ஐரோப்பா

பிரிட்டனில் பற்றி எரிந்த விமான நிலையம் ; 1500க்கும் மேற்பட்ட கார்கள் தீக்கிரை

  • October 12, 2023
  • 0 Comments

பிரிட்டன் சர்வதேச விமான நிலையத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பெட்போர்ட்ஷையர் மாகாணத்தில் உள்ள லூடன் சர்வதேச விமான நிலையத்தில் கார் நிறுத்தும் கட்டிடத்தின் 3வது தளத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர். அப்போது கார்களும் தீப்பிடித்து எரிய தொடங்கின. சிறிதுநேரத்தில் கட்டிடம் முழுவதும் தீப்பிடித்து எரிந்ததால் அந்த பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து தீயணைப்பு வீரர்கள் 15க்கும் மேற்பட்ட […]

இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு!

  • October 12, 2023
  • 0 Comments

மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட இந்த வருட புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கு மாத்தறை அனர்த்த முகாமைத்துவ பிரிவு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. நிலவும் காலநிலை காரணமாக பரீட்சை நிலையங்களுக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டால் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த பிள்ளைகள் மற்றும் பரீட்சை ஊழியர்களுக்கு எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறு வலியுறுத்தியுள்ளது. இதன்படி, 0412 234 134 என்ற தொலைபேசி இலக்கம் அல்லது 117 என்ற அவசர தொலைபேசி இலக்கம் ஊடாக மாத்தறை அனர்த்த […]

இலங்கை

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் சீனாவுடன் உடன்படிக்கை!

  • October 12, 2023
  • 0 Comments

சீனா எக்சிம் வங்கியும் இலங்கையும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் உடன்படிக்கைக்கு வந்துள்ளதாக நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடனை மறுசீரமைப்பதற்கான முக்கிய கொள்கைகள் மற்றும் முக்கிய நிபந்தனைகள் தொடர்பாக பொருத்தமான உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. குறித்த உடன்படிக்கையின் கீழ் வங்கிக்கு செலுத்தப்படவுள்ள கடனானது சுமார் 4.2 பில்லியன் டொலர்களை உள்ளடக்கியுள்ளதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது. இது இலங்கையின் நீண்ட கால கடன் நிலைத்தன்மை மற்றும் பொருளாதாரத்தை மீட்டெடுக்க உதவும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

மத்திய கிழக்கு

ஈரான் மற்றும் சவுதி அரேபிய தலைவர்களுக்கு இடையில் பேச்சுவார்த்தை!

  • October 12, 2023
  • 0 Comments

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசிக்கும் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் மொஹமட் பின் சல்மானுக்கும் இடையில் இஸ்ரேல் – பலஸ்தீன முரண்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (11.10) தொலைபேசி ஊடாக கலந்துரையாடல் இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன்போது பாலஸ்தீனத்துக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையில், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறுகையில், ஒவ்வொரு ஹமாஸ் உறுப்பினரும் அவர் உயிருடன் இருந்தாலும் இறந்தவர் தான் என விவரித்துள்ளார். […]

இலங்கை

மொரட்டுவ நெடுஞ்சாலையில் கண்டுப்பிடிக்கப்பட்ட இராட்சத முதலை!

  • October 12, 2023
  • 0 Comments

மொரட்டுவ லுனாவ புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 8 அடி நீளமுள்ள முதலை ஒன்றை பிரதேசவாசிகள் இன்று (12.10) கண்டெடுத்துள்ளனர். முதலை கடற்கரையில் இருந்து ரயில் பாதையை கடந்து சென்றது போன்ற கால்தடங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. இதுகுறித்துதெஹிவளை மிருகக்காட்சிசாலை, பொலிஸாருக்கும், பெல்லன்வில அத்திடிய தள காரியாலயத்திற்கும் அறிவித்த போதும் இதுவரை எந்த அதிகாரியும் வரவில்லை எனவும்  பிரதேசவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இலங்கை

இலங்கையில் சில அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க நடவடிக்கை!

  • October 12, 2023
  • 0 Comments

இலங்கையில் எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் சில அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைக்க வர்த்த அமைச்சர் நளின் பெர்னாண்டோ நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி  ஒரு கிலோ நெத்தலியின் விலை 200 முதல் 250 ரூபாவுக்குள் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை  1250 ரூபா வரையில் தற்போது விற்பனை செய்யப்படும் கோழி இறைச்சியின் விலையை டிசம்பர் மாதமளவில் 850 ரூபாவுக்கு விற்பனை செய்ய முடியும் என எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த காலங்களில் கோழி இறைச்சி  முட்டை,  கருவாடு மற்றும் மீனின் […]

இலங்கை

நாகை – காங்கேசன்துறைமுகத்திற்கான பயணிகள் கப்பல் சேவை ஒத்திவைப்பு!

  • October 12, 2023
  • 0 Comments

நாகை துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறைக்கு இயக்கப்படவிருந்த கப்பல் சேவை மீளவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒக்டோபர் 14 ஆம் திகதி காலை 7 மணிக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அமைச்சர்கள் கூடுதலாக நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதால் திகதி மாற்றம் செய்யப்பட்டது எனக் கூறப்படுகிறது. மத்திய துறைமுகங்கள், கப்பல், நீர்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக […]

இலங்கை

மெட்டியகொட, மஹவத்த பகுதியில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி!

  • October 12, 2023
  • 0 Comments

மெட்டியகொட, மஹவத்த வீதி பகுதியில் இன்று (12.10) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த நபர் காயமடைந்த நிலையில், பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது அவர் உயிரிழந்துள்ளதாக அறவிக்கப்பட்டுள்ளது. வாதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கடந்த ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி ரத்கம பிரதேசத்தில் முன்னாள் பொலிஸ் பரிசோதகர் பாலேந்திரசிங்க சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் வீடொன்றில் தங்கியிருப்பதாக […]

இலங்கை

யாழில் இளம் தாய் ஒருவர் பரிதாபமாக பலி!

  • October 12, 2023
  • 0 Comments

யாழ் வல்வெட்டித்துறையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சிவரூபன் தேனுஜா என்ற 24 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். அவர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகாத நிலையில், சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரியவருகிறது.

இலங்கை

இஸ்ரேலுக்கு சென்ற இலங்கை தூதுவரின் பயணம் இடைநிறுத்தம்!

  • October 12, 2023
  • 0 Comments

இஸ்ரேல் – பலஸ்தீன மோதல்களுக்கு மத்தியில் காணாமல் போனதாக கூறப்படும் இலங்கையர்கள் தொடர்பில் விசாரிப்பதற்காக மேற்கு காசா பகுதிக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை தூதுவர் தற்போதைய சூழ்நிலை காரணமாக விஜயத்தை நிறுத்த வேண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் பாதுகாப்பு தரப்பினர் விடுத்த அறிவித்தலின் பிரகாரம் தனது விஜயத்தை நிறுத்திவிட்டு நாடு திரும்ப நேரிட்டதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் நிமல் பண்டார தெரிவித்துள்ளார். குறித்த மோதலில் இரு இலங்கையர்கள் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்களைப் பற்றி அறிந்து கொள்வதற்காக நேற்று […]