ஐரோப்பா

இத்தாலியில் கரடியால் ஏற்பட்டுள்ள சர்ச்சை

  • September 4, 2023
  • 0 Comments

இத்தாலியின் சான் செபாஸ்டியானோ டெய் மார்சி நகரத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட கரடி இரண்டு குட்டிகளுடன் சுற்றித் திரிவது காணொளி எடுக்கப்பட்டு வைரலாக்கப்பட்டது. இந்த வாரம் ஆரம்பத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அமரேனா என்ற பெண் கரடியை பயத்தின் காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஒருவர் கூறியுள்ளார். எந்த கரடியும் குடியிருப்பாளர்களை எந்த ஆபத்தும் கொண்டு வரவில்லை என உள்ளூர் ஆளுநர் மார்கோ மார்சிலியோ கூறினார். இந்தக் கரடியின் இரு குட்டிகளையும் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் […]

இலங்கை

இலங்கையில் எரிவாயுவின் விலையில் கணிசமான அதிகரிப்பு ஏற்படும் அபாயம்!

  • September 4, 2023
  • 0 Comments

இலங்கையில் எரிவாயுவின் விலையில் கணிசமான அதிகரிப்பை எதிர்பார்ப்பதாக லிட்ரோ நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. இம்முறை விலை திருத்தத்தில் இந்த மாற்றம் ஏற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விலை சூத்திரத்தின் படி, இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ எரிவாயுவின் விலை திருத்தம் மேற்கொள்ளப்படும் என அதன் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார். உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரிப்பை கருத்திற்கொண்டு இந்த வருடம் இலங்கையில் எரிவாயு விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்படும் என முதித பீரிஸ் குறிப்பிட்டுள்ளார். ஓகஸ்ட் 4 ஆம் திகதி […]

ஐரோப்பா

ஸ்பெயினில் ஒரே இரவில் பெய்த கனமழை – வீதிகளில் வெள்ளப்பெருக்கு

  • September 4, 2023
  • 0 Comments

ஸ்பெயினில் ஒரே இரவில் பெய்த கன மழையின் காரணமாக மக்கள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர். அங்குள்ள வீதிகளிலும் சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஸ்பெயினின் கிழக்கு கடற்கரை பகுதியில் உள்ள அல்கானார் மற்றும் டாரகோனாவில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் பொதுமக்கள் தங்களின் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர். இதனிடையே பொதுமக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து கொள்ளுமாறு அரசு அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். ஸ்பெயினின் தேசிய வானிலை மையம் கேட்டலோனியா உள்ளிட்ட பிற பகுதிகளுக்கு புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் குறைந்த ஊதியம் வழங்கும் முதலாளிகளை தண்டிக்க புதிய சட்டம்

  • September 4, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் ஊழியர்களுக்கு தெரிந்தே குறைந்த ஊதியம் வழங்கும் முதலாளிகளை தண்டிக்கும் சட்டத்தில் புதிய திருத்தங்கள் இன்று மத்திய பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும். இந்த திருத்தங்களில் அதிக அபராதம் விதிக்கப்படும் என்று பணியிட உறவுகள் அமைச்சர் டோனி பர்க் கூறினார். புதிய விதிகளில் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் $7.8 மில்லியன் அபராதம் ஆகியவை அடங்கும். சில பணியிட உரிமையாளர்கள் உரிய ஊதியத்தை வழங்குவதைத் தவிர்ப்பதற்காக பல சட்ட ஓட்டைகளைப் பயன்படுத்தி வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். எவ்வாறாயினும், இந்த […]

இலங்கை

இலங்கையை அச்சுறுத்தும் மற்றுமொரு ஆபத்து!

  • September 4, 2023
  • 0 Comments

இலங்கையில் நிலவிவரும் மழையுடனான வானிலை காரணமாக தற்போது டெங்கு நோய் பரவல் தீவிரமடைந்து வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் 62 ஆயிரத்து 29 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் மேல் மாகாணத்தில் 30 ஆயிரத்து 271 டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இந்தநிலையில், எதிர்வரும் வாரங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தேசிய டெங்கு […]

ஐரோப்பா

பிரான்ஸில் அச்சுறுத்தும் ஆபத்தான கொவிட் திரிபு – சுகாதார பிரிவினர் எச்சரிக்கை

  • September 4, 2023
  • 0 Comments

பிரான்ஸில் கொவிட் 19 வைரசின் புதிய திரிபு ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொவிட் 19 வைரசின் ஒரு பிரிவான ஒமிக்ரோனில் (Omicron) இருந்து இந்த புதிய வைரஸ் திரிவடைந்துள்ளது. அதற்கு BA.2.86 என பெயரிடப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த வாரத்தில் ஐரோப்பாவின் சில நகரங்களில் இந்த திரிபு கண்டறியப்பட்டிருந்தது இந்த நிலையில், Grand Est மாகாணத்தில் முதன்முறையாக இந்த வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. மீஇந்த புதிய திரிபு ஆபத்தான ஒன்றாக இருதப்பட்டாலும், […]

இலங்கை

ஜெர்மனி அரச சேவைகளினால் கடும் நெருக்கடியில் மக்கள்

  • September 4, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் அரச பொது சேவைகளில் பொது மக்களுக்கான சேவைகள் பாதிப்பு அடைந்து வருகின்றன. ஜெர்மனியில் அரச நிர்வாகங்களால் சில கால தாமதங்கள் ஏற்படுவதால் பொதுமக்கள் சிரமத்தை எதிர் கொள்கின்றனர். அதனால் அரச நிர்வாக கட்டமைப்பை சில மறுசீரமைப்பை மேற்கொள்வதற்காக ஜெர்மனியின் ஆளும் கூட்டு கட்சியானது புதிய சட்ட நகலை வெளியிட்டுள்ளது. குறிப்பாக எவர் ஒருவர் ஹொட் டேல் என்று சொல்லப்படுகின்ற இருப்பிடத்துக்கு செல்லும் பொழுது ஜெர்மன் பிரஜையானவர் வதிவிட பதிவு விண்ணப்ப பத்திரம் ஒன்றை பூர்த்தி […]

இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களினால் ஏற்பட்டுள்ள நன்மை

  • September 4, 2023
  • 0 Comments

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களினால் அனுப்பி வைக்கப்பட்ட நிதி கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜூலை மாதம் இந்த பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த மாதத்தில் 54 கோடியே 10 லட்சம் அமெரிக்க டொலர் பெறுமதியான நிதி அனுப்பி இலங்கைக்கு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் 27 கோடியே 90 லட்சம் அமெரிக்க டொலர்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக பதிவாகியுள்ளது. இந்த நிலையில், இந்த வருடத்தின் முதல் […]

உலகம் செய்தி

முகத்தில் பச்சை குத்திய காதலனின் கொடூரம்; இளம் பெண்ணுக்கு உதவிய அந்நிய நபர்

  • September 3, 2023
  • 0 Comments

முகத்தில் பச்சை குத்தியதால் வாழ்க்கையே பாழாகிய அமெரிக்கப் பெண்ணான டெய்லர் ஒயிட் என்பவருக்கு ஒரு இளம் அந்நியர் உதவியுள்ளார். முழு முகத்தில் பச்சை குத்திய பிறகு, டெய்லர் ஒயிட் வேலை கிடைக்காமல் எல்லா இடங்களிலும் இருந்து நீக்கப்பட்டார். டிக் டோக் மூலம் டெய்லர் ஒயிட் தனது உடல்நிலையை வெளிப்படுத்தியபோது உலகுக்குத் தெரிந்தது. 21 வயதில் ஒயிட்டின் வாழ்க்கை மாறியது. பிறந்தநாள் பார்ட்டிக்காக தனது காதலனுடன் மதுபான விடுதிக்குச் சென்றபின் டெய்லர் ஒயிட் மயக்கமடைந்தார், பின்னர் காதலன் அவள் […]

உலகம் செய்தி

கல்லால் அடித்துக்கொல்லப்பட்ட இளம் பெண்!! பாகிஸ்தானில் நடந்த கொடூரம்

  • September 3, 2023
  • 0 Comments

இதுபோன்ற பல செய்திகள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து வருகின்றன, அவை கேட்கும் போது நெஞ்சை பதற வைக்கின்றன. செப்டம்பர் 3ஆம் திகதி (ஞாயிற்றுக்கிழமை) நடந்த சம்பவம் குறித்து தகவல் அளித்த பொலிஸார், விபச்சாரக் குற்றச்சாட்டின் பேரில் பெண் ஒருவர் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டதாகக் கூறினர். லாகூரில் இருந்து சுமார் 500 கிமீ தொலைவில் உள்ள பஞ்சாபின் ராஜன்பூர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்ததாக பொலிசார் தெரிவித்தனர். பெண்ணின் கணவர் குற்றம் சாட்டினார் 20 வயதுடைய […]