இந்தியா

கொள்ளையர்களிடம் இருந்து செல்போனை காப்பாற்ற முயன்ற நபருக்கு நேர்ந்த கதி!

  • June 30, 2023
  • 0 Comments

தெலுங்கானாவில் சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவர் தனது செல்போனை கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்ற முயன்ற போது ரெயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். முன்னதாக ஐதராபாத்தில் உள்ள இன்ஃபோசிஸ் அலுவலகத்தில் சாப்ட்வேர் என்ஜினியராக பணியாற்றும் ஸ்ரீகாந்த் நேற்று சொந்த ஊருக்கு செல்வதற்காக செகந்திராபாத்தில் ரெயில் ஏறினார். சாதவாகனா எக்ஸ்பிரஸ் ரெயிலில் வாரங்கலுக்கு சென்று கொண்டிருந்த அவர், கம்பார்ட்மென்ட் வாசலில் உட்கார்ந்து செல்போனை பார்த்துக் கொண்டிருந்தார். காசிப்பேட்டை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்த கொள்ளையர்கள் அவரது செல்போனை […]

ஐரோப்பா

சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம்; கலவரத்தில் ஈடுபட்ட 667 பேர் கைது

  • June 30, 2023
  • 0 Comments

17 வயது சிறுவன் பொலிஸாரால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பிரான்ஸில் கலவரம் வெடித்த நிலையில் 667 பேர் வரை கைது செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள நாண்டெர்ரே என்ற புறநகர் பகுதியில் நெயில் எம் என்ற 17வயது சிறுவன் பொலிஸாரால் துப்பாக்கியால் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் குதித்தனர். […]

இலங்கை

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்ட யோசனைக்கு பொது நிதிக் குழு அனுமதி!

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் யோசனைக்கு பொது நிதிக்கான குழு ஒப்புதல் அளித்துள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையிலான பொது நிதி தொடர்பான குழு இன்று (30) இந்த அனுமதியை வழங்கியது. இதேவேளை, உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டம் தொடர்பில் நாளைய தினம் மாத்திரம் கலந்துரையாடி வாக்கெடுப்பு நடத்தப்படும் என கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் மகிந்த யாப்பா […]

இலங்கை

குற்றச்செயல்களை கட்டுப்படுத்த அதிரடி படையினருக்கு அழைப்பு!

  • June 30, 2023
  • 0 Comments

கடந்த சில நாட்களாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் மற்றும் பாதாள உலகச் செயற்பாடுகள் பதிவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேற்கு மற்றும் தென் மாகாணங்களில் இருந்தும் பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எனவே தென் மாகாணம் மற்றும் மேல் மாகாணத்தில் பாதாள உலக செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் விசேட கவனம் செலுத்தியுள்ளனர். இதற்காக 600 பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அடங்கிய குழுவொன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறான குற்ற செயல்களில் […]

வட அமெரிக்கா

குப்பை தொட்டியில் மீட்கப்பட்ட உடல் பாகங்கள்.. அடையாளம் கண்ட பொலிஸார்

  • June 30, 2023
  • 0 Comments

கனடாவின் டொரன்டோ நகரின் ரோஸ்டீல் பகுதியில் குப்பைத் தொட்டி ஒன்றில் ஓராண்டுக்கு முன்னர் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த உடல் பாகங்கள் யாருடையது என்பது குறித்த தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.இந்த உடல் பாகங்களானது காணாமல் போன நான்கு வயதான நிவேயா டக்கர் என்ற சிறுமியுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் ரொரன்டோவில் வாழ்ந்து வரும் சிறுமியின் தாய்க்கு பொலிஸார் தகவல் அனுப்பியுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் இந்த சிறுமி […]

இலங்கை

கட்டாரில் இரு இலங்கை பிரஜைகள் சடலமாக மீட்பு!

  • June 30, 2023
  • 0 Comments

முல்லைத்தீவை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கட்டாரில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தொழிலுக்காக கட்டாருக்கு சென்ற இருவருடைய சடலங்கள் அவர்கள் தங்கியிருந்த பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இலங்கை

சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தில் விசேட கருத்தரங்கு

சித்திரவதையினால் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவளிக்கும் சர்வதேச தினத்தை முன்னிட்டு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய காரியாலயத்தில் ஏற்பாட்டில் காங்கேசன்துறையில் போலீஸ் பயிற்சி பாடசாலையிலுள்ள போலீஸ் அதிகாரிகளுக்கு கருத்தரங்கு ஒன்று இடம்பெற்றது. இக்கருத்தரங்கில் பிரதான வளவாளராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் தங்கவேல் கனகராஜ் செயற்பட்டார். இக்கலந்துரையாடலில் சித்திரவதையிருந்து பாதுகாப்பு என்னும் தலைப்பில் சித்திரவதைக்கு எதிரான சர்வதேச மற்றும் உள்நாட்டு சட்டங்கள் தொடர்பிலும், சித்திரவதைக்கு எதிரான தண்டனைகள் தொடர்பிலும் சித்திரவதையிலிருந்து பாதுகாப்பு பெறுவது […]

ஐரோப்பா

பில்கேட்ஸின் அலுவலகத்தில் நேர்காணலின் போது பெண்களிடம் ஆபாச கேள்விகள் கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு!

  • June 30, 2023
  • 0 Comments

தொழிலதிபரான பில்கேட்ஸின் அலுவலகத்தில், பெண் விண்ணப்பதாரர்களிடம் பாலியல் ரீதியான, ஆபசமான கேள்விகள் நேர்காணலின்போது கேட்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது குறித்து தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல்  பத்திரிக்கை வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில்,  பில் கேட்ஸின் தனியார் அலுவலகம் ஒன்று, நேர்காணலின் போது பெண் வேட்பாளர்களிடம் வெளிப்படையான பாலியல் கேள்விகளைக் கேட்டதாகக் கூறியுள்ளது. சில பெண் வேட்பாளர்கள் தங்களுடைய கடந்தகால பாலியல் அனுபவங்கள் பற்றிய விவரங்கள், தங்கள் தொலைபேசிகளில் நெருக்கமான புகைப்படங்கள் வைத்திருப்பது, ஆபாசத்தில் உள்ள விருப்பங்கள் மற்றும் அவர்களுக்கு […]

இந்தியா

டெல்லி மெட்ரோ ரயிலில் பிரதமர் மோடி பயணம்!

டெல்லி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை டெல்லி மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். முன்னதாக, ரயில் நிலையத்தில் உள்ள தானியங்கி இயந்திரத்தில் மற்ற பயணிகளைப் போலவே தனது டிக்கெட்டையும் வாங்கினார். பின்னர் அங்குள்ள நுழைவு வாயிலில் டிக்கெட்டை காட்டிவிட்டு உள்ளே சென்றார். பிரதமர் மோடி தானியங்கி எஸ்கலேட்டர் வழியாக சென்று ரயில் வருவதற்காக நடைமேடையில் சிறிது நேரம் காத்திருந்தார். மெட்ரோ ரயில் வந்ததும் பிரதமர் […]

செய்தி

வடகொரியாவில் இனி கணவரை ”ஒப்பா” என்று அழைக்க முடியாது – மீறி அழைத்தால் மரண தண்டனை!

  • June 30, 2023
  • 0 Comments

தென்கொரிய மொழி அல்லது சொல்லகராதியைப் பயன்படுத்த வடகொரியா தடை விதித்துள்ளது. அவ்வாறு யாரேனும் பயன்படுத்தினால் அவர்கள் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் கொரியாவில் பேசப்படும் கொரிய மொழி மீதான தேசிய ஒடுக்குமுறையை வட கொரிய தீவிரப்படுத்தியுள்ளது. இதன்படி தென்கொரிய மொழியை பேசினால், பியோங்யாங் கலாச்சார மொழிப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்று சவுத் சைனா மார்னிங் போஸ்ட் தெரிவித்துள்ளது. “ஏற்கனவே தென் கொரிய மொழி பேசும் முறையைப் பழக்கப்படுத்திய […]

You cannot copy content of this page

Skip to content