இத்தாலி நோக்கி சென்ற விமானம் – நடுவானில் ஏற்பட்ட பரபரப்பு
United Airlines விமானம் 8 நிமிடங்களில் 28,000 அடி (8,534 மீட்டர்) உயரம் இறங்கிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நியூ ஜெர்சி (New Jersey) மாநிலத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில் காற்றழுத்தப் பிரச்சினை ஏற்பட்டது. அது இத்தாலியின் ரோம் நோக்கிச் சென்றுகொண்டிருந்தது. 37,000 அடி உயரத்தில் பறந்த விமானம், 8 நிமிடங்களில் 9,000 அடிக்கும் குறைவான உயரத்துக்கு இறங்கியது. காற்று அழுத்தத்தில் பிரச்சினை ஏற்படும்போது விமானம் விரைவாகத் தரையிறக்கப்படும். அது மீண்டும் நியூ ஜெர்ஸி விமான நிலையத்துக்குத் திருப்பிவிடப்பட்டதாக […]