ஐரோப்பா

ரஷ்யாவின் இராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்க ஜெட் விமானங்களை அனுப்பும் நேட்டோ!

  • October 1, 2023
  • 0 Comments

நேட்டோ ‘ரஷ்ய இராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்க’ கண்காணிப்பு ஜெட்களை அனுப்புகிறது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேட்டோ கூட்டணியின் எல்லைக்கு அருகே உள்ள லிதுவேனியாவிற்கு கண்காணிப்பு ஜெட் விமானங்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. AWACS எனப்படும் ஜெட் விமானங்களை அனுப்பவுள்ள நிலையில், இந்த ஜெட் விமானங்களால்,  நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் உள்ள விமானங்கள் மற்றும் ஏவுகணைகளைக் கண்டறிய” முடியும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. “உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போர், பால்டிக் கடல் பிராந்தியத்தில் பாதுகாப்புச் சூழலில் […]

இலங்கை

கொதிகலனில் விழுந்து இந்தியர் உயிரிழப்பு: பொலிஸார் தீவிர விசாரணை

வெலிப்பென்ன, மீகம பிரதேசத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த இந்திய பிரஜை ஒருவர், தொழிற்சாலை வளாகத்திலுள்ள சுடு நீர் கொதிகலனில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் குறித்த தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த ஜே. ராஜ்பாய் என்ற 34 வயதுடைய இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். நேற்று (30) இடம்பெற்ற சம்பவத்தில், தொழிற்சாலையில் நிறுவப்பட்டிருந்த சுடு நீர் கொதிகலனுக்குள் விழுந்து பலத்த காயங்களுக்கு உள்ளான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. […]

ஐரோப்பா

இல்லினாய்ஸ் நகரில் எரிவாயு கசிவு : 05 பேர் பலி!

  • October 1, 2023
  • 0 Comments

இல்லினாய்ஸ் நகரில் ட்ரக் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில், நச்சு வாயு காற்றில் கலந்ததில், அதனை சுவாசித்த ஐந்துபேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் எரிவாயு கசிவு காரணமாக குறித்த பகுதியில் உள்ள 500 பேர் வெளியேற்றப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியாகியுள்ளது. இறந்த ஐந்து பேரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் விமானத்தின் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இலங்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் நீதி செத்து கிடக்கின்றது: சி.சிவமோகன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் நீதி செத்து கிடக்கின்றது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு முள்ளியவளையில் குழாய்கிணறு கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும் கருத்து தெரிவிக்கையில், முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி அவர்கள் உளவியல் பயங்கரவாத தாக்குதலுக்கு உட்பட்டு நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். சிங்கள அரசு தமிழ்மக்கள் மீதும் தொடர்ச்சியாக காலத்திற்கு காலம் உளவியல் ரீதியான தாக்குதலைத்தான் மேற்கொண்டு வருகின்றது. தொல்பொருள் ஆராச்சி திணைக்களம் பாராளுமன்றில் பெரும்பான்மையினை வைத்து […]

இலங்கை

குறைந்தபட்ச நீதியைக்கூட பெறமுடியாத நிலையில் தமிழர்கள் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

  • October 1, 2023
  • 0 Comments

தமிழ் மக்கள் குறைந்தபட்ச நீதியைக்கூட பெறுமுடியாத நிலையிலேயே இந்த நாடு உள்ளதாக யாழ் மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஈபிஆர்எல்எப் கட்சியின் தலைவருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது கருத்து தெரிவித்த அவர்,மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய செய்கைகளுக்கான திகதிகள் குறிக்கப்பட்டுள்ளது.கால்நடைகளை மேய்ச்சல் தரைக்கு கொண்டுசெல்லவேண்டிய சூழ்நிலையேற்பட்டுள்ளது. ஆனால் மயிலத்தமடு,மாதவனைக்கு கால்நடைகளை கொண்டுசெல்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்தார். எதிர்வரும் காலங்களில் ஜனாதிபதி தேர்தலில் தமிழர் […]

ஐரோப்பா

ஸ்பெயினில் இரவு விடுதியில் தீவிபத்து : 09 பேர் பலி!

  • October 1, 2023
  • 0 Comments

தென்கிழக்கு ஸ்பெயினில் உள்ள முர்சியாவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்று (01.10) அதிகாலையில் டீட்டர் இரவு விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது என Xஇல் பதிவிடப்பட்டுள்ளது. இதில் நான்கு பேர் காயமடைந்துள்ளதுடன்,  மற்றும் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று முர்சியாவின் அவசர சேவைகள் தெரிவித்துள்ளன. தீயினால் கூரையின் ஒரு பகுதி எரிந்து நாசமாகியுள்ள காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.   முர்சியா நகர மேயர் […]

ஐரோப்பா

ஸ்காட்லாந்தில் இந்தியத் தூதருக்கு காலிஸ்தான் பயங்கரவாதிகளால் நேர்ந்த நிலை!

  • October 1, 2023
  • 0 Comments

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி கொலை செய்யப்பட்டதை அடுத்து, பிரித்தானியாவில் இந்தியத் தூதரை காலிஸ்தான் பயங்கரவாதிகள் திடீரென வழிமறித்து தடுத்துள்ளனர். பிரித்தானியாவில் உள்ள இந்தியத் தூதர் விக்ரம் துரைசாமி, ஸ்காட்லாந்தில் உள்ள குருத்வாராவிற்கு செல்ல முயன்ற நிலையில், அவரை உள்ளே நுழைய விடாமல் அங்கிருந்த காலிஸ்தான் பயங்கரவாதிகள் தடுத்து நிறுத்தியதால் அங்கு பெரும் பதற்றம் உருவானது. காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை சம்பவத்தில் இந்தியாவுக்குத் தொடர்பு இருப்பதாகக் கனடா தொடர்ந்து குற்றஞ்சாட்டி வரும் நிலையில், இச்சம்பவம் […]

இலங்கை

பெண் யானை மீது துப்பாக்கிச் சூட்டு : பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிறந்துள்ள பணிப்புரை

மஹியங்கனையில் யானை மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரேமித பண்டார தென்னகோன் உரிய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மஹியங்கனை ரஜமஹா விகாரையின் ரந்தோலி பெரஹெராவின் போது “சீதா” என்ற யானை மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தை அடுத்து மாபாகட வெவ வனவிலங்கு பிராந்திய அலுவலகத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்கள அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சகம் கூறுகையில், CSD பணியாளர்கள் பணியின் போது ஏதேனும் […]

இலங்கை

மட்டக்களப்பு – கோட்டைமுனை சிரேஸ்ட பிரஜைகள் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் தினம் அனுஷ்டிப்பு

  • October 1, 2023
  • 0 Comments

சர்வதேச முதியோர் தினம் மற்றும் சர்வதேச சிறுவர் தினங்கள் இன்றாகும்.இதனை முன்னிட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்றன. சர்வதேச முதியோர் தினம் இந்த ஆண்டு அரோக்கியமான அகவையினை நோக்கி,முதியோர் உரிமைகளை பாதுகாத்தல் ஆகிய தொனிப்பொருளைக்கொண்டு அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது. மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கோட்டைமுனை சிரேஸ்ட பிரஜைகள் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச முதியோர் தினம் இன்று நடைபெற்றது.கோட்டைமுனை விஸ்வகர்மா கலாசார மண்டபத்தில் இந்த நிகழ்வில் கோட்டைமுனை சிரேஸ்ட பிரஜைகள் சங்கத்தின் தலைவர் சி.சிவலிங்கம் தலைமையில் […]

இலங்கை

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இரண்டு விமான சேவைகள் இரத்து : பயணிகள் அவதி!

  • October 1, 2023
  • 0 Comments

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் இரண்டு விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டமையால் பயணிகள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். தொழில்நுட்ப கோளாறு காரணமாக நேபாளத்தின் காத்மாண்டு மற்றும் இந்தியாவின் மும்பைக்கு புறப்படவிருந்த இரண்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (01.10) காலை 8.20 மணியளவில் 200 பயணிகளுடன் நேபாளத்தின் காத்மாண்டு நோக்கிப் புறப்படவிருந்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸிற்குச் சொந்தமான UL 181 என்ற விமானம் பல மணி நேரம் தாமதமாகிய நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. விமான சேவைகள் ரத்து […]