ஆசியா செய்தி

முன்னாள் பிரதமருக்கு வெளிநாடு செல்ல தடை விதித்த வங்காளதேசம்

  • October 1, 2023
  • 0 Comments

வங்காளதேசம் நோய்வாய்ப்பட்ட முக்கிய எதிர்க்கட்சித் தலைவரும், இரண்டு முறை முன்னாள் பிரதமருமான கலிதா ஜியாவை உயிர்காக்கும் மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்வதைத் தடுத்ததாக அதிகாரி மற்றும் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். ஜியாவின் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் (BNP) சட்டத் தலைவர் கெய்சர் கமல், சக்கர நாற்காலியில் இருந்த 78 வயது முதியவர் வெளியேறுவதைத் தடுக்கும் அரசாங்கத்தின் முடிவை,அவரது பயனுள்ள வீட்டுக் காவலின் நிபந்தனைகளின் காரணமாக”அரசியல் நடவடிக்கை” என்று சாடினார். வங்காளதேசம் ஜனவரி மாத இறுதிக்குள் பொதுத் தேர்தலுக்குத் தயாராகி […]

ஐரோப்பா செய்தி

ரஷ்ய ஹேக்கர்களால் சைபர் தாக்குதலை எதிர்கொண்ட ராயல் குடும்ப இணையதளம்

  • October 1, 2023
  • 0 Comments

ராயல் குடும்பத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளம் இணைய தாக்குதலுக்கு இலக்காகி சுமார் ஒன்றரை மணி நேரம் செயலிழந்தது. அறிக்கையின்படி, இணையதளம், அதன் அமைப்புகள் அல்லது அதன் உள்ளடக்கத்திற்கான அணுகல் எதுவும் பெறப்படவில்லை. URL ஐப் பார்வையிட்டவுடன், ராயல். uk, பக்கத்தில் ஒரு பிழைச் செய்தி காட்டப்பட்டது, ”கேட்வே டைம்-அவுட் பிழைக் குறியீடு 504.” சைபர் தாக்குதலுக்கு ரஷ்ய ஹேக்கர் குழுவான கில்நெட் பொறுப்பேற்றுள்ளது. செய்தியிடல் பயன்பாடான டெலிகிராமில் பகிரப்பட்ட செய்தியில், ஹேக்கர், இங்கிலாந்து மற்றும் காமன்வெல்த் நாடுகளில் மன்னர், […]

இலங்கை

நந்திக்கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச எல்லைக்குட்பட்ட நந்திக்கடல் பகுதியில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (01) காலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மந்துவில் பகுதியினை சேர்ந்த 33 வயதுடைய தர்மராசா நிசாந்தன் என்ற இளைஞன் இன்று அதிகாலை 5.30 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு சென்ற நிலையில் நந்திக்கடல் பகுதியில் மீட்கப்பட்டுள்ளார். கோயிலுக்கு முன்னால் உள்ள நந்திக்கடலில் நீரில் மூழ்கிய நிலையில் மீட்கப்பட்டு புதுக்குடியிருப்பு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இவரின் உயிரிழப்பு […]

உலகம்

முர்சியாவில் இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் பலி

தென்கிழக்கு நகரமான முர்சியாவில் உள்ள இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். உள்ளூர் நேரப்படி சுமார் 06:00 மணியளவில் (04:00 GMT) Atalayas பகுதியில் உள்ள Fonda Milagros இரவு விடுதியில் தீ விபத்து ஏற்பட்டது. ஆன்லைனில் பகிரப்பட்ட வீடியோ, கட்டிடத்தின் மேலே தீப்பிழம்புகள் எரிவதையும், அதன் ஜன்னல்களில் இருந்து அடர்ந்த இருண்ட புகை வெளியேறுவதையும் காட்டுகிறது. காணாமல் போன மற்றும் அந்த நேரத்தில் வளாகத்தில் இருந்தவர்களை அவசர சேவைகள் பிரிவினர் தேடி […]

இலங்கை

திருகோணமலையில் உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் மூன்று பிள்ளைகளின் தந்தை பலி

  • October 1, 2023
  • 0 Comments

திருகோணமலை- சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தங்கநகர் கிராமத்தில் உழவு இயந்திரம் விபத்துக்குள்ளானதில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று (01) காலை 11.30 மணியில் இடம்பெற்றுள்ளது. குறித்த விபத்துச் சம்பவத்தில் மூதூர் – பாரதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரலிங்கம் சுந்தரவதனன் (39) என்பவரே உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது. சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது, உழவு வேலைக்காக பாரதிபுரம் பகுதியில் இருந்து கிளிவெட்டி – தங்கநகர் நோக்கிச் சென்றபோது தங்கநகர் பகுதியில் வைத்து உழவு இயந்திரம் […]

இலங்கை

நீதிபதிக்கே நீதி கிடைக்கவில்லையென்றால் கொக்குத்தொடுவாய் புதைகுழிக்கான நீதி கிடைக்குமா? து.ரவிகரன்

நீதிபதிக்கே நீதி கிடைக்கவில்லையென்றால் இந்த புதைகுழிக்கான நீதி கிடைக்குமா என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பியுள்ளார். போராட்டம் மேற்கொள்ளும் போராட்ட இடத்திற்கு முன்பாக இன்று (01.10.2023) இடம்பெற்ற போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார், தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், ”பெற்றோர்கள் இறுதியாக ஒப்படைத்த சிறுவர்கள் இன்றுவரை காணாமலாக்கப்பட்ட நிலையில் அவர்களை தேடி நாளாந்தம் வீதிகளிலே இருந்து தங்களுடைய உறவுகளுக்காக 2000 நாட்களை கடந்த நிலையில் போராடி கொண்டிருக்கிறார்கள். வலிந்து […]

இலங்கை

அரசாங்கத்திற்கு வரி செலுத்துவது மக்களின் கடமை : ரஞ்சித் சியம்பலாபிட்டிய!

  • October 1, 2023
  • 0 Comments

அரசாங்கத்திற்கு வரி செலுத்துவது பொதுமக்களின் கடமை என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல பிரதேசத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார் அந்தக் கடமையை மக்கள் எப்போதும் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.  

இலங்கை

நீதியும் ஒழுக்கமும் நிறைந்த தேசத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – பேராயர்!

  • October 1, 2023
  • 0 Comments

நீதியும் ஒழுக்கமும் நிறைந்த தேசத்தை உருவாக்க மஞ்சள் அங்கி, வெள்ளை அங்கி உட்பட அனைத்து மத நாகர்களும் ஒன்றிணைய வேண்டும் என கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை தெரிவித்துள்ளார். பல்வேறு மதங்களைப் பின்பற்றுவதாக அவர்கள் கூறினாலும் அது பொய் என்றும் இந்நாட்டில் சமூகம் பாவமாகிவிட்டதாகவும் பேராயர் சுட்டிக்காட்டியுள்ளார். டொலர்களைப் பெற்றால் எந்த ஊழல் செயலையும் செய்ய நாட்டின் தலைவர்கள் தூண்டப்படுகிறார்கள் என்று கூறிய பேராயர், இவ்வாறான நிலையில் நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்ல […]

இலங்கை

மாலைத்தீவின் புதிய ஜனாதிபதிக்கு ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து!

  • October 1, 2023
  • 0 Comments

மாலைத்தீவின் புதிய அதிபராக தெரிவு செய்யப்பட்ட  மொஹமட் முய்சுவிற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வாழ்த்து தெரிவித்துள்ளார். மொஹமட் முய்சுவிற்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு ஜனாதிபதி தனது வாழ்த்துக்களை தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. புதிய ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தில் இரு நாடுகளுக்குமிடையிலான நெருக்கமான மற்றும் நட்புறவுமிக்க இருதரப்பு உறவுகளை மேலும் பலமான மற்றும் பலதரப்பட்ட பங்காளித்துவமாக அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விருப்பம் தெரிவித்துள்ளார். கல்வி, சுகாதாரம் மற்றும் இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடு […]

இலங்கை

திருமலை தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் தீ விபத்து; கிழக்கு ஆளுநர் பிறப்பித்துள்ள உடனடி உத்தரவு

திருகோணமலை – தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் இன்று (01) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில் வெளி நோயாளர் பிரிவு மற்றும் மருந்தகம் போன்ற பகுதிகள் தீப்பற்றி உள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர்,மாகாண பணிப்பாளர் ஆகியோரை உடனடியாக சென்று களநிலவரங்களை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் தீ விபத்து தொடர்பான காரணங்களை கண்டறிய மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ஆளுநரால் […]