பிரான்ஸில் மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா தொற்று!
பிரான்ஸில் மீண்டும் கொரோனா தொற்று அச்சுறுத்துவதாக சுகாதார பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அவசர சிகிச்சையில் நோயாளிகள் அனுமதிக்கப்படுவதையடுத்து மருத்துவ அறிக்கைகளை ஆராய்ந்த அவரசரசிகிச்சை வைத்தியர்களான SOS Médecins பிரான்ஸில் மீண்டும் கொரோனா அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அடுத்தகட்ட கொரோனாத் தடுப்பூசிகள் ஒக்டோபர் மாதத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓகஸ்ட் 28 இலிருந்து செப்டெம்பர் 3ம் திகதிக்குள் 3488 பேரிற்கும், கடந்த வாரமான செம்டெம்பர் 4ம் திகதிக்கும் 11ம் திகதிக்கும் இடையில் 4067 பேரிற்கும் கொரோனா […]