வட அமெரிக்கா

அமெரிக்காவில் கணவனின் உயிரை பறித்த Google Maps – வழக்குத் தொடுத்த மனைவி

  • September 22, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் பெண் ஒருவர் தனது கணவரின் மரணத்துக்கு Google Mapsதான் காரணம் என்றுகூறி அந்நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார். அலிசியா என்ற பெண்ணின் கணவர் பிலிப் பெக்ஸன் கடந்த ஆண்டு (2022) செப்டம்பர் மாதம் சேதமுற்ற பாலத்தின்மீது பயணம் செய்து நீரில் விழுந்து உயிரிழந்துள்ளார். நார்த் கரோலைனாவிலுள்ள (North Carolina) அந்தப் பாலம் 9 ஆண்டுகளுக்கு முன்பே உடைந்துவிட்டது. ஆனால் Google Mapsஇல் அந்த விவரங்கள் புதுப்பிக்கப்படவில்லை. தமது கணவருக்கு அந்த இடம் புதிது என்பதால் அந்தப் […]

ஐரோப்பா

01 நிமிடத்தில் 21 காலுறைகளை கழற்றி கின்னஸ் சாதனை படைத்த நாய் (video)

  • September 22, 2023
  • 0 Comments

கனேடியன் நாய் ஒன்று ஒரு நிமிடத்தில் தன்னார்வலர்கள் அணிந்திருந்த 21 காலுறைகளை அகற்றி கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளது. லோ ஷோ டீ ரெக்கார்ட் (Lo Show Dei Record) என்ற தொலைக்காட்சித் தொடரின் தொகுப்பில் சாதனை படைக்க அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த   ஜெனிஃபர் என்ற பெண், ஃப்ரேஸர் என்ற அவரது வளர்ப்பு பிராணியுடன் இத்தாலிக்குச் சென்றார். அங்கு வரிசையில் அமர்ந்திருந்த 11 பெண்களின் காலில் இருந்து காலுறைகளை கழற்றுமாறு , ஃப்ரேசருக்கு  கட்டளைகளை வழங்கினார். ஃப்ரேசர் தனது […]

அறிவியல் & தொழில்நுட்பம்

எலான் மஸ்கின் புதிய திட்டம் – மனித மூளையில் சிப் பொருத்த அனுமதி

  • September 22, 2023
  • 0 Comments

மனித மூளையில் சிப் பொருத்தி ஆய்வு செய்யும் எலான் மஸ்கின் Neuralink நிறுவனத்திற்கு அமெரிக்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. மனித மூளையில் சிப் பொருத்தி மனிதர்களிடம் சோதனை செய்வதற்கு, பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தாமாக முன்வந்து விண்ணப்பிக்கலாம் என Neuralink நிறுவனம் அழைப்பு விடுத்திருந்தது. இந்த தொழில்நுட்பத்தால் நினைவாற்றல் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களின் மூளையின் செயல்பாட்டை மீட்டெடுக்க முடியும் என அந்நிறுவனம் தெரிவித்தது. தற்போது இந்த ஆய்வுக்காக அரசின் அனுமதி கிடைத்த நிலையில், இதற்கான பணிகள் […]

உலகம்

லிபியா வெள்ளம் : ஆயிரக்கணக்கானோர் இடம்பெயர்வு!

  • September 22, 2023
  • 0 Comments

லிபியாவின் டெர்னா அணை உடைந்ததன் காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இதன்படி 43 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளதாக இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் 10 அம் திகதி லிபியாவில் டேனியல் புயல் தாக்கத்தின் காரணமாக ஏற்பட்ட சீரற்ற வானிலை டெர்னா அணை உடைப்புக்கு காரணமாகியது. அணை உடைந்த பெருக்கெடுத்த வெள்ளப்பெருக்கில் ஏறக்குறைய 11000 பேர் வரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.  அத்துடன் ஆயிரத்திற்கும் அதிகமானோர் மாயமாகியுள்ளனர். இந்நிலையில், அணையின் நிலைமை குறித்து ஏறக்குறைய 20 […]

இலங்கை

இலங்கையில் இளம் வயதினரிடையே ஏற்பட்டுள்ள ஆபத்து

  • September 22, 2023
  • 0 Comments

இலங்கையில் மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயினால் உயிரிழக்கும் இளம் வயதினரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி சட்டத்தரணி இரேஷா சமரவீர இதனை தெரிவித்துள்ளார். கடந்த 3 மாதங்களில் இலங்கையில் 50 வயதுக்குட்பட்ட 100 பேர் மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோயினால் உயிரிழந்துள்ளதாக கொழும்பு மரண விசாரணை அதிகாரி சட்டத்தரணி இரேஷா சமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை நீதிமன்றத்தினால் கடந்த 3 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட 1500 பிரேத […]

இலங்கை

இலங்கையின் இன்றைய வானிலை….!

  • September 22, 2023
  • 0 Comments

இலங்கையின் பல இடங்களில் மழையுடன் கூடிய வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (22.09) வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,  மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என முன்னுரைத்துள்ளது. ஊவா, மத்திய, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் சில  இடங்களில் மி.மீ. […]

ஐரோப்பா

எரிபொருள் ஏற்றுமதியை நிறுத்திய ரஷ்யா!

  • September 22, 2023
  • 0 Comments

உள்நாட்டுச் சந்தையை நிலைப்படுத்துவதற்காக, நான்கு முன்னாள் சோவியத் நாடுகளின் வட்டத்திற்கு வெளியே உள்ள அனைத்து நாடுகளுக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் ஏற்றுமதியை ரஷ்யா தற்காலிகமாகத் தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. பெலாரஸ், கஜகஸ்தான், ஆர்மீனியா மற்றும் கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய மாஸ்கோ தலைமையிலான யூரேசிய பொருளாதார ஒன்றியத்தின் உறுப்பினர்களுக்கும் அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தங்களின் கீழ் வழங்கப்பட்ட எரிபொருளுக்கு இந்த தடை பொருந்தாது என்றும் அந்நாட்டு அரசு கூறியுள்ளது. “தற்காலிகக் கட்டுப்பாடுகள் எரிபொருள் சந்தையை நிறைவு செய்ய உதவும், இது […]

ஐரோப்பா

ஜெர்மனியில் புதிய வீடுகள் அமைப்பதற்கான நிதி திட்டத்திற்கு ஏற்ப சட்ட திட்டங்கள்!

  • September 22, 2023
  • 0 Comments

ஜெர்மனி நாட்டில் புதிய வீடுகள் அமைப்பது தொடர்பாக வழங்கப்பட இருக்கும் நிதி திட்டத்துக்கு ஏற்ப சட்ட திட்டங்கள் ஒழுங்குப்படுத்தப்படும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஜெர்மனி நாட்டில் புதிய வீடுகள் அமைப்பது தொடர்பில் நடைமுறைகள் அமுல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான சட்ட திட்டங்கள் ஒழுங்குப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் அரச தரப்பினரால் மேற்கொள்ளப்படுகின்றது. ஜெர்மனியின் கட்டிட நிர்மாண துறை அமைச்சர் கையில் வைஸ் அவர்கள் ஏற்கனவே எரிபொருட்களை சேகரிக்கின்ற புதிய வீடுகளை கட்டுவதற்காக சில நிதி உதவி திட்டங்களை முன்வைத்து இருந்தார். அதாவது 350 […]

இலங்கை

பிரான்ஸில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட தயாராகும் Apple ஊழியர்கள்

  • September 22, 2023
  • 0 Comments

பிரான்ஸில் உள்ள Apple கடைகளின் 4 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவிருக்கின்றன. iPhone 15 ரகத் திறன்பேசி வெளியிடப்படுவதற்கு முன்பு வேலைநிறுத்தம் இடம்பெறவிருக்கிறது. கூடுதல் சம்பளம், மேம்பட்ட வேலைச்சூழல்களை வலியுறுத்தி இன்று மற்றும் நாளை ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளன். ஊழியர்களின் கோரிக்கையை நிர்வாகம் நிராகரித்துள்ளதாக முன்பு Twitter தளத்தில் அறிக்கை பதிவிடப்பட்டுள்ளது. அதனால் 4 தொழிற்சங்கங்களும் இணைந்து வேலைநிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

இலங்கை

கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய தகவல்

  • September 22, 2023
  • 0 Comments

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது. எதிர்வரும் 23 ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6.00 மணி முதல் 24 ஆம் திகதி காலை 6.00 மணி வரை 12 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கொழும்பு 11, 12, 13, 14, மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.