காலி முகத்திடல் கடற்கரையில் நபரொருவரின் சடலம் மீட்பு!
அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் கொழும்பு காலி முகத்திடல் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. உயிரிழந்த நபரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அடையாளம் தெரியாத நபரொருவரின் சடலம் கொழும்பு காலி முகத்திடல் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளது. உயிரிழந்த நபரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செப்டெம்பர் 12ஆம் திகதி கொண்டாடப்படும் 25ஆவது தேசிய கைதிகள் தினத்தை முன்னிட்டு 933 கைதிகளுக்கு விசேட அரச மன்னிப்பு வழங்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். இதன்படி, இலங்கையின் அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின் பிரகாரம் 926 ஆண் கைதிகளும் 7 பெண் கைதிகளும் விசேட அரச மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்திய கடற்படையின் போர்க்கப்பலான ‘INS Nireekshak’ உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றிற்காக திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. கப்பலின் தளபதி சிடிஆர் ஜீது சிங் சௌஹான் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (14.09) காலை கட்டளைத் தலைமையகத்தில் நடைபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த குறித்த போர் கப்பலானது, செப்டம்பர் 21 வரை நாட்டில் தங்கியிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலப்பகுதியில், இரு நாட்டு […]
சிவநெறி முறையில் வெளிநாட்டு ஜோடியொன்று திருமணம் செய்து கொண்ட சம்பவம் திருகோணமலையில் இடம்பெற்றுள்ளது. இத்திருமணம் கடந்த வியாழக்கிழமை (07) சாம்பல்தீவில் உள்ள தனியார் சுற்றுலா விடுதி ஒன்றில் நடந்தேறியுள்ளது. சிவன் மானுட மேம்பாட்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் குறித்த நிறுவனத்தின் நிறுவுனரும் யோகக்கலை பயிற்சியின் ஆசானுமாகிய இரெத்தினம்பிள்ளை கலியுகவரதன் இத்திருமணத்தை கடந்த வியாழக்கிழமை (07) நடத்தியிருந்தார். சாம்பல்தீவில் உள்ள தனியார் சுற்றுலா விடுதி ஒன்றில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் சிவ பணியில் உள்ள இரெத்தினம்பிள்ளை கலியுகவரதன் அவர்களை சிவநெறி […]
டயானா கமகேவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எதிரான மனுவின் தீர்ப்பை ஒக்டோபர் 18 ஆம் திகதி வழங்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், சமூக ஆர்வலர் ஓஷலா ஹேரத், டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தகுதி நீக்கம் செய்யுமாறு கோரி மனு ஒன்றை தாக்கல் செய்தார். அவர் பிரித்தானிய குடியுரிமையை பெற்றிருந்த நிலையில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இது குறித்த விசாரணை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று (14.09) முன்னெடுக்கப்பட்டது. இதன்போது […]
லிபியாவில் துறைமுக நகரமான டெர்னாவின் பெரும்பகுதி பெரும் வெள்ளத்தால் அழிக்கப்பட்ட இரண்டு அணைகளின் பேரழிவு இடிந்து விழுந்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கை 20,000 ஆக உயர்ந்துள்ளது என்று டெர்னாவின் மேயர் தெரிவித்துள்ளார். முந்தைய மதிப்பீடுகள் மதிப்பிடப்பட்ட இறப்பு எண்ணிக்கை 6,000 ஆகும் மற்றும் மேலும் 10,000 பேரை காணவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஞாயிற்றுக்கிழமை 10ஆம் திகதி இரவு டேனியல் புயலால் பெய்த கனமழையால் டெர்னா ஆற்றில் உள்ள அணைகள் உடைந்தன. 100,000 மக்கள் வசிக்கும் நகரத்தின் முழு […]
ஸ்பெயின் நாட்டில் நேரலையில் இருந்த பெண் ஊடகவியலாளரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். செவ்வாயன்று மாட்ரிட் கொள்ளை சம்பவம் குறித்து இசா பலாடோ என்ற ஊடகவியலாளர் நேரலையில் தகவல் அளித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரை நெருங்கிய நபர் சட்டென்று இசா பலாடோவின் பின் பக்கத்தில் கை வைத்துள்ளார்.ஆனால், அந்த நபரை சமாளித்துவிட்டு, இசா பலாடோ செய்தியை தொடர்ந்துள்ளார். இந்த நிலையில் செய்தி அரங்கத்தில் இருந்து இடைமறித்த இன்னொரு ஊடகவியலாளர் நடந்த சம்பவத்தை உறுதி […]
காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இந்திய பாதுகாப்பு அதிகாரிகள், கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர் இந்திய நிர்வாகத்திற்கு உட்பட்ட காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் கிளர்ச்சியாளர்களுடன் நடந்து வரும் துப்பாக்கிச் சண்டையில் மூன்று இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் கொல்லப்பட்டனர், அதே நேரத்தில் எல்லை மாவட்டமான ரஜோரியில் புதன்கிழமை நடந்த தனித்தனி துப்பாக்கிச் சண்டையில் மற்றொரு வீரர் மற்றும் இரண்டு கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். அனந்த்நாக் கோக்கர்நாக் பகுதியில் உள்ள காடுகளில் கிளர்ச்சியாளர்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் தகவல் கிடைத்ததையடுத்து, காவல்துறை மற்றும் ராணுவத்தின் கூட்டுக் […]
ஆசியக் கோப்பையின் இறுதி ஆட்டத்துக்கு தெரிவாகும் அணியை தெரிவு செய்வதற்கான போட்டி இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியே இன்று (14) நடைபெறவிருந்தது.இந்நிலையில், நாணய சுழற்சியை போடமுடியாத அளவுக்கு மழை கொட்டி தள்ளுகின்றது. ஒக்டோபரில் தொடங்கும் உலகக் கோப்பைக்கான முன்னோடியாக, 50 ஓவர் போட்டியின் இறுதி அரையிறுதிப் போட்டியாகும். அரசியல் பதட்டங்கள் காரணமாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்ய இந்தியா மறுத்ததை அடுத்து, பாகிஸ்தானும் இலங்கையும் இணைந்து நடத்தும் பிராந்திய போட்டியாகும் ரோஹித் ஷர்மாவின் […]
ஓய்வுபெற்ற வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு திரும்ப அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடி காரணமாக மருத்துவமனைகளில் நிலவும் மருத்துவர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். இந்த தீர்மானம் தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் ரம்புக்வெல்ல தெரிவித்தார். இலங்கையில் கணிசமான எண்ணிக்கையிலான மருத்துவர்கள் மற்றும் நிபுணர்கள் சிறந்த ஊதியம் மற்றும் வாழ்க்கைத் தரம் ஆகியவற்றைத் தேடி அண்மைக்காலமாக வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். […]