இலங்கை செய்தி

முரளியில் “800” திரைப்படத்தின் டிரைலர் வெளியானது

  • September 5, 2023
  • 0 Comments

உலகின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து உருவாகியுள்ள “800” திரைப்படத்தின் டிரைலர் இன்று இந்தியாவின் மும்பையில் வெளியிடப்பட்டது. இதற்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தலைமை தாங்கினார். முரளி – அவரது மனைவி மதிமலர் மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் எம்.எஸ். ஸ்ரீபதியின் ‘800’ படத்தின் திரைக்கதையையும் அவரே எழுதி, முரளி வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதியை […]

இலங்கை செய்தி

இளம் பெண்ணை தேடிவந்த நபர் அடித்துக் கொலை

  • September 5, 2023
  • 0 Comments

மாத்தறை, ரொடும்ப பிரதேசத்தில் வசிக்கும் பட்டதாரி இளம்பெண் ஒருவரை கடத்த வந்ததாக கூறப்படும் நபர் ஒருவர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார். இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த சுதத் பிரசன்ன என்ற 39 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். உயிரிழந்த நபருக்கும் பட்டதாரிக்கும் இடையில் நட்புறவு இருந்ததாகவும், அந்த நட்பின் அடிப்படையிலேயே அவரை அழைத்துச் செல்ல வந்ததாகவும் ரொடும்ப பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பட்டதாரியின் தந்தை மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை செய்தி

மசாஜ் நிலையம் சென்ற நபர் திடீரென உயிரிழப்பு

  • September 5, 2023
  • 0 Comments

நீர்கொழும்பில் உள்ள மசாஜ் நிலையத்தில் சேவை பெற்றுக் கொண்டிருந்த நடுத்தர வயது நபர் ஒருவர் திடீரென சுகவீனமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என நீர்கொழும்பு பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த நபர் நேற்று நள்ளிரவு 12.00 மணியளவில் 1919 அவசர நோயாளர் காவு வண்டி மூலம் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் தெரிவித்தார்.

ஐரோப்பா செய்தி

பொலிஸ் நாயின் உயிரை பறித்த இளைஞர் உயிரை பறிகொடுத்த சோகம்

  • September 5, 2023
  • 0 Comments

ஜார்ஜியாவில் பொலிஸ் நாயைக் கொன்று, அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்ட 17 வயது சிறுவன் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். கிளேட்டன் கவுண்டி காவல் துறை அந்த வாலிபரை ஸ்டீபன் ஃபோர்டு என அடையாளம் கண்டுள்ளது. அதிகாலை 2 மணிக்கு முன்னதாகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோட்டலில் மூன்று பேர் சம்பந்தப்பட்ட சந்தேகத்திற்கிடமான சம்பவம் குறித்த புகாருக்கு ஜோன்ஸ்போரோ காவல் துறை உடனடியாக பதிலளித்தது, மேலும் மூவரும் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர். பின்னர், இரண்டு […]

இலங்கை செய்தி

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி நாளை ஆரம்பம்

  • September 5, 2023
  • 0 Comments

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி நாளை (06.09.2023) காலை 7.30 மணிக்கு ஆரம்பிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் பகுதிக்கு இன்று மாலை விஜயம் மேற்கொண்ட முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி த.பிரதீபன், தொல்பொருள் சிரேஸ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ, முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி க.வாசுதேவ, யாழ்ப்பாணம் சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன், சட்டத்தரணிகளான ரணித்தா ஞானராசா, வி.கே.நிறஞ்சன், கொக்குளாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, தடயவியல் பொலிஸ் பொறுப்பதிகாரி, முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் […]

ஆசியா செய்தி

கணவர் கடத்தப்பட்டதாக பாகிஸ்தான் டிக்டாக் நட்சத்திரம் குற்றச்சாட்டு

  • September 5, 2023
  • 0 Comments

பாகிஸ்தானின் டிக்டாக் நட்சத்திரம் ஹரீம் ஷா தனது கணவர் பிலால் ஷா ஏழு நாட்களுக்கு முன்பு லண்டனில் இருந்து கராச்சிக்கு வந்த பிறகு கடத்தப்பட்டதாகக் தெரிவித்துள்ளார். X இல் பகிரப்பட்ட ஒரு வீடியோவில், பிரபலமான TikToker தனது கணவர் “தெரியாத காரணங்களுக்காக கடத்தப்பட்டதாக” குற்றம் சாட்டியது மற்றும் இந்த விஷயத்தை விசாரிக்க பாகிஸ்தானின் உளவுத்துறை நிறுவனத்தை வலியுறுத்தியுள்ளார். தம்பதியினர் லண்டனில் இருப்பதாகவும், ஆனால் அவரது கணவர் சில வேலைகளுக்காக பாகிஸ்தானுக்குத் திரும்பிச் செல்ல வேண்டும் என்றும் அவர் […]

பொழுதுபோக்கு

காதல் கணவரை பிரிந்தாரா சுவாதி? வாய்திறந்த நடிகை..

  • September 5, 2023
  • 0 Comments

ஜெய், சசிகுமார் நடிப்பில் 2008 -ம் ஆண்டு வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் சுவாதி ரெட்டி. முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களை கவர்ந்த இவர் இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் நடித்து வந்தார். சுவாதி ரெட்டி கடந்த 2018 -ம் ஆண்டு கேரளாவை சேர்ந்த விகாஸ் வாசுவை என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் ஸ்வாதி ரெட்டி தனது காதல் கணவரை விவகாரத்து செய்ய போகிறார் என […]

இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி யாழில் பல்வேறு தரப்பினருடன் முக்கிய சந்திப்பு!

ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மார்க் ஆண்ட்ரே பிராஞ் (Marc-André Franche) யாழ்ப்பாண மாவட்டத்திற்கு நேற்று திங்கட்கிழமை விஜயம் செய்துள்ளார். அத்துடன் இன்று செவ்வாய்க்கிழமை பல்வேறுபட்ட சந்திப்பில் ஈடுபட்டார். யாழ்ப்பாண மாவட்ட செயலாளருடன் கலந்துரையாடல் ஐக்கிய நாடுகளின் வதிவிடப்பிரதிநிதிக்கும் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரனுக்கும் இடையிலான யாழ்ப்பாண மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பான விரிவான கலந்துரையாடல் இன்றைய தினம் (05) காலை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க […]

ஆஸ்திரேலியா செய்தி

பெண்ணின் அடிவயிற்றில் காணப்பட்ட அறுவை சிகிச்சை கருவி

  • September 5, 2023
  • 0 Comments

நியூசிலாந்தில் ஒரு மருத்துவமனையில் அறுவைசிகிச்சைக்குப் பிறகு ஒரு பெண்ணின் அடிவயிற்றில் திறந்த அறுவை சிகிச்சைக் காயங்களைப் பிடிக்கப் பயன்படும் கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப் பெண் 18 மாதங்களாக கடுமையான வலியால் அவதிப்பட்டதாகவும், இரவு உணவுத் தட்டின் அளவுள்ள ரிட்ராக்டர், CT ஸ்கேன் செய்தபோது மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டது. “எந்தவொரு வழக்கமான அறுவை சிகிச்சை சோதனையின்போதும் [ரிட்ராக்டர்] அடையாளம் காணப்படாததால், வழங்கப்பட்ட கவனிப்பு பொருத்தமான தரத்திற்கு கீழே குறைந்துவிட்டது என்பது சுயமாகத் தெரிகிறது, இதன் விளைவாக அது பெண்ணின் […]

இலங்கை

கண் வில்லைகள் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்ட முக்கிய தகவல்!

நாட்டில் கண் வில்லைகளுக்கு தட்டுப்பாடு இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மருந்துப்பொருட்கள் விநியோகப் பிரிவின் களஞ்சியசாலைகளில் மாத்திரமே கண் வில்லைகள் களஞ்சியப்படுத்தப்பட்டிருப்பதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் விஜேசூரிய குறிப்பிட்டுள்ளார். நாட்டின் வைத்தியசாலை கட்டமைப்பிற்குள் கண் வில்லை சத்திரசிகிச்சைகள் வழமை போன்றே மேற்கொள்ளப்படுவதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் பொது முகாமையாளர் தினுஷ தசநாயக்க தெரிவித்துள்ளார். இதனிடையே, நாட்டில் 160 வகையான மருந்துகளுக்கு தொடர்ந்தும் தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்த மருந்துகளை […]