இலங்கை

தமிழர் கலாச்சாரத்தில் அதிக ஆர்வம் – இலங்கையில் பரதநாட்டியம் பயிலும் போலந்து பெண்

  • August 10, 2025
  • 0 Comments

போலந்து நாட்டைச் சேர்ந்த பெண்மணியொருவர் திருகோணமலை ஆனந்த பிரகதீஸ்வரா கலாலயாவில் பரதக்கலையின் சில படிநிலைகளை பயின்றிருந்தார். போலந்து நாட்டில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்டிருந்த தோமஸ் ஜொயன்னா தம்பதியினர் (09) நடன ஆசிரியர் திருமதி மேனகா பாக்கியராஜாவின் வழிநடத்தலில் அவருடைய மாணவிகளுடன் இணைந்து நடனக்கலையை பயின்றனர். தமிழர்களின் கலை, கலாச்சார பண்பாடுகளில் தாங்கள் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளதாகவும் தங்களைப் போன்று பலரும் பரதக்கலையை பயில மிகுந்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் குறித்த வெளிநாட்டு தம்பதியினர் தெரிவித்திருந்தனர். இலங்கைக்கு […]

மத்திய கிழக்கு

காசா நகரத்தைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் – கடும் கோபத்தில் உலக நாடுகள்

  • August 10, 2025
  • 0 Comments

காசா நகரத்தைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்தை ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகள் கடுமையாக நிராகரித்துள்ளன. ஹமாஸ் தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேல் தனது பல மாத கால தாக்குதலை தீவிரப்படுத்தும் என்று பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டது. ஆஸ்திரேலியா, ஜெர்மனி, இத்தாலி, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து ஆகியவை இதற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இது சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறும் அபாயம் இருப்பதாகவும், காசா பகுதியில் உள்ள மோசமான மனிதாபிமான […]

செய்தி

பிரித்தானியாவில் இந்தியரின் ஹோட்டலை சூறையாடிய கொள்ளைக்கும்பல் – பரபரப்பு சம்பவம்

  • August 10, 2025
  • 0 Comments

பிரித்தானியாவில் சவுத்தாம்ப்டன் நகரத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அங்கித் வகேலா என்றவரின் ஹோட்டலில் பாரிய கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சமீபத்தில் குறித்த ஹோட்டல் கொள்ளைக்குழுவினரால் சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 4 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு தனது ஹோட்டலை தொடங்கிய அங்கித் வகேலா, சிறந்த இந்திய உணவுகளை வழங்குவதன் மூலம் பிரபலமாகிறார். சமீபத்தில் பிரித்தானிய மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிக்காக பிரித்தானியாவுக்கு வந்திருந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனைகள், கேப்டன் ஹர்மன்ப்ரீத் […]

அறிந்திருக்க வேண்டியவை

மோட்டோரோலா பிரில்லியண்ட் க்ரிஸ்டல் கலெக்ஷன் அறிமுகம்!

  • August 10, 2025
  • 0 Comments

தொழில்நுட்பமும் ஆடம்பரமும் கைகோர்க்கும்போது தனித்துவமான படைப்பு உருவாகும். அதை நிரூபிக்கும் வகையில், மோட்டோரோலா நிறுவனம் புகழ்பெற்ற நகை பிராண்டான ஸ்வாரோவ்ஸ்கியுடன் இணைந்து தனது ஃபிளிப் ஃபோனான Razr 60 மற்றும் Moto Buds Loop இயர்பட்ஸ் ஆகியவற்றை புதிய மற்றும் ஆடம்பரமான க்ரிஸ்டல்களால் அலங்கரித்து வெளியிட்டுள்ளது. ஃபிளிப் ஃபோனை எடுத்துச் செல்ல பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட கிராஸ்பாடி பேக் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என மோட்டோரோலா தெரிவித்துள்ளது. இந்த புதிய தொகுப்பு Brilliant Collection என்றழைக்கப்படுகிறது. இதில் உள்ள சாதனங்கள் […]

இன்றைய முக்கிய செய்திகள் வட அமெரிக்கா

வரி விதிப்பால் அமெரிக்காவுக்கு பணம் குவிகிறது – மகிழ்ச்சியில் ட்ரம்ப்

  • August 10, 2025
  • 0 Comments

உலக நாடுகள் மீது விதித்துள்ள வரிகள் மூலம் அமெரிக்காவுக்கு பெரும் வருமானம் ஏற்படுகிறது என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். “நீதிமன்றம் இந்த வரி விதிப்புகளை தடை செய்தால், இப்பெரும் தொகைகளை மீண்டும் பெற அமெரிக்காவிற்கு ஒருபோதும் வாய்ப்பு இருக்காது” என அவர் எச்சரித்துள்ளார். மேலும், வரலாற்றில் என்னை போன்று சோதனைகளையும் இன்னல்களையும் கடந்து வந்த ஒருவர் யாரும் இல்லை எனவும் ட்ரம்ப் தெரிவித்தார். அமெரிக்காவின் வரி போக்குகள் மீது தொடரப்பட்ட வழக்குகள் மற்றும் அதற்கான நீதிமன்ற […]

விளையாட்டு

ஜோ ரூட் குறித்து விமர்சித்த வார்னர் – மொயின் அலி கொந்தளிப்பு

  • August 10, 2025
  • 0 Comments

இந்தியாவுடனான மிகவும் சவாலான சுமையான டெஸ்ட் தொடர் 2-2 என்று டிராவில் முடிவடைய அடுத்து நவம்பர் 21-ம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்கும் ஆஷஸ் சவாலுக்கு இங்கிலாந்து முழு மனத்தளவில் தயாராக போதுமான கால அவகாசம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஆனால் அதற்குள் ஜோ ரூட் பற்றி வார்னர் விமர்சனம் செய்ய மொயின் அலி கொந்தளித்து விட்டார். ஆண்டர்சன் – டெண்டுல்கர் டிராபியில் ஜோ ரூட் 537 ரன்களை 3 சதங்களுடன் எடுத்து அசத்தினார். கிரேட் ரிக்கி […]

இலங்கை

இலங்கையில் காலநிலை தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை

  • August 10, 2025
  • 0 Comments

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மாகாணத்திலும், திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று அந்தத் திணைக்களம் வௌியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தால் ஏற்படும் ஆபத்துகளைக் […]

இலங்கை

இலங்கையில் 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று!

  • August 10, 2025
  • 0 Comments

இலங்கையில் 2025 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று இடம்பெறவுள்ளது. அதன்படி, புலமைப்பரிசில் பரீட்சை இன்று காலை 9.30 மணிக்கு நாடு முழுவதும் உள்ள 2,787 பரீட்சை நிலையங்களில் ஆரம்பமாகவுள்ளது. இதற்கான பரீட்சை நிலையங்களை தயார்படுத்தும் பணிகளும் நேற்று மேற்கொள்ளப்பட்டன. இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்காக 307,951 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர். புலமைப்பரிசில் பரீட்சையில் இரண்டாம் பகுதி வினாத்தாள் முதலில் வழங்கப்பட்டு காலை 10.45 மணிக்கு முடிவடையவுள்ளது. அதன் பின்னர், அரை மணி நேர இடைவேளை […]

மத்திய கிழக்கு

காசாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் மேலும் 11 பேர் பலி

  • August 10, 2025
  • 0 Comments

காசாவில் ஊட்டச்சத்து குறைபாட்டால் மேலும் 11 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. காசா பகுதியில் ஊட்டச்சத்து குறைபாட்டால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 212 ஆக உயர்ந்துள்ளது, இறப்புகளில் 98 பேர் குழந்தைகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளில் குறைந்தது 38 பேர் கொல்லப்பட்டதாகவும், 491 பேர் காயமடைந்துள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காசா பகுதியில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஐந்து கொள்கைகளையும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சரவை […]

இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

டிரம்ப் – புட்டின் இடையேயான பேச்சுவார்த்தையில் பயனில்லை என கூறும் உக்ரைன் ஜனாதிபதி

  • August 10, 2025
  • 0 Comments

உக்ரைன் இல்லாமல் எந்த அமைதிப் பேச்சுவார்த்தையையும் அடைய முடியாது என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இடையேயான சந்திப்பு பற்றிய செய்தி பரவிய நிலையில், ஜெலென்ஸ்கி இந்த அறிக்கையை வெளியிட்டார். இதற்கிடையில், உக்ரைன் ஜனாதிபதி இந்தப் பேச்சுவார்த்தைகளில் ஏதோ ஒரு வகையில் ஈடுபடலாம் என்று வெள்ளை மாளிகையின் மூத்த அதிகாரி ஒருவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். உண்மையான அமைதிக்காக ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அவர்களது அனைத்து […]

Skip to content