ஐரோப்பா

ரஷ்ய சைபர் கும்பலுக்கு தடை விதித்த இங்கிலாந்து!

  • September 7, 2023
  • 0 Comments

ரஷ்ய சைபர் கிரைம் கும்பலுக்கு இங்கிலாந்து தடை விதித்துள்ளது. இதன்படி குற்றக் கும்பலை சேர்ந்த 11 பேர் மீது பிரித்தானியா தடை வித்துள்ளது. ‘இந்த சைபர் குற்றவாளிகள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளாமல்  அதிகபட்ச சேதத்தை ஏற்படுத்தவும் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து பணம் பறிக்கவும் முயற்சிப்பதாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி தெரிவித்துள்ளார். ‘அவர்களின் அடையாளங்களை அம்பலப்படுத்துவதன் மூலம்   அவர்களின் வணிக மாதிரிகளை சீர்குலைத்து  நிறுவனங்களை குறிவைப்பதை தடுக்கலாம் எனத் தெரிவித்துள்ளார். குறித்த சைபர் தாக்குதலில் ஈடுபட்ட குழுவினர் பிரித்தானியாவின் மருத்துவமனைகள் […]

ஐரோப்பா

உக்ரைனின் புதிய பாதுகாப்பு அமைச்சராக ரஸ்டெம் உமெரோவ் நியமனம்

  • September 7, 2023
  • 0 Comments

உக்ரைனின் புதிய பாதுகாப்பு அமைச்சராக ரஸ்டெம் உமெரோவ் நியமிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சரான ஒலெக்சி ரெஸ்னிகோவை மாற்றுவதற்கு ஜனாதிபதி ஜெலென்ஸ்கி முன்மொழிந்ததைத் தொடர்ந்து, ரஸ்டெம் உமெரோவை நியமிக்க உக்ரைன் பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது.இந்நிலையில், ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அவரை புதிய பாதுகாப்பு அமைச்சராக அறிவித்து பதவி பிரமாணம் செய்து வைத்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், ‘இன்று உக்ரைனின் புதிய பாதுகாப்பு அமைச்சர் ரஸ்டெம் உமெரோவை அறிமுகப்படுத்தினேன். அவரது முன்னுரிமைப் பணிகள் முழு பாதுகாப்புத் துறைக்கான அமைச்சகத்தின் மூலோபாய மற்றும் […]

இலங்கை

கீரி சம்பா அரசிக்கு தட்டுப்பாடு!

  • September 7, 2023
  • 0 Comments

நாடு முழுவதும் பல பிரதேசங்களில் கீரி சம்பா அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் கீரி சம்பா அரிசி இருப்பு வைத்துள்ள சில தொழிலதிபர்கள், கட்டுப்பாட்டு விலையை மீறி 300 முதல் 325 ரூபாய் வரையில் விற்பனை செய்து வருவதாக கூறப்படுகிறது. அத்துடன் அரிசி ஆலை உரிமையாளர்கள்   அதிகபட்ச சில்லறை விலைக்கு ஒத்த விலையில் அரிசியை விற்பனை செய்து வருவதால், அதிக லாபம் கிடைப்பதில்லை என  அரிசி விற்பனை செய்யும் வியாபாரிகள் கூறுகின்றனர்.

இலங்கை

உள்நாட்டு இறைவரி  சட்டமூலம் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்!

  • September 7, 2023
  • 0 Comments

உள்நாட்டு இறைவரி  சட்டமூலம்  45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்த வாக்கெடுப்பு இன்று (07.09) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.  அதன்படி, குறித்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 103 வாக்குகளும் எதிராக 58 வாக்குகளும் கிடைத்துள்ளன. இந்த உத்தேச சட்டமூலம் பல வரிகளை திருத்தியமைப்பதுடன் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு மேலும் அதிகாரமளிக்கும் என தேசிய மக்கள் சக்தியின் (NPP) செயற்பாட்டாளரான சதுரங்க அபேசிங்க உள்ளிட்ட இருவர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். இதனையடுத்து  நீதிமன்றத்தில் சவால் செய்யப்பட்ட குறித்த சட்டமூலம் அல்லது […]

இந்தியா

இந்தியாவிற்கு விஜயம் செய்யும் ஜோ பைடன்! பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

இந்தியாவில் நடைபெறும் ஜி 20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோபைடன் நாளை டெல்லிக்கு வருகை தரவுள்ளார். இந்தியாவில் முதன் முறையாக ஜி20 மாநாடு நடைபெறுகிறது. இதில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய‌ நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். இது தவிர சிறப்பு அழைப்பாளர்களாக வங்கதேசம், […]

இந்தியா

சீமான் மீது பிரபல நடிகை கொடுத்த புகார் : கீழ்பாக்கம் மருத்துவமனையில் பரிசோதனை!

  • September 7, 2023
  • 0 Comments

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பாலியல் முறைப்பாடு அளித்துள்ளார்.  இது குறித்து மகளிர் பொலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பில் விஜயலெட்சுமி அளித்துள்ள பேட்டியில்,  7 முறை கருக்கலைப்பு செய்யப்பட்டதாக குற்றம் சாட்டி இருந்தார். இது தொடர்பாக பொலிஸ் விசாரணையிலும் அவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். அத்துடன் திருவள்ளுர் நீதிமன்றத்திலும் முன்னிலையாகி வாக்குமூலம் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் சீமானுக்கு எதிரான முறைப்பாடு […]

ஐரோப்பா

குற்றவாளியை பிரித்தானியாவுக்கு நாடுகடத்த மறுப்பு தெரிவித்துள்ள ஜேர்மனி…

  • September 7, 2023
  • 0 Comments

போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்ட விரோத பணப்பரிமாற்றம் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட ஒருவரை பிரித்தானியாவுக்கு நாடுகடத்த ஜேர்மனி மறுத்துவிட்டது. பிரித்தானியாவில் வாழ்ந்துவந்த அல்பேனியா நாட்டவர் ஒருவர் மீது, சுமார் 5 கிலோ கொக்கைன் கடத்தியது மற்றும் சுமார் 330,000 பவுண்டுகள் சட்ட விரோதப் பணப்பரிமாற்றம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரது காதலி மோசமாக நோய்வாய்ப்பட்டதால் அவர் ஜேர்மனிக்குச் சென்றுவிட்டார். தற்போது அவரை பிரித்தானியாவுக்கு திருப்பி அனுப்பும்படி பிரித்தானிய அதிகாரிகள் கோரியுள்ளார்கள்.ஆனால், அவரை பிரித்தானியாவுக்கு நாடுகடத்த ஜேர்மனி மறுத்துவிட்டது. […]

இலங்கை

தடுப்பூசி விஷமானதில் நான்கு மாத குழந்தை உயிரிழப்பு!

  • September 7, 2023
  • 0 Comments

வெலிகம – நலவன பகுதியில் தடுப்பூசி செலுத்தப்பட்டதன் பின்னர், 4 மாத குழந்தையொன்று உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இக்குழந்தைக்கு செலுத்தப்பட்ட தடுப்பூசி விஷமானமையே இறப்புக்கான காரணம் என குழந்தையின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். குறித்த தடுப்பூசியானது கடந்த 2 ஆம் திகதி இக் குழந்தைக்கு  வெலிபிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தில் செலுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, குழந்தைக்கு ஏற்பட்ட கடும் குளிர் காரணமாக 05ம் திகதி இமதுவ ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் நிலமை […]

இலங்கை

முல்லைத்தீவில் கைக்குண்டு வெடித்தத்தில் இருவர் படுகாயம்!

முல்லைத்தீவு – மாங்குளம் – நீதிபுரம் பகுதியில் கைக்குண்டு ஒன்று வெடித்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. காயமடைந்தவர்களில் 7 வயது சிறுவன் ஒருவனும் அடங்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்தியா

ஆதித்யா எல்-1 விண்கலம் எடுத்துள்ள புகைப்படம்!

  • September 7, 2023
  • 0 Comments

சூரியனை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ விண்வெளி ஆய்வு நிறுவனத்தினால் கடந்த 02 ஆம் திகதி அனுப்பப்பட்ட ‘ஆதித்யா எல்-1 விண்கலம் வெற்றிகரமாக தனது பயணத்தை தொடர்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பூமியில் இருந்து புறப்பட்ட 1 மணி நேரம் 3 நிமிடங்களில் ரொக்கெட்டில் இருந்து ‘ஆதித்யா எல்1’ விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து சென்று புவிவட்டப்பாதையில் தனது பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  விண்கலத்தின் சுற்றுவட்டபாதை படிப்படியாக உயர்த்தப்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த நிலையில் ‘ஆதித்யா எல்-1’ விண்கலத்தில் […]