இலங்கை செய்தி

நாட்டை விட்டு வெளியேறிய 600 மருத்துவர்கள் நாடு திரும்புகின்றனர்

  • September 15, 2023
  • 0 Comments

சுகாதாரத்துறையில் நிலவும் வைத்தியர் பற்றாக்குறையால் மருத்துவப் பயிற்சிக்காக வெளிநாட்டில் இருக்கும் வைத்தியர்கள் மீண்டும் இலங்கைக்கு வந்து பணியாற்ற வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். சுகாதார சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு தற்போதுள்ள திட்டங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார். அதன்படி, தற்போது மருத்துவ சேவையில் பயிற்சி பெற்று வெளிநாடுகளில் உள்ள 600 வைத்தியர்கள் எதிர்வரும் 02 மாதங்களுக்குள் இலங்கைக்கு திரும்புவார்கள் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். இதன்படி […]

உலகம்

சூடானில் தொடரும் பதற்றம்: முழுபோர் வெடிக்கும் அபாயம்- வோல்கர் பெர்தஸ் எச்சரிக்கை

  • September 15, 2023
  • 0 Comments

சூடானில் இராணுவத்துக்கும், துணை இராணுவப் படைக்கும் இடையே நடந்து வரும் மோதல் முழு போராக வெடிக்கும் அபாயம் உள்ளதாக சூடானுக்கான ஐக்கிய நாடுகளின் சிறப்புத் தூதர் வோல்கர் பெர்தஸ் (அப்பதவியில் இருந்து இராஜிநாமா செய்துள்ளார்) எச்சரித்துள்ளார். வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் அல்-புர்ஹான் தலைமையிலான இராணுவத்துக்கும், முகமது ஹம்தான் டகாலோ தலைமையிலான ஆர்எஸ்எஃப் துணை இராணுவப் படைக்கும் இடையே அதிகாரப் போட்டி காரணமாக, கடந்த ஏப்ரல் 15-ஆம் திகதி முதல் சண்டை நடந்து வருகிறது. இதில், இதுவரை […]

இலங்கை

யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்கிய நபர்! பொலிஸார் விசாரணை

  • September 15, 2023
  • 0 Comments

பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்து , பொலிஸ் உத்தியோகஸ்தரை தாக்கிய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியை சேர்ந்த நபர் ஒருவருக்கு எதிராக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைக்கு வருமாறு, குறித்த நபருக்கு பொலிஸார் அழைப்பு விடுத்த போதிலும் , அவர் பொலிஸ் நிலையம் செல்லாததால், நேற்றைய தினம் வியாழக்கிழமை குறித்த நபரை கைது செய்வதற்கு , பருத்தித்துறை பொலிஸார், அச்சுவேலி […]

இலங்கை

மலையக மக்களுக்கு ஏற்றால் போல் குடியேற்றத்தை அமைக்காவிட்டால் மலையக சமூகம் பேரழிவையே சந்திக்கும்: அருட்தந்தை மா.சத்திவேல்.

  • September 15, 2023
  • 0 Comments

மலையக மக்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில் வாழ்வதற்கு ஏற்ற வகையில் குடியேற்றத்தை ஏற்படுத்த பலமான திட்டத்தை வகுக்க வேண்டும். இல்லையெனில் அவர்களின் அடையாளம் மட்டுமல்ல மலையக சமூகமே பேரழிவையே சந்திக்கும் என மலையக சமூக ஆய்வு மையத்தின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார். அவரால் இன்று (15.09.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”மலையக மக்கள் இலங்கை மண்ணில் 200 வருட வரலாற்று வாழ்வின் நிறைவை பல்வேறு நிகழ்வுகளுக்கு ஊடாக […]

பொழுதுபோக்கு

ஓடிடியில் வெளியானது ஹன்சிகாவின் மை3 வெப் தொடர்

  • September 15, 2023
  • 0 Comments

சாந்தனு, ஹன்சிகா மற்றும் முகேன் ராவ் நடித்துள்ள மை3 வெப் தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குநர் எம்.ராஜேஷ். கடந்த 2019-ம் ஆண்டு அவரது இயக்கத்தில் வெளியான சிவகார்த்திகேயனின் ‘மிஸ்டர் லோக்கல்’ படம் தோல்வியை தழுவியது. அதன் பிறகு 2021-ல் அவர் இயக்கிய ‘வணக்கம்டா மாப்பிள்ளை’ படமும் ரசிகர்களிடம் சேரவில்லை. இதையடுத்து, அவர் வெப் தொடர் […]

உலகம்

கனடா அனுப்புவதாக பணமோசடியில் ஈடுபட்ட சந்தேகநபருக்கு விளக்கமறியல்

  • September 15, 2023
  • 0 Comments

கனடா அனுப்புவதாக பணமோசடியில் ஈடுபட்ட காத்தான் குடியைச்சேர்ந்த சந்தேகநபரொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சில மாதங்களிற்கு முன்னர் பளை பகுதியைச்சேர்ந்த பெண் ஒருவர் சமுக வலைத்தளம் ஊடாக வந்த விளம்பரம் ஒன்றில் அறிமுகமாகி கனடா செல்வதற்காக பத்து லட்சம் வைப்பிலிட்டுள்ளார். அதன் பின் நீண்ட நாட்கள் ஏமாற்றி வந்ததால் கெடிகாமம் பொலிஸ் ஊடாக யாழ். மாவட்ட விசேட குற்ற விசாரணைப்பிரிவில் முறைப்பாடு மேற்கொண்டார். விசாரணைகளை மேற்கொண்ட யாழ். மாவட்ட விசேட குற்றவிசாரணைப்பிரிவு பொறுப்பதிகாரி குணறோயன் தலமையிலான குழுவினர் காத்தான் […]

ஐரோப்பா

வாக்னர் கூலிப்படையை உத்தியோகப்பூர்வமாக தடை செய்தது பிரித்தானியா!

  • September 15, 2023
  • 0 Comments

ரஷ்ய கூலிப்படையான வாக்னர் குழுவை ஒரு பயங்கரவாத அமைப்பாக பிரித்தானியா இன்று அதிகாரப்பூர்வமாக தடை செய்தது. பிரித்தானியா வெள்ளியன்று ரஷ்ய கூலிப்படையான வாக்னர் குழுவை ஒரு பயங்கரவாத அமைப்பாக அதிகாரப்பூர்வமாக தடை செய்தது, கடந்த வாரம் இந்த நடவடிக்கையை அறிவித்த பிறகு, இது உறுப்பினராக இருப்பது அல்லது அதை ஆதரிப்பது சட்டவிரோதமானது.எனவும் குறிப்பிட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் மேற்கு ரஷ்யாவில் விமான விபத்தில் அதன் நிறுவனர் யெவ்ஜெனி பிரிகோஜின் இறந்த பிறகு, வாக்னர் கூலிப்படையின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே கருதப்பட்டது. […]

இலங்கை

யாழ். வீடமைப்பு மற்றும் கட்டுமான கண்காட்சி 2023 இன்று ஆரம்பம்!

  • September 15, 2023
  • 0 Comments

யாழ். வீடமைப்பு மற்றும் கட்டுமான கண்காட்சி 2023 எனும் தொனிப் பொருளிலான மூன்று நாள் கண்காட்சி யாழில் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாகவுள்ள முற்றவெளி மைதானத்தில் இன்று காலை ஆரம்பித்து வகைக்கப்பட்ட இக்கண்காட்சியானது நாளையும் நாளை மறுதினமுமாக தொடர்ச்சியாக மூன்று நாட்கள் இடம்பெறவுள்ளது. இக் கண்காட்சியை இலங்கை கட்டிட நிர்மாண கழகத்தின் சிரேஷ்ட நிறைவேற்று அதிகாரி பொறியியளாளர் நிஷ்ங்க விஜேரத்தன விருந்தினராக கலந்துகொண்டு திறந்து வைத்தார். இந் நிகழ்வில் மூத்த தலைவர்கள், அமைச்சர் […]

இலங்கை

சர்வதேச விசாரணை மைத்திரிபாலவுக்கா? ISIS தீவிரவாதிகளுக்கா? – ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் கேள்வி

  • September 15, 2023
  • 0 Comments

ஈஸ்ரர் தாக்குதலுக்கான சர்வதேச விசாரணை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறி சேனவுக்கா அல்லது ISIS தீவிரவாதிகளுக்கா? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் (15) ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்துத் தெரிவிக்கையில் இவ்வாறு சுட்டிக்காட்டிய அவர் மேலும் கூறுகையில், தென்னிலங்கை பெரும்பான்மையின தலைவர்கள் சர்வதேச விசாரணையை கோருவது என்பது தேர்தலுக்கான யுத்தியே தவிர பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகாரங்களையோ அல்லது […]

இலங்கை

புத்த விகாரைகள் அமைக்கப்படும் இடங்களில் மனித எச்சங்கள்: ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன்

  • September 15, 2023
  • 0 Comments

கடந்த யுத்த காலங்களில் அரச படையினருடன் குழுக்களாக இணைந்து செயற்பட்டவர்களுக்கு சில சமயங்களில் புத்த விகாரைகள் அமைக்கப்படும் இடங்களில் மனித எச்சங்கள் இருப்பது தெரிந்திருக்கக் வாய்ப்பிருக்கக் கூடும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். ”செல்வம் அடைக்கலநாதன் மனித எச்சங்கள் காணப்படுவதை மறைப்பதற்காகவே புத்த கோயில் அமைக்கப்படுகின்றன என கூறுவது அவரது அரசியல் கபடத்தனமாகவே பார்க்கப்படுகின்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ். ஊடக […]