சினிமாவை மிஞ்சும் வெறியாட்டம் – 22 உயிரை காவு வாங்கிய குடும்ப பகை
மதுரையில் மாநகராட்சி முன்னாள் மண்டல தலைவர்கள் தி.மு.க.,வைச் சேர்ந்த வி.கே.குருசாமி, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜபாண்டி குடும்பத்தினர் இடையே அரசியலுக்காக துவங்கிய 22 ஆண்டு கால பகையில், இருதரப்பிலும் நேற்று முன்தினம் நடந்த படுகொலையுடன், 22 உயிர்கள் பலியாகி உள்ளன. சினிமாவை மிஞ்சும் இந்த கொலை வெறியாட்டம் மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மதுரை, மேலஅனுப்பானடியைச் சேர்ந்த, வி.கே.குருசாமியின் சகோதரி மகன் காளீஸ்வரன் என்ற கிளாமர் கார்த்திக், 32, தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் நேற்று முன்தினம் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். […]