வட அமெரிக்கா

உக்ரைனுக்கு 200 கோடி நிதியுதவி வழங்கிய கனடா

  • September 19, 2023
  • 0 Comments

உலகின் மிகப்பெரிய ராணுவ கூட்டணியான நேட்டோவில் சேர முயன்றதற்காக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில், இன்னும் போர் முடிவுக்கு வரவில்லை. ரஷ்யா தொடர்ந்து நடத்திய ஏவுகணை தாக்குதலால் உக்ரைன் நிலைகுலைந்தது. இதனையடுத்து உக்ரைனுக்கு வான் பாதுகாப்பு மற்றும் தேசிய உள்கட்டமைப்பை வழங்குவதற்காக இங்கிலாந்து தலைமையிலான ஒரு கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.இந்த கூட்டணியில் உள்ள கனடா, டென்மார்க், நெதர்லாந்து, அமெரிக்கா போன்ற நாடுகள் ஆயுதம் சப்ளை, பொருளாதார உதவிகளை இதன் மூலம் வழங்கி வருகின்றன. இந்தநிலையில் கடந்த […]

இந்தியா

இந்தியாவைவிட்டு வெளியேற கனடா தூதருக்கு உத்தரவு!

  • September 19, 2023
  • 0 Comments

காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விவகாரத்தில் கனடா- இந்தியா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, கனடா உயர் அதிகாரியை மத்திய அரசு வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது. கனடிய சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் (Hardeep Singh Nijjar) சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்திய அரசாங்கத்துக்குத் தொடர்பிருக்கலாம் என்று கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) கூறியிருந்தார். முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டு என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கனடிய மண்ணில் செயல்படும் இந்திய எதிர்ப்புச் சக்திகளுக்கு […]

ஐரோப்பா

மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை பரிசளிக்கும் உலகின் சிறந்த நாடுகள்!

  • September 19, 2023
  • 0 Comments

இந்த வேகமான நவீன உலகில், அனைவரும் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்த ஒரு நல்ல தரமான வாழ்க்கையைப் வாழ ஆசைப்படுகிறார்கள். ஒருவர் வசிக்கும் நாடு உட்பட, உயர்தர வாழ்க்கையை உறுதிப்படுத்தும் பல்வேறு காரணிகள் உள்ளன. நல்ல சுகாதாரம், வேலைவாய்ப்பு மற்றும் கல்வி ஆகியவை பெரும்பாலான தனிநபர்கள் மற்றும் குடும்பங்களின் முதன்மையான முன்னுரிமைகளாகும். கூடுதலாக, மக்கள் ஒரு நாட்டில் பாதுகாப்பு மற்றும் பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மையை எதிர்பார்க்கிறார்கள். U.S. செய்திகள் மற்றும் உலக அறிக்கையின்படி, வாழ்க்கைத் தரத்திற்கான உலகின் […]

இலங்கை

புதுக்குடியிருப்பை வந்தடைந்த திலீபனின் பவனி ஊர்தி …(Photos)

  • September 19, 2023
  • 0 Comments

தியாக தீபம் திலீபனின் 36 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் “திலீபன் வழியில் வருகின்றோம்” என்னும் திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்திப் பவனியானது பொத்துவிலில் ஆரம்பிக்கப்பட்டு, திருகோணமலையில் வலம் வந்த போது சிங்கள இனத்தைச் சேர்ந்த குழு ஒன்றினால் தாக்கப்பட்ட நிலையில் இன்று (19) முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை வந்தடைந்திருந்தது. திலீபனின் திருவுருவப்படம் தாங்கிய ஊர்தியானது புதுக்குடியிருப்பு சந்தியினை வந்தடைந்தது. பின்னர் மக்கள் அஞ்சலி செலுத்தும் நிகழ்வோடு இன்றைய ஊர்திப் பவனியானது முல்லைத்தீவு […]

இலங்கை

திருகோணமலையில் படகு கவிழ்ந்து இளைஞர் ஒருவர் மரணம்!

  • September 19, 2023
  • 0 Comments

திருகோணமலை- குச்சவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செந்தூர் பகுதியில் படகு கவர்ந்ததில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். செந்தூர் மதுரங்குடா கலப்பு பகுதியில் மீன் பிடிப்பதற்காக இரு இளைஞர்கள் சென்ற போது படகு கவிழ்ந்ததில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் குச்சவெளி மதுரங்குடா-செந்தூர் பகுதியைச் சேர்ந்த சுதேந்திரன் ஜனூஷன் (19வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்த இளைஞனின் சடலம் பொலிஸாரின் விசாரணையின் பின்னர் திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் […]

இலங்கை

இலங்கையில் பயணப் பைக்குள் இனங்காணப்பட்ட சடலம் : 06 பேர் கைது!

  • September 19, 2023
  • 0 Comments

சீதுவ, தண்டுகம் ஓயா கரையோரத்தில் மீட்கப்பட்ட பயணப் பைக்குள் காணப்பட்ட சடலம் தொடர்பில் 06 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில்  தந்தை மற்றும் அவரது இரண்டு மகன்களும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த செப்டெம்பர் 15ஆம் திகதி, சீதுவ தண்டுகம் ஓயாவின் கரையில் விடப்பட்ட பயணப் பைக்குள் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர் சில நாட்களுக்கு முன்பு இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது, மேலும் அவரது சடலம் பின்னர் நீல நிற பயணப் பையில் அடைக்கப்பட்டதாக […]

இலங்கை

இலங்கை வரும் பிரிட்டன் முன்னாள் பிரதமர்

  • September 19, 2023
  • 0 Comments

எதிர்வரும் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை டுபாய், அபுதாபி நாடுகளின் முதலீட்டாளர்களுக்காக கொழும்பு துறைமுக நகரம் உத்தியோகப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்படும் நிகழ்வில் விசேட அதிதியாக பிரிட்டன் முன்னாள் பிரதமர் டேவிட் கெமரூன் கலந்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது, அத்துடன் கொழும்பு துறைமுக நகரத்தின் பெயரை ‘கொழும்பு நிதி நகரம் ‘என்று மாற்றியமைப்பதற்கும் ஆலோசிக்கப்படுவதாக பதில் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இலங்கை

திலீபனின் நினைவேந்தல் ஊர்தி மீதான தாக்குதல்:பொலிஸாருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் விடுத்துள்ள பணிப்புரை

  • September 19, 2023
  • 0 Comments

நாட்டின் நல்லிணக்கத்தை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஆளுநர் என்ற வகையில் தனக்கு உள்ளது என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார். கிழக்கு ஆளுநர் அலுவலகத்தில் இன்று (19) இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ”திலீபனின் நினைவேந்தல் ஊர்வலம் பாராளுமன்ற உறுப்பினரால்,பொலிஸ் அனுமதி இன்றி, சிங்கள மக்கள் வசிக்கும் பிரதேசத்தை ஊடுருவி சென்றது. இது இனங்களுக்கு இடையேயான நல்லிணக்கத்தை இல்லாமல் ஆக்குகிறது. தற்போது நாட்டில் காணப்படும் […]

இலங்கை

ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் போராட்டங்கள் செய்யலாம் – ஆளுநர் செந்தில் தொண்டமான்

  • September 19, 2023
  • 0 Comments

ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் போராட்டங்கள் செய்யலாம். அவ்வாறான போராட்டங்கள் நாட்டின் சட்டங்களுக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும் என கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்தார். கோகண்ணபுர காக்கும் அமைப்பு சிங்கள தமிழ் முஸ்லிம் சகோதரத்துவத்தை அழித்து நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தி காணிகளை வெளிநாட்டுக்கு விற்கும் ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்காக நியமிக்கப்பட்ட இனவெறியன் செந்தில் தொண்டமானுக்கு எதிராக கையெழுத்து போராட்டம் என்ற தலைப்பில் ஒரு இலட்சம் கையொப்பம் பெற்றுக் கொள்ளும் நிகழ்வு. இன்று (19) திருகோணமலையில் இடம்பெற்று […]

இந்தியா

யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்ட இந்தியாவின் ஒய்சாலா கோவில்கள்

  • September 19, 2023
  • 0 Comments

கர்நாடகாவின் ஒய்சாலா கோவில்கள் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன. கர்நாடகாவின் பேலூர், ஹாலேபித் மற்றும் சோம்நாத்புரம் ஆகியவற்றின் ஒய்சாலா கோவில்கள் இந்த பட்டியலில் இடம் பெற்று உள்ளன. இதனால், இந்தியாவின் 42-வது யுனெஸ்கோ உலக பாரம்பரிய தலம் என்ற அந்தஸ்து கிடைத்து உள்ளது. இதுபற்றி யுனெஸ்கோ வெளியிட்டு உள்ள எக்ஸ் பதிவில், இந்தியாவில் உள்ள ஒய்சாலா கோவில்கள் யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளன. வாழ்த்துகள் என தெரிவித்து உள்ளது. இதற்கு வாழ்த்து தெரிவித்து […]