இரண்டாம் உலகப் போரில் மூழ்கிய 3 கப்பல்கள்! வெளியான வீடியோ பதிவு
இரண்டாம் உலகப் போரின்போது பசிபிக் பெருங்கடலில் மூழ்கிய ஜப்பானின் இரு விமானந் தாங்கிக் கப்பல்களையும் அமெரிக்காவின் ஒரு கப்பலையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மூழ்கிய ஜப்பானிய கப்பலை முதல்முறையாக வீடியோ பதிவு செய்துள்ளனர். மிட்வே சண்டை எனப்படும் இந்தத் தாக்குதலில் ஜப்பானின் இவ்விரு விமானந்தாங்கிக் கப்பல்களும் மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்துதான், ஜப்பான் வசமிருந்த பசிபிக் பெருங்கடலின் கட்டுப்பாடு அமெரிக்கப் படைகள் வசம் மாறியது. 1942 ஜூனில் நடந்த சண்டையில் மூழ்கடிக்கப்பட்ட அகாகி, காகா என்ற இரு ஜப்பானிய கப்பல்களும் அமெரிக்காவின் […]