இலங்கை

ஒருகொடவத்த தொழிற்சாலையில் ஏற்பட்ட பாரிய தீவிபத்து

ஒருகொடவத்த பகுதியில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. விரைவாக செயற்பட்டு ஏழு தீயணைப்பு வாகனங்களின் ஊடாக தொழிற்சாலையில் தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது தீயினால் உயிர்சேதம் அல்லது காயங்கள் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை. எவ்வாறாயினும், தொழிற்சாலை மற்றும் அதன் உள்ளடக்கத்திற்கு ஏற்பட்ட சேதம் தொடர்பில் இன்னும் தகவல் வெளியாகவில்லை. மேலும் தீ விபத்துக்கான காரணம் குறித்து தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இலங்கை

போலியான பெயர் பட்டியலை பயன்படுத்தி மருந்து இற்க்குமதி : குற்றவாளிகள் தண்டிக்கப்படவில்லை!

  • October 7, 2023
  • 0 Comments

போலியான பெயர்ப் பட்டியலைப் பயன்படுத்தி இலங்கைக்கு மருந்துகளை இறக்குமதி செய்தமைக்கு காரணமான நபர்களுக்குத் தேவையான தண்டனை வழங்கப்பட வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் உரிய அதிகாரிகள் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதமை வருத்தமளிப்பதாக சங்கத்தின் உதவிச் செயலாளர் கலாநிதி அஜந்த ராஜகருணா தெரிவித்துள்ளார். அண்மைக்காலமாக நாட்டில் மருந்து பற்றாக்குறை பிரச்சினை நிலவிவருகிறது. தரமற்ற மருந்து இறக்குமதியால் பலர் உயிரிழந்துள்ளனர். இதனை பிரதான காரணமாக சுட்டிக்காட்டி சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீது […]

இலங்கை

மன்னாரில் மீனவர் வலையில் சிக்கிய பாம்பு மீன்

மன்னாரில் மீனவர் ஒருவரின் வலையில் மிகவும் ஆபத்து நிறைந்த விலாங்கு மீன் என அழைக்கப்படும் பாம்பு மீன் ஒன்று சிக்கியுள்ளது. இன்றைய தினம் (7) மீன் பிடியில் ஈடுபட்ட நிலையிலேயே குறித்த மீனவரின் மீன் பிடி வலையில் குறித்த மீன் சிக்கியுள்ளது. குறித்த மீன் 10 அடிக்கும் அதிகமான நீளத்தை கொண்டு காணப்படுகின்றது. பெரும்பாலும் இவ்வகை மீன்கள் மீனவர்களின் வலைகளில் சிக்குவது குறைவாக காணப்படுகின்றது. அவ்வாறு சிக்குகின்ற மீன்களும் அளவில் சிறிதாகவே காணப்படும். ஆனாலும் இன்றைய தினம் […]

இலங்கை

மாத்தறை மாவட்டத்தில் உள்ள பாடசாலைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும்!

  • October 7, 2023
  • 0 Comments

தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக  மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் தொடர்ந்து மூடப்பட்டிருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் தென் மாகாண ஆளுநர் ஆகியோர் தலைமையில் இன்று (07) இடம்பெற்ற மாவட்ட அனர்த்த முகாமைத்துவக் குழுக் கூட்டத்திலே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது. இதன்படி, மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை மூடப்படுமென மாத்தறை மாவட்ட வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.  

ஆசியா

உள்நாட்டு போர் எச்சரிக்கையை வெளியிட்டது இஸ்ரேல் இராணுவம்!

  • October 7, 2023
  • 0 Comments

இஸ்ரேல் இராணுவம் உள்நாட்டு போர் எச்சரிக்கையை இன்று (07.10) அறிவித்துள்ளது. காசாவில் இருந்து போராளிகள் ரொக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்திய நிலையில், இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காசாவை இயக்கும் பாலஸ்தீன போராளி இயக்கமான ஹமாஸ், இந்த ராக்கெட் தாக்குதலுக்கு பொறுப்பேற்று இஸ்ரேலுக்கு எதிராக பொது கிளர்ச்சிக்கு அழைப்பு விடுத்தது. “உங்களிடம் துப்பாக்கி இருந்தால், அதை வெளியே எறியுங்கள். இதைப் பயன்படுத்துவதற்கான நேரம் இது – டிரக்குகள், கார்கள், கோடரிகளுடன் வெளியேறுங்கள், சிறந்த மற்றும் மிகவும் கௌரவமான வரலாறு […]

இலங்கை

தலங்கம துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய நபர் சுட்டுக்கொல்லப்பட்டதாக அறிவிப்பு!

  • October 7, 2023
  • 0 Comments

தலங்கமவில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் முன்னாள் கொமாண்டோ ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை STF) தெரிவித்துள்ளது. ஹன்வெல்லவில் இராணுவ அதிகாரிகளுடன் இடம்பெற்ற மோதலில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, கடந்த ஆகஸ்ட் 25ஆம் திகதி தலங்கமவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபரே இவ்வாறு கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இலங்கை

பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைய திட்டம் இல்லை : மைத்திரி!

  • October 7, 2023
  • 0 Comments

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஒன்றிணைவதற்கான எந்த திட்டமும் இல்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நடைபெற்ற நிலையில், கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  எதிர்வரும் தேர்தலை இலக்காகக் கொண்டு தேர்தல் விஞ்ஞாபனமொன்றை முன்வைப்பதற்கும் மாவட்ட மற்றும் தொகுதி மட்டத்தில் அமைப்பு செயற்பாடுகளை விரிவுபடுத்துவதற்கும் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை

மாத்தறை மாவட்டத்தில் களமிறங்கிய இராணுவத்தினர்!

  • October 7, 2023
  • 0 Comments

மாத்தறை மாவட்டத்தில் அனர்த்த நிவாரணப் பணிகளுக்காக சுமார் 600 இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் மாத்தறை மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, தற்போதைய அனர்த்த நிலைமை காரணமாக மாத்தறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளும் எதிர்வரும் 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

ரோஹிணி தியேட்டர் சர்ச்சைக்கு தந்திரமாக முற்றுப்புள்ளி வைத்தார் விஜய்..

  • October 7, 2023
  • 0 Comments

லியோ ட்ரெய்லரை காண்பிக்க ஏற்பாடு செய்த சென்னையின் மிகவும் பழமை வாய்ந்த ரோகிணி தியேட்டரில் நூற்றுக்கணக்கான இருக்கைகள் அடித்து நொறுக்கப்பட்டன. ஏற்கனவே லியோ டிரைலரை ரோகிணி தியேட்டரில் வெளியில் திரை கட்டி காண்பிக்க செய்யப்பட்ட ஏற்பாடுகள் எல்லாம் காவல்துறையின் கட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்டது. இதற்கு பதிலாக ரோகிணி திரையரங்கம் தியேட்டரின் உள்ளே ட்ரெய்லரை காண்பிக்க ஏற்பாடு செய்தது. கூட்டத்தை பார்த்து கதிகலங்கி போன தியேட்டர் ஓனர் பத்து ரூபாய் டிக்கெட் என்று சொன்னால் கூட்டம் குறைந்துவிடும் என […]

இலங்கை

நில்வள ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

  • October 7, 2023
  • 0 Comments

நில்வள ஆற்றின் இரு கரைகளிலும் உள்ள மக்களுக்கு நீர்ப்பாசன திணைக்களம் சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளது. அடுத்த 24 மணித்தியாலங்களில் நில்வலா ஆற்றுப்படுகையில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக நில்வள ஆற்றின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், முன்னறிவித்தபடி மழை பெய்தால் சில இடங்களில் நில்வலா ஆற்றின் பெரிய வெள்ளப் பாதுகாப்புக் கரைகள் நிரம்பி வழியும் அபாயம் காணப்படுவதாக நீர்ப்பாசனம் தெரிவித்துள்ளது. இதன்படி,  மாத்தறை, மாலிம்பட, கம்புருபிட்டிய, […]