இந்தியா

சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற தென்கொரிய பெண் கைது

நேபாள எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேச மாநிலம் பஹ்ரைக் மாவட்டத்தில் உள்ள ரூபைதிகா பகுதி அருகே நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் போலீசார் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது பெயர் பார்க் செர்யோன்(வயது 54) என்பதும், அவர் தென் கொரியா நாட்டில் உள்ள சியோல் நகரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. அவரிடம் உரிய […]

உலகம்

பங்களாதேஷில் மீண்டும் வெடித்த வன்முறை

  • March 24, 2025
  • 0 Comments

பங்களாதேஷ் இராணுவம், அரசியலில் தலையிடுவதாகக் குற்றஞ்சாட்டி மாணவர்கள் தலைமையிலான புதிய அரசியல் கட்சி இராணுவத்திற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த வருடம் பங்களாதேஷில் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுத்த மாணவர்கள் ஒன்றிணைந்து, தேசிய குடிமக்கள் கட்சி என்ற புதிய அரசியல் கட்சியை ஆரம்பித்தனர் . இந்நிலையில், பங்களாதேஷ் அரசியலில் அந்நாட்டு இராணுவம் குறுக்கிடுவதாக அக்கட்சியினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். தேசிய குடிமக்கள் கட்சியின் தலைவர் ஹஸ்னத் அப்துல்லா, இது தொடர்பாக தன் சமூக […]

இலங்கை

இலங்கையில் போக்குவரத்து அபாரதங்களை செலுத்த புதிய நடைமுறை

  • March 24, 2025
  • 0 Comments

இலங்கையில் போக்குவரத்து அபராதங்களை Govpay மூலம் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்துள்ளது. வாகன சாரதிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் Govpay மூலம் போக்குவரத்து அபராதங்களை மிக விரைவில் செலுத்த முடியும் என இலங்கை தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனத்தின் பணிப்பாளர் ஹர்ஷ புரசிங்க குறிப்பிட்டுள்ளார். இதன்படி, இது குறித்த அடிப்படை பணிகள் நிறுவனத்தால் முடிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் ஒரு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் Govpayவை அறிமுகப்படுத்தியபோது, […]

இலங்கை

இலங்கை: உழவு வண்டி எனக் கூறி இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு கார்கள்!

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி சொகுசு கார்கள் உட்பட ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கோபா குழுவின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. உழவு வண்டியை இறக்குமதி செய்வதாகத் தெரிவித்து சொகுசு கார்களை இறக்குமதி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. மோட்டார் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் கோபா குழுவின் முன் அழைக்கப்பட்ட போது இந்த உண்மைகள் தெரியவந்துள்ளன.

பொழுதுபோக்கு

விவாகரத்து வழக்கு – ஒரே காரில் கோர்ட்டுக்கு வந்த ஜி.வி. பிரகாஷ், சைந்தவி

  • March 24, 2025
  • 0 Comments

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ் குமார். பின்னணிப் பாடகி சைந்தவியை படிக்கும் காலத்திலிருந்து காதலித்து 2013ல் திருமணம் செய்தார். இவர்களுக்கு அன்வி என்ற மகள் உள்ளார். 10 ஆண்டுகளாக இவர்களது வாழ்க்கை சுமூகமாக சென்ற நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையினால் கடந்தாண்டு மே மாதம் பிரிவதாக அறிவித்தனர். அதேசமயம் இருவரும் நட்பை தொடருகின்றனர். ஜிவி பிரகாஷின் இசையில் சைந்தவியும் பங்கேற்று பாடினார். இந்நிலையில் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை, […]

பொழுதுபோக்கு

“குட் பேட் அக்லி”யின் இரண்டாவது பாடல் குறித்து குட் நியுஸ்

  • March 24, 2025
  • 0 Comments

ஆதிக் ரவிச்சந்திரன் – அஜித் குமார் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தில் அஜித்துடன் இணைந்து த்ரிஷா, சுனில், பிரசன்னா, அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மேலும். ஜிவி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சுமார் ரூ. 250 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இப்படம், உலகளவில் ரூ. 500 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சமீபத்தில் வெளிவந்த முதல் பாடல் வெறித்தனமாக இருந்தது. ஜி.வி. பிரகாஷ் மற்றும் ஆதிக் […]

ஐரோப்பா

பிரித்தானிய கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ள மர்ம உயிரினம்

  • March 24, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் கடற்கரையில் மணல்பரப்பில் இருந்த எலும்புக்கூடு போன்ற உருவத்தை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 10 ஆம் திகதி பவுலா மற்றும் டேவ் ரீகன் இங்கிலாந்தின் கென்ட் பகுதியில் உள்ள கடற்கரைக்கு சென்றுள்ளனர். அங்கு இந்த எலும்புக்கூடு இருப்பதாக கண்டு, அதனை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இது ஒரு மீனின் வால் மற்றும் வேற்றுகிரகவாசி போன்ற உயிரினத்தின் உடல் மற்றும் தலையுடன் காட்சியளிக்கிறது. இப்புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பொழுதுபோக்கு

ஜனநாயகன் படம் குறித்து இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு

  • March 24, 2025
  • 0 Comments

வினோத் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் ‘ஜனநாயகன்’. தீவிர அரசியலில் இறங்க உள்ளதால் இந்தப் படத்துடன் தன்னுடைய நடிப்பு வாழ்க்கையைத் தியாகம் செய்ய உள்ளார் விஜய். அதனால், இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. தேர்தலுக்கு முந்தைய படம் என்பதால் இப்படத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான கருத்துக்கள் நிறைய இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் தலைப்பே இது ஒரு அரசியல் படம் என்பதைப் புரிய வைக்கும். அதே சமயத்தில் தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்து வெளிவந்த […]

இந்தியா

ஐரோப்பாவில் கார் பந்தயத்தில் சாதனை படைத்த நடிகர் அஜித்குமார்

  • March 24, 2025
  • 0 Comments

இத்தாலியில் நடைபெற்ற 12H கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் மூன்றாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். அஜித் திரைத்துறையில் மட்டுமல்லாது கார் பந்தயத்திலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார். அதன்படி ஆண்டின் தொடக்கத்தில் துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் அஜித் குமாரின் அணி மூன்றாவது இடத்தை பிடித்தது. அதனைத் தொடர்ந்து போர்த்துகலில் நடைபெற்ற போட்டியிலும் பங்கேற்றது. இந்நிலையில், இத்தாலியில் நடைபெற்ற 12வது மிச்செலின் முகெல்லோ கார் பந்தயத்தில் நடிகர் அஜித் குமார் அணிக்கு 3வது இடம் […]

இலங்கை

முன்னாள் ஜனாதிபதி ரணிலின் பிறந்தநாளுக்கு விருந்து வைத்த சீன தூதர்

  • March 24, 2025
  • 0 Comments

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கேவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் வகையில், இலங்கைக்கான சீனத் தூதர் குய் ஜென் ஹாங் கொழும்பில் அவருக்கு இரவு விருந்து அளித்தார். இந்த நிகழ்வில் முன்னாள் முதல் பெண்மணி பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவும் பங்கேற்றார். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிறந்தநாள் இன்றைய தினம் கொண்டாடப்படும் நிலையில் சீனத் தூதர் நேற்றைய தினமே கொண்டாடியுள்ளனர்.