1.9 மில்லியன் வீடியோக்களை அகற்றிய YouTube
உலகளவில் நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் வீடியோ ஸ்ட்ரீமிங் பிளாட்ஃபார்மான யூடியூப், இந்தியாவில் மட்டுமே இந்த ஆண்டு (2023) ஜனவரி – மார்ச் காலாண்டில் சுமார் 1.9 மில்லியனுக்கும் மேற்பட்ட வீடியோக்களை அதன் பிளாட்ஃபார்மிலிருந்து நீக்கியுள்ளது. வேறு எந்த ஒரு நாட்டிலும் youTube-ல் இருந்து நீக்கப்பட்ட வீடியோக்களை விட இந்த எண்ணிக்கை அதிகம் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. யூடியூபின் Community Guidelines மீறப்பட்டதன் பின்னணியில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூகுளுக்கு சொந்தமான YouTube கூறி இருக்கிறது. […]