தமிழ்நாடு

BJP ஆட்சிக்கு வந்தது முதல் முஸ்லீம் சமூகத்தை குறிவைக்கும் NIA – கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு குற்றச்சாட்டு

  • September 20, 2023
  • 0 Comments

மத்தியில் பாஜக ஆட்சி வந்தது முதல் NIA அதிகாரிகள் முஸ்லீம் சமூகத்தை குறிவைத்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்- பாராளுமன்ற தேர்தல் வரும் போதெல்லாம் இத்தகைய நெருக்கடிகளை இஸ்லாமிய மக்கள் சந்திக்க நேர்கிறது- கோவை மாவட்ட அனைத்து ஜமா அத், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு. கோவை மாவட்ட அனைத்து ஜமா அத், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பினர் கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுல்தான் […]

இலங்கை

கால்நடை பண்ணையாளர்களின் பிரச்சினையை தீர்க்குமாறு அருட்தந்தை ஜீவன் அடிகளார் கோரிக்கை

  • September 20, 2023
  • 0 Comments

தமது வாழ்வாதாரத்தை இழந்து கடந்த ஆறு தினங்களாக போராடிவரும் கால்நடை பண்ணையாளர்களின் பிரச்சினையை தீர்ப்பதற்கு உரியவர்கள் நடவடிக்கையெடுக்கவேண்டும் என ஜேசுசபை துறவி அருட்தந்தை ஜீவன் அடிகளார் தெரிவித்தார். கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் தமக்கான தீர்வினை வழங்கமுன்வரவேண்டும் என பண்ணையாளாகள் இதன்போது கோரிக்கை முன்வைத்தனர்.மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியமாதவணை, மயிலத்தமடு பண்ணையாளர்கள் தங்களது மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத்தர கோரி ஆறாவது நாளாகவும் சுழற்சி முறையிலான கவன ஈர்ப்பு பேராட்டத்தில் […]

ஆசியா

ஆப்கானிஸ்தானின் மனித உரிமை நிலைவரம் குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள தகவல்!

  • September 20, 2023
  • 0 Comments

ஆப்கானிஸ்தானை தலிபான் அமைப்பினர் கைப்பற்றிய பிறகு தடுத்துவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு எதிராக 1600இற்கும் மேற்பட்ட மனித உரிமை மீறல் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளதாக ஐ.நா குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜூலை மாதம் 2023 உடன் முடிவடைந்த 19 மாதங்களில் 18 பேர் சிறைகளிலும் காவல்துறை மற்றும் உளவுத்துறையின் காவலிலும் இறந்ததாக சுட்டிக்காட்டியுள்ளது. “ஒப்புதல்கள் அல்லது பிற தகவல்களைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில், கைதிகள் கடுமையான வலி மற்றும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளதாகவும்.  உடல் ரீதியான அடிகள், […]

வட அமெரிக்கா

ஐ.நா கூட்டத்தொடரில் உலக நாடுகளிடம் ஜோ பைடன் விடுத்துள்ள கோரிக்கை

  • September 20, 2023
  • 0 Comments

உக்ரைன் மீதான ரஷ்ய ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உலக நாடுகள் உக்ரைனுக்கு பக்கபலமாக நிற்க வேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் கூட்டத்தொடரில் உரையாற்றும் போதே அதிபர் ஜோ பைடன் இதனை கூறியுள்ளார். மோதலின் போது மனிதாபிமான உதவிகளை ஒழுங்கமைப்பதில் ஐ.நா தலைமை வகித்தாலும், அது போரில் மத்தியஸ்தராக செயல்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில் இப்போது நாம் எடுக்கும் முடிவுகள் பல தசாப்தங்களாக நமது எதிர்காலத்தை […]

இலங்கை

பிள்ளையானின் கொலைப்பட்டியலை விரைவில் வெளியிடுவேன் – இரா.பிரபா

  • September 20, 2023
  • 0 Comments

பிள்ளையானின் கொலைப்பட்டியல் ஒன்றை ஆதாரங்களுடன் மிக விரைவில் வெளியிடவுள்ளதாக ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் இரா.பிரபா தெரிவித்தார்.மட்டக்களப்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். ஈஸ்டர் தாக்குதல் என்பது தமது கதிரைகளை தக்கவைப்பதற்காக அப்பாவி மக்களை இலக்குவைத்த தாக்குதல் என்பது சர்வதேசம் மட்டுமல்ல இலங்கையில் உள்ள சாதாரண மக்களுக்கும் தெரியும்.பிள்ளையான் சிறையில் இருக்கும்போது சஹ்ரானின் சகோதரனை சந்தித்தாகவும் அவர் ISIS என்று தனக்கு அன்று தெரியும் என்று கூறியுள்ளார்.அன்று அவருக்கு இது தெரிந்திருந்தால் […]

இலங்கை

நல்லூர் திருவிழாவில் தவறவிடப்பட்ட பொருட்களை பெற்றுக்கொள்ள வாய்ப்பு!

  • September 20, 2023
  • 0 Comments

நல்லூர் கந்தசுவாமி ஆலய மகோற்சவ திருவிழாக்களின்போது பக்தர்கள் தவறவிட்ட பெறுமதியான பொருட்கள், யாழ், மாநகர சபையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், உரியவர்கள் அதனை அடையாளம் காட்டி பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த தகவலை யாழ் மாநகர சபை ஆணையாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். பெறுமதி மிக்க குறித்த பொருட்களின் உரிமையாளர்கள். அவற்றை ஆதாரங்களுடன் உரிய அடையாளத்தை உறுதிப்படுத்தி பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் பாராளுமன்றத்தில் கடுமையாக பேசுவேன் – மைத்திரி!

  • September 20, 2023
  • 0 Comments

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் நான்கு வருடங்களாக துன்புறுத்திய போதிலும் தற்போது தான் உண்மை வெளிவருவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு  தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,  இன்னும் சில நாட்களில் பாராளுமன்றத்தில் இது தொடர்பான விவாதத்தில் மிகக் கடுமையாகப் பேசுவேன் என்றும்  கூறியுள்ளார். சனல் ஃபோ அறிக்கை மற்றும் ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் சர்வதேச […]

ஐரோப்பா

சுவிஸில் குழந்தை தொல்லை கொடுத்ததால் பெண் செய்த செயல்..!

  • September 20, 2023
  • 0 Comments

சுவிட்சர்லாந்தில், குழந்தை ஒன்றை கவனித்துக்கொள்வதற்காக பணிக்கு அமர்த்தப்பட்ட பெண் ஒருவர், குழந்தை தொல்லை கொடுத்ததால் வெறுப்படைந்து அதை பலமாக உலுக்கியதில், குழந்தை உயிரிழந்துவிட்டது. 2018ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், குழந்தை ஒன்றை கவனித்துக்கொள்வதற்காக பணிக்கு அமர்த்தப்பட்ட பெண் ஒருவர், குழந்தை தொல்லை கொடுத்ததால் வெறுப்படைந்து அதை பலமாக உலுக்கியுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தை மூன்று நாட்களில் உயிரிழந்துவிட்டது. தன் தவறை அந்த பெண் ஒப்புக்கொண்டார்.அவருக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அவர் சிறை செல்வது […]

ஐரோப்பா

ஈரானுக்கு பயணமான ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி ஷோய்கு

  • September 20, 2023
  • 0 Comments

ராணுவ தலைமையுடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் செர்ஜி ஷோய்கு ஈரானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். உக்ரைன் ரஷ்யா போர் நடவடிக்கையில் உக்ரைன் மீது வான்வழி தாக்குதல் நடத்துவதற்கு ஈரானில் தயாரிக்கப்பட்ட ஷாஹெட்-136 ட்ரோன்களை ரஷ்யா அதிகமாக பயன்படுத்தி வருகிறது.ரஷ்யா பயன்படுத்தும் ஈரானிய ட்ரோன்கள் ரஷ்யாவிற்கு வழங்கப்பட்டது உண்மைதான் என்றும், அவை போர் தொடங்குவதற்கு முன்னதாக வழங்கப்பட்டவை என்று தெஹ்ரான் தெரிவித்தது. ஆனால் தி வாஷிங்டன் போஸ்ட் ரஷ்யாவில் ட்ரோன்கள் உற்பத்தியை தொடங்க 2022ல் அக்டோபரில் […]

இலங்கை

இலங்கையில் மாரடைப்பால் உயிரிழக்கும் இளைஞர்கள் : வெளியான அதிர்ச்சி தகவல்!

  • September 20, 2023
  • 0 Comments

மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயினால் உயிரிழக்கும் இளம் வயதினரின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார். கடந்த 03 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட 1500 பிரேத பரிசோதனைகளின் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதன்படி கடந்த 03 மாதக் காலப்பகுதியில் மாரடைப்பால் உயிரிழக்கும் 50 வயதுக்கு உட்பட்டவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மைக்காலத்தில் ஏற்பட்ட திடீர் மரணங்களில் அதிகமானவை மாரடைப்பு காரணமாக ஏற்பட்டவை […]