்னல் தாக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எதிர்வரும் 04 நாட்களுக்கு இந்தியாவின், பல மாவட்டங்களில் மின்னல் விபத்துக்கள் தொடர்பில் அவதானம் செலுத்துமாறும் அந்நாட்டின் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தவிர, அடுத்த 48 மணித்தியாலங்களில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகக் கூடும் என அந்நாட்டு வானிலை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

உலகம்

ஹவாய் காட்டு தீ : 385 பேர் மாயம்!

அமெரிக்காவின் ஹவாய் மாகாணம் மாவி தீவில் மாவி தீவில் காட்டுத் தீ ஏற்பட்ட பகுதிகளில் இன்னும் 385 பேரைக் காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். அமெரிக்காவில் உள்ள மாவி தீவில் கடந்த ஒரு மாதமாக காட்டுத் தீ வேகமாக பரவி வருகிறது. இதில் லஹேனா நகரம் உள்ளிட்ட பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. லஹேனாவில் 13,000 கட்டடங்கள் சேதமடைந்தன. மேற்கு மாவி பகுதியில் 2,200 கட்டடங்கள் சேதமடைந்தன. இது குறித்து மாவி காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: “மாவி […]

இலங்கை

இலங்கையில் ஆபத்தில் இருக்கும் மக்கள்!

  • September 3, 2023
  • 0 Comments

நாட்டின் மக்கள் தொகையில் 55 சதவீதம் பேர் கல்வி, சுகாதாரம், பேரிடர் மற்றும் வாழ்க்கை நிலைமைகள் போன்றவற்றில் ஆபத்தில் இருப்பதாக சமீபத்திய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தித் திட்டமும், ஒக்ஸ்போர்ட் வறுமை மற்றும் மனித அபிவிருத்திப் பிரிவும் இணைந்து நடத்திய ஆய்வில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் தாக்கம் தொடர்பாக கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் இந்த வருடம் மார்ச் மாதம் வரை பல்வேறு அம்சங்களில் […]