இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
இலங்கையின் தென்மேற்கு பகுதியில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. அதன்படி, இன்று (29.09) மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என முன்னுரைக்கப்பட்டுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 50 மி.மீ மேல் ஓரளவு கனமழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. வட மாகாணம் […]