வட அமெரிக்கா

கடையில் திருடியதாக கூறி 14 வயது சிறுவனை என்கவுண்டர் செய்த பொலிஸார்

  • June 12, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் 14 வயது ஆப்பிரிக்க-அமெரிக்க சிறுவனை போலிஸார் என்கவுண்டர் செய்யும் பரபரப்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. ஜோர்டெல் ரிச்சர்ட்சன் என்ற 14 வயது ஆப்பிரிக்க-அமெரிக்க சிறுவன் கடையில் பொருட்களைத் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு பொலிஸார் சிறுவனை விரட்டியுள்ளனர். பொலிஸார் நிற்க சொல்லியும் நிற்காமல் ஓடிய சிறுவனை ஒருவழியாக ஜேம்ஸ் என்ற காவலர் மடக்கிப் பிடித்து தரையில் படுக்க வைத்து அழுத்தியுள்ளார். வலி தாங்க முடியாத சிறுவன், காவலரிடம் கெஞ்சியுள்ளான். ஆனால், அடுத்து வந்த […]

ஐரோப்பா

ஸ்வீடன் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் இருவர் கைது!

  • June 12, 2023
  • 0 Comments

ஸ்வீடனின் தலைநகருக்கு தெற்கே உள்ள புறநகர் பகுதியான ஃபர்ஸ்டாவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் அடையாளம் தெரியாத வெளிநாட்டவர் ஒருவரும், இளம்பெண் ஒருவரும் உயிரிழந்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை முயற்சி என்று சந்தேகிக்கப்படுவதுடன், இது தொடர்பில் இருபது வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள நீதி அமைச்சர்  குன்னர் ஸ்ட்ரோம்மர், மொத்தம் 21 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும், இதை உள்நாட்டு பயங்கரவாதம் என்றும் விவரித்தார்.

ஐரோப்பா

அமெரிக்க கொடியுடன் பயணித்த கப்பலில் இருந்து மீட்கப்பட்ட 90 புலம்பெயர்ந்தோர்!

  • June 12, 2023
  • 0 Comments

அமெரிக்க கொடியுடன் பயணித்த கப்பலில் இருந்து 37 குழந்தைகள் உள்பட 90 புலம்பெயர்ந்தோர் மீட்கப்பட்டுள்ளதாக கிரீஸில் உள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த கப்பல் துருக்கியில் இருந்து இத்தாலிக்கு செல்ல இருந்ததாக நம்பப்படுகிறது. ஏதென்ஸுக்கு தென்மேற்கே சுமார் 250 கிலோமீட்டர் (155 மைல்) தொலைவில் உள்ள கிரேக்க தீவான கைதிராவில் இருந்து பேரிடர் அழைப்பு கிடைக்கப்பெற்றதை அடுத்து அதிகாரிகள் மீட்பு பணிகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த கப்பலில், ஆப்கானிஸ்தான், வங்கதேசம், பாகிஸ்தான், ஈராக், எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 35 ஆண்கள், […]

இலங்கை

காலியில் துப்பாக்கிச் சூடு! சந்தேக நபர் தப்பியோட்டம்

பொலிஸாரின் கைது நடவடிக்கையின் போது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. காலி, ஊரகஸ்மங்ஹந்திய பகுதியில் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவரை கைது செய்ய முற்பட்ட வேளை, பொலிஸாருடன் ஏற்பட்ட கைகலப்பை அடுத்து இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை

அமரகீர்த்தி அத்துகோரல கொலை – 42 பேருக்கு எதிராக வழக்கு

பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரல மற்றும் அவரது பாதுகாவலர் ஆகியோரை கொலை செய்த சம்பவம் தொடா்பில் குற்றம்சாட்டப்பட்டவா்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன்படி 42 சந்தேக நபர்களுக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய சட்டமா அதிபர் நடவடிக்கை எடுத்துள்ளார். கடந்த வருடம் நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையின் போது ,மே மாதம் 9ஆம் திகதி இந்தக் கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றிருந்தன.என்பது குறிப்பிடத்தக்கது.

ஐரோப்பா

பொரிஸ் ஜோன்சன் குறித்த விசாரணையை நிறைவுக்கு கொண்டவர ஒன்றுக்கூடும் நாடாளுமன்றக் குழு!

  • June 12, 2023
  • 0 Comments

பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொரிஸ் ஜோன்சன், தனது டவுனிங் ஸ்ட்ரீட் அலுவலகத்தில் கொவிட் கட்டுபாடுகளை மீறி பார்ட்டி வைத்த விவகாரத்தில் சட்டமியற்றுபவர்களை தவறாக வழிநடத்தினாரா என்பது குறித்த விசாரணையை இன்று (11) நிறைவுக்கு கொண்டுவரு நாடாளுமன்றக் குழு கூடுகிறது. பாராளுமன்றத்தின் சிறப்புரிமைக் குழுவின் உறுப்பினர்கள், கடந்த வெள்ளிக்கிழமை அன்று விசாரணையை தொடர உறுதியளித்துள்ளனர். இந்த குழு இன்று  தனது மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அறிக்கையை இறுதி செய்யும் என  எதிர்பார்க்கப்படுகிறது.  விசாரணை முடிவுகள் எதிர்வரும் நாட்களில் வெளியிடப்படலாம் எனத் […]

இலங்கை

ஆசிய விஞ்ஞானி 100 இல் நான்கு இலங்கையர்கள் தெரிவு!

ASIAN SCIENTIST 100 இதழின் 2023 பதிப்பில் நான்கு இலங்கையர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது. Asian Scientist Magazine என்பது ஒரு விருது பெற்ற அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இதழாகும், இது ஆசியாவின் R&D செய்திகளை உலகளாவிய பார்வையாளர்களுக்கு எடுத்துரைக்கிறது. ஆசியாவின் முன்னணி STEM மற்றும் ஹெல்த்கேயார் மீடியா நிறுவனமான சிங்கப்பூரைத் தலைமையிடமாகக் கொண்ட வைல்ட் டைப் மீடியா குழுமத்தால் இந்த இதழ் வெளியிடப்படுகிறது. Oceanswell இன் ஸ்தாபகரான Asha DeVos, மற்றும் Dr. Rohan Pethiyagoda ஆகியோர் […]

உலகம்

பிரித்தானிய நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் களமிறங்கும் பொறிஸ் ஜோன்சன்!

பிரித்தானியாவின் நாடாளுமன்ற உறுப்பினராக மீண்டும் பொறிஸ் ஜோன்சன் வருவதை தடுக்க முயற்சிக்க வேண்டாம் என சக கென்சவேட்டிவ் கட்சி உறுப்பினர்களுக்கு முன்னாள் அமைச்சரவை அமைச்சர் ஜேக்கப் ரீஸ் மோக் எச்சரித்துள்ளார். நாடாளுமன்றத்திற்கு மீண்டும் போட்டியிடும் எண்ணத்தை பொறிஸ் ஜோன்சன் வெளிப்படுத்தியுள்ள நிலையில், அவரின் இந்த கருத்து வெளியாகியுள்ளது. கொரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்ட முடக்க கட்டுப்பாடுகளை மீறி விருந்துபசாரங்களையும், ஒன்றுகூடல்களையும் நடத்தியமை தொடர்பாக பொறிஸ் ஜோன்சன், தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியிருந்தார். […]

ஆசியா

பாகிஸ்தானில் பள்ளத்தில் வீழ்ந்த பேருந்து : 9 பேர் பலி!

  • June 12, 2023
  • 0 Comments

பாகிஸ்தானின் கட்டுப்பாட்டிலுள்ள காஷ்மீர் பிராந்தியத்தில் பேருந்து  ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில்,  குறைந்தபட்சம் 9 பேர் பலியானதுடன்,  18 பேர் காயமடைந்துள்ளனர். சுதோன்தி மாவட்டத்தில் இன்று திங்கட்கிழமை அதிகாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தனக்குப் பரிச்சயமற்ற பகுதியில் பஸ்ஸை செலுத்தி வந்த சாரதியின் கவனயீனத்தால் இந்த பஸ் பள்ளத்தில் வீழ்ந்தது என பொலிஸ் அதிகாரி கோட்லி ரியாஸ் முகல் தெரிவித்துள்ளார். மேற்படி பஸ்ஸில் 28 முதல் 30 பேர் பயணம் செய்துகொண்டிருந்தனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை

தமிழர்களை இனியும் ஏமாற்ற முடியாது! அரசாங்கத்திற்கு சந்திரிகா கூறும் அறிவுரை!

“தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்காமல் நாட்டை முன்னேற்ற முடியாது.” இவ்வாறு, இலங்கையின் முன்னாள் அதிபர் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். மேலும் கருத்து வெளியிட்ட அவர், அதிபர் ரணில் விக்ரமசிங்க அனைத்து கட்சிகளுடனும் கலந்துரையாடி புதிய அரசியலமைப்பின் ஊடாக அரசியல் தீர்வை காண முயற்சித்தால் அதற்கு பூரண ஆதரவை தருவதற்கு தயார். எதிர்வரும் அதிபர் தேர்தலை இலக்காகக் கொண்டு […]

You cannot copy content of this page

Skip to content