ஆஸ்திரேலியா

இஸ்ரேல் பிரச்சினை – ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள சிக்கல்

  • October 13, 2023
  • 0 Comments

ஹமாஸ் அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான இராணுவ மோதல்கள் காரணமாக, உலகம் முழுவதும் எரிபொருள் விலை அதிகரிக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை 100 அமெரிக்க டொலர்களை தாண்டும் என கணிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவிலும் எரிபொருள் விலை அதிகரிப்பை எதிர்பார்க்கலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது ஒரு லீற்றர் பெற்றோலின் விலை தொடர்ந்து 7வது வாரமாக 02 டொலர்களை தாண்டி செல்வதை காணமுடிகிறது. இந்த நிலை கிறிஸ்மஸ் சீசன் முடியும் […]

உலகம்

ஹமாஸுடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான கணக்குகளளை நீக்கியது X தளம்!

  • October 13, 2023
  • 0 Comments

ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது கடந்த ஒருவார காலமாக தாக்குதல் நடத்தி வருகின்ற நிலையில், பயங்கரவாதிகளுக்கு X இல் இடமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஹமாஸ் அமைப்புடன் தொடர்புடைய நூற்றுக்கணக்கான கணக்குகளை X நீக்கியுள்ளது. “X  பொது உரையாடலுக்கு சேவை செய்வதில் உறுதிபூண்டுள்ளது, குறிப்பாக இது போன்ற முக்கியமான தருணங்களில், தளத்தின் மூலம் பரப்பப்படும் எந்தவொரு சட்டவிரோத உள்ளடக்கத்தையும் நிவர்த்தி செய்வதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  

அறிவியல் & தொழில்நுட்பம்

கூகுள் அறிமுகம் செய்துள்ள புதிய வசதி!

  • October 13, 2023
  • 0 Comments

கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் Google நிறுவனம் பாஸ்வேர்ட் இல்லாமல் லாகின் செய்யும் Passkey என்ற முறையை கொண்டு வந்தது. தற்போது ஹேக்கர்களிடமிருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு பாஸ்வேர்டுக்கு பதிலாக Passkey மட்டும் பயன்படுத்துமாறு google வலியுறுத்தியுள்ளது. ஒருவரின் தனிப்பட்ட கணக்குக்கு பயனர்கள் விருப்பப்பட்டால் பாஸ்வேர்ட் வைத்துக் கொள்ளலாம்.ஆனால் Passkey பயன்படுத்தினால் மட்டுமே எதிர்காலத்தில் பயணர்களின் கணக்குகள் பாதுகாப்பாக இருக்கும் என பல முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் கருதுகின்றன. இப்போது எல்லா பயனர்களும் பாஸ்கீ பயன்படுத்தி இயல்பாக லாகின் […]

ஆசியா

பிலிப்பைன்ஸ் தலைநகரில் நிலநடுக்கம் : கட்டிடங்களை விட்டு வெளியேறிய மக்கள்!

  • October 13, 2023
  • 0 Comments

பிலிப்பைன்ஸ் தலைநகரில் இன்று (13.10) 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. மணிலாவில் இருந்து 100 கிலோமீட்டர் (62 மைல்) தெற்கே  ஆழமற்ற நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும்,  மற்றும் அலுவலக ஊழியர்கள் தங்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறியதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உள்ளூர் அதிகாரிகள் சேதம் மற்றும் பின் அதிர்வுகளை எச்சரித்துள்ளனர்.  

மத்திய கிழக்கு

இஸ்ரேலில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது – ரஷ்யா!

  • October 13, 2023
  • 0 Comments

இஸ்ரேல்  உணவு மற்றும் மருந்துகளை அனுமதிக்க காசாவில் போர் நிறுத்தத்திற்கு உடன்பட வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தியுள்ளது. இது குறித்து ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  காசா பகுதியில் “கண்மூடித்தனமான” குண்டுவெடிப்பால் பல பொதுமக்கள் கொல்லப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளது. மொஸ்கோவின்  துணை வெளியுறவு அமைச்சர் மிகைல் போக்டானோவ், பாலஸ்தீன விடுதலை அமைப்பின் (PLO) நிர்வாகக் குழுவின் பொதுச் செயலாளர் ஹுசைன் அல்-ஷேக்குடன் தொலைபேசியில் பேசிய பின்னர் அறிக்கையை வெளியிட்டார்.

செய்தி

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கை

  • October 13, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளின் தரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, 2030 ஆம் ஆண்டுக்குள் அதன் தரத்தை உயர்த்த வேண்டும் என்று மனிதவள அமைச்சகம் கூறியுள்ளது. அதாவது, தொழிற்சாலைகளில் கட்டப்பட்ட கிட்டதட்ட 1,000 வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் தரத்தை உயர்த்த வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. இந்த தரம் உயர்த்தும் நடவடிக்கை இடைக்காலத்தில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும். 2040 ஆம் ஆண்டுக்குள், தங்கும் விடுதிகளில் புதிய தரங்கள் நிறைவேற்றி […]

இலங்கை

இலங்கையின் பெரும்பாலான இடங்களில் பலத்த மழை பெய்யும்!

  • October 13, 2023
  • 0 Comments

இலங்கையின் பலப்பகுதிகளில் இன்றும் (13.10) மழையுடனான வானிலையே நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக்கூறியுள்ளது. ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 75 மி.மீ அளவுக்கு பலத்த மழை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மேற்கு மற்றும் தென் மாகாணங்களின் கரையோரப் பகுகுதிகளிலும், காலை வேளையில் லேசான மழை பெய்யும் எனவும்,  மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய […]

ஐரோப்பா

ஜெர்மனியில் குழந்தைக்கு தந்தை செய்த மோசமான செயல்

  • October 13, 2023
  • 0 Comments

ஜெர்மனியில் தந்தை ஒருவர் தனது 3 வயது குழந்தையை கொலை செய்து ஆற்றில் வீசியுள்ளார். ஜெர்மனியில் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் உள்ள டீஸ்லான் நகரத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த 40 வயதுடைய தந்தை தனது 3 வயதான பெண் குழந்தையை நில அறையில் 3 நாட்களாக அடைத்து வைத்திருந்துள்ளார். இவ்வாறு அடைத்து வைக்கப்பட்ட நிலையில் சிறுமியானவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார். பின்னர் குறித்த தந்தை ரையில் கெனல் கனால் என்ற ஆற்றில் இறந்த குழந்தையை கல்லால் […]

இலங்கை செய்தி

கிளிநொச்சியில் பொமரேனியன் நாய்க்கு உரிமை கோரிய இருவர்!! நீதிமன்றம பிறப்பித்துள்ள உத்தரவு

  • October 13, 2023
  • 0 Comments

கிளிநொச்சி பிரதேசத்தில் இரண்டு தரப்பினர் பொமரேனியன் நாயொன்றுக்கு உரிமை கோரியமையினால் குறித்த நாயின் மரபணு பரிசோதனைக்கு கிளிநொச்சி நீதவான் உத்தரவிட்டுள்ளார். கிளிநொச்சி – பரந்தன் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது நாயைக் காணவில்லை என கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். சில நாட்களுக்குப் பிறகு, புகார் அளித்த புகார்தாரரின் வீட்டிற்கு சம்பந்தப்பட்ட நாய் வந்துள்ளது. அதன் பின்னர் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த மற்றுமொருவர் தனது நாய் வேறு வீட்டில் பலவந்தமாக அடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். பின்னர் […]

இலங்கை

நுவரெலியா மாவட்டத்திற்கு மண்சரிவு எச்சரி்க்கை விடுப்பு!

  • October 13, 2023
  • 0 Comments

மாத்தளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி, இந்த 3 மாவட்டங்களுடன், நாடளாவிய ரீதியில் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாத்தளை மாவட்டத்தில் உக்குவெல, ரத்தோட்டை மற்றும் மாத்தளை ஆகிய பகுதிகளுக்கு நேற்று (12.10) முதல் முறையாக மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேசத்திற்கும்,  மேலும், கண்டி மாவட்டத்தின் பாததும்பர பிரதேசத்திற்கும் முதல் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.