700 மில்லியனுக்கும் அதிகமானோருக்கு ஏற்பட்டுள்ள பரிதாப நிலை
அடுத்த வேளை உணவு கிடைக்குமா? மறுபடியும் சாப்பிடுவோமா? என தெரியாத அச்ச நிலையில் உலகில் உள்ள 700 மில்லியனுக்கும் அதிகமானோர் வாழ்வதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐக்கிய நாட்டு உணவு அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவித்துள்ளது. உணவுக்கான தேவை அதிகரிக்கிறது. ஆனால் மனிதாபிமான உதவிக்கான நிதி குறைவதாக அமைப்பு சொன்னது. நிதிப் பற்றாக்குறையால் பல மில்லியன் மக்களுக்கான உணவைக் குறைக்க வேண்டியுள்ளதாக உலக உணவுத் திட்டத்தின் நிர்வாக இயக்குநர் கூறினார். இதுவே புதிய வழக்கநிலை என்று […]