வட அமெரிக்கா

அமெரிக்க அரசாங்கம் முடங்கிப் போகும் அபாயம் – ஏற்பட்டுள்ள கடும் நெருக்கடி

  • September 30, 2023
  • 0 Comments

அமெரிக்க அரசாங்கம் முடங்கிப் போகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிதியுதவி வழங்கும் உடன்பாட்டை எட்டத் தவறினால் இந்த நிலைமை ஏற்படும் என குறிப்பிடப்படுகின்றது. செனட் சபையின் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் இடைக்கால மசோதாவை ஆதரிக்கின்றனர். ஆனால் குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் சிலர் அதை எதிர்க்கின்றனர். மக்களவை நாயகர் evin McCarthy மசோதாமீது வாக்கெடுப்பு நடத்தத் தயாராகிறார். இருப்பினும் அவருடைய சொந்தக் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெறுவதில் அவருக்குச் சிரமம் நீடிக்கிறது. மெக்கார்தியைத் தலைமைப் பொறுப்பிலிருந்து […]

வாழ்வியல்

மெதுவாகக் கொல்லும் விஷமாகியுள்ள உப்பு

  • September 30, 2023
  • 0 Comments

உப்பில்லா பண்டத்தை நம்மால் ஒருபோதும் உண்ண முடியாது. அதாவது, உணவில் உப்பின் சுவை இன்றியமையாத ஒன்றாகும். ஆனால், இதை அதிகமாக உட்கொள்ளும்போது உடலுக்கு பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மிதமான உப்பு நம் உடலுக்கு அவசியம். ஏனென்றால், நம் உடலில் உள்ள திரவத்தை சமநிலையில் வைத்துக் கொள்ளவும், நரம்பின் செயல்பாடு மற்றும் தசைச் சுருக்கங்களைப் பராமரிக்கவும் இது உதவுகிறது. உப்பை ஒருவர் அதிகப்படியாக உட்கொள்ளும்போது அது நம் ஆரோக்கியத்துக்கு எதிரான விளைவுகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, அதிகப்படியான உப்பு உயர் […]

இலங்கை

இலங்கையில் நாளை முதல் அமுலுக்கு வரும் தடை

  • September 30, 2023
  • 0 Comments

இலங்கையில் ஒருமுறை பயன்படுத்தும் மற்றும் குறுகிய கால பிளாஸ்டிக்கை தடை செய்யும் நடைமுறை அமுலுக்கு வந்துள்ளது. அதற்கமைய, வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நாளை முதல் அமுலுக்கு வரும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. வர்த்தமானியை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் சுபுன் எஸ்.பத்திரகே தெரிவித்தார். அதன்படி, ஒக்டோபர் முதலாம் திகதி முதல் இது தொடர்பான திடீர் சோதனைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பா

நெதர்லாந்தின் கோல்டன் விசா திட்டம் இரத்து – நெருக்கடியில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்

  • September 30, 2023
  • 0 Comments

நெதர்லாந்தின் கோல்டன் விசா திட்டமானது அடுத்த ஆண்டு முதல் ரத்து செய்யப்பட்ட பிறகு, பணக்கார வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பயனடைய முடியாது. நெதர்லாந்தில் உள்ள குடிவரவு மற்றும் இயற்கைமயமாக்கல் சேவை (NLS) வழங்கிய அறிக்கையின் மூலம் இந்த முடிவு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இடை முதலீட்டாளர்களுக்கான குடியிருப்பு அனுமதி 2024 ஜனவரி 1 முதல் இனி கிடைக்காது என நெதர்லாந்தில் உள்ள குடிவரவு மற்றும் இயற்கைமயமாக்கல் சேவை தெரிவித்துள்ளது. நெதர்லாந்தின் கோல்டன் விசா திட்டம் பணக்கார வெளிநாட்டு முதலீட்டாளர்கள் டச்சு பொருளாதாரத்திற்கு […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் மீண்டும் அதிகரிக்கும் வங்கி வீதம்!

  • September 30, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் பணவீக்கத்தால் மத்திய ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் பணவீக்கம் 4.9 சதவீதத்தில் இருந்து 5.2 சதவீதமாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிசக்தி செலவு கணிசமாக உயர்ந்துள்ளதால் இந்த நிலையும் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. புதிய பெடரல் ரிசர்வ் வங்கி கவர்னர் மிட்செல் புல்லக் தனது முதல் மாதாந்திர வட்டி விகித அறிவிப்பை வரும் செவ்வாய்க்கிழமை அறிவிக்க உள்ளார். இருப்பினும், வட்டி […]

வட அமெரிக்கா

இந்தியா உடனான உறவை வலுப்படுத்த முயற்சிக்கும் கனடா பிரதமர்

  • September 30, 2023
  • 0 Comments

இந்தியா உடனான உறவை வலுப்படுத்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முயற்சித்துவருவதாக செய்தி வெளியாகியுள்ளது. அண்மையில், காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜார் கொலையில் இந்திய உளவுத்துறையை தொடர்பு படுத்தி ஜஸ்டின் ட்ரூடோ பேசியதால் கனடா உடனான உறவில் விரிசல் ஏற்பட்டு, அந்நாட்டினருக்கு விசா வழங்குவதை மத்திய அரசு நிறுத்திவைத்தது. மான்ரியல் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஜஸ்டின் ட்ரூடோ, உலகரங்கில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்துவருவதாகவும், வளர்ந்துவரும் பொருளாதார சக்தியான இந்தியாவுடன் நெருக்கமான உறவை வைத்துகொள்ளவே தமது அரசு […]

அறிந்திருக்க வேண்டியவை

அமேசான் காடுகளில் காத்திருக்கும் ஆபத்து – பாதுகாக்க உத்தரவு

  • September 30, 2023
  • 0 Comments

அமேசான் காடுகளில் வறட்சி ஏற்படும் அபாயம் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனால் நீர்நிலைகளை பாதுகாக்க அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்கா கண்டத்தின் வட பகுதியில் உள்ள அமேசான் காடுகள் ‘உலகத்தின் நுரையீரல்’ என்று அழைக்கப்படுகிறது. 70 லட்சம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த காடுகளில் 39 ஆயிரம் கோடி மரங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. உலகில் எந்த பகுதியிலும் இல்லாத மரங்கள் இங்கு காணப்படுகின்றன. 16 […]

அறிவியல் & தொழில்நுட்பம்

iPhone 15 இல் புதிய சிக்கல் – கோபத்தில் பயனாளிகள்

  • September 30, 2023
  • 0 Comments

Apple நிறுவனம் புதிதாக வெளியிட்டுள்ள iPhone 15 கைத்தொலைபேசியில் தொடர்ச்சியாக பல சிக்கல்கள் தொடர்பில் தகவல்கள் வெளிவருகின்றது. இது பற்றிக் குறைகூறல்கள் எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்போது சாதனத்தைப் பயன்படுத்தும்போதோ அதற்கு மின்னூட்டம் செய்யும்போதோ iPhone மிகவும் சூடாகிவிடுவதாகப் பயனீட்டாளர்கள் சிலர் கூறினர். மின் விளையாட்டுகளை விளையாடும் போதோ மற்றவர்களிடம் தொலைபேசி அழைப்பு அல்லது FaceTime காணொளி மூலமாகப் பேசும்போதோ அவ்வாறு ஏற்படுவதாகப் பயனீட்டாளர்கள் சமூக ஊடகங்களில் தெரிவித்தனர். கைத்தொலைபேசிகளில் உள்ள புதிய A17 சில்லுவால் பிரச்சினை ஏற்படுகிறதா […]

வட அமெரிக்கா

அமெரிக்காவை அச்சுறுத்தும் வெள்ளம் – நியூயோர்க்கில் அவசர நிலை பிரகடனம்

  • September 30, 2023
  • 0 Comments

அமெரிக்காவின் நியூயோர்க் நகரின் பல்வேறு இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. இதனால் அங்கு அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. நகரின் ரயில் நிலையங்கள், தெருக்கள், நெடுஞ்சாலைகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. LaGuardia விமான நிலையம் நேற்று தற்காலிகமாக மூடப்பட்டது. சில இடங்களில் ஒரே இரவில் 12 செண்டிமீட்டருக்கு மேல் மழை பெய்துள்ளது. இன்னும் 17 செண்டிமீட்டருக்கு மேல் மழை பெய்யக்கூடும் என்று நியூயார்க் ஆளுநர் Kathy Hochul குறிப்பிட்டுள்ளார். எவரும் உயிரிழந்ததாகவோ காயமடைந்ததாகவோ தகவல் இல்லை. […]

ஆசியா

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களால் மக்கள் தொகையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

  • September 30, 2023
  • 0 Comments

சிங்கப்பூரின் மக்கள்தொகை ஒரு வருடத்தில் 5% அதிகரித்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. தொற்றுநோயைத் தொடர்ந்து வெளிநாட்டு ஊழியர்கள் மீண்டும் சிங்கப்பூர வர ஆரம்பித்துள்ள நிலையில் இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 5.6 மில்லியனாக இருந்த சிங்கப்பூரின் மக்கள்தொகை இந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி 5.9 மில்லியனாக அதிகரித்துள்ளது. அவர்களில் 61% பேர் சிங்கப்பூரர்கள் என்றும் 9% பேர் நிரந்தரக் வாசிகள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 30% பேர் வெளிநாட்டு ஊழியர்கள் […]