ஆசியா

இஸ்ரேல் மீது முன்கூட்டிய தாக்குதல் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள ஈரான்

  • October 17, 2023
  • 0 Comments

காசாவில் இஸ்ரேல் உரிய பின்விளைவுகள் இன்றி செயற்படுவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என எச்சரித்துள்ள ஈரான் எதிர்வரும் மணித்தியாலங்களில் முன்கூட்டிய தாக்குதல் ஒன்று குறித்தும் எச்சரித்துள்ளது.இதனை ஈரானின் வெளிவிவகார அமைச்சர் ஹசைன் அமிரப்துல்லா ஹியன் தெரிவித்துள்ளார். காசாவில் பாலஸ்தீனியர்களிற்கு எதிரான போர்க்குற்றங்கள் நிறுத்தப்படாவிட்டால் வரவிருக்கும் மணிநேரத்தில் எதிர்ப்பு முன்னணி முன்கூட்டிய நடவடிக்கையை மேற்கொள்ளும் என வெளிவிவகார அமைச்சர் எச்சரித்துள்ளார். அதேசமயம் ஹெஸ்புல்லா உட்பட பாலஸ்தீன ஆதரவு அமைப்புகள் சேர்ந்தே இந்த எதிர்ப்பு முன்னணியை உருவாக்கியுள்ளன. கடந்த 7 ஆம் திகதி […]

இலங்கை

கம்பளையில் வெடி விபத்து சம்பவம்: 3 மாணவர்கள் பாதிப்பு

  • October 17, 2023
  • 0 Comments

கம்பளை கல்வி வலயத்துக்க உட்பட்ட மாவத்துர கலைமகள் தமிழ் வித்தியாலய பாடாசாலை மைதானத்தில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் காயமடைந்த மாணவர்கள் மூவர் கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் இருவர் சிகிச்சை பெற்று வீட்டுக்குத் திரும்பியுள்ள நிலையில், மற்றையவர் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றார். அனுப்பப்பட்ட நிலையில், தரம் 6 இல் பயிலும் 11 வயதான மாணவன் சிகிச்சை பெற்று வருகிறார். பாடசாலை நேரத்தில், மேற்படி மூன்று மாணவர்களும் வெளியே வந்துள்ளார். அப்போது பந்து போன்ற ஒன்று கிடந்துள்ளது. […]

ஐரோப்பா

ஐரோப்பாவில் “இஸ்லாமிய பயங்கரவாதம்” அதிகரித்து வருகிறது : மக்ரோன்!

  • October 17, 2023
  • 0 Comments

ஐரோப்பாவில் “இஸ்லாமிய பயங்கரவாதம்” அதிகரித்து வருவதாகவும், அனைத்து மாநிலங்களும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரேன் தெரிவித்துள்ளார். அல்பேனியாவிற்கு இன்று (17.10) விஜயம் செய்த அவர், அந்நாட்டு ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த போதே மேற்படிக் கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  “நாங்கள் அதை நேற்று மீண்டும் பிரஸ்ஸல்ஸில் பார்த்தோம். அனைத்து ஐரோப்பிய நாடுகளும் பாதிக்கப்படக்கூடியவை, உண்மையில் இஸ்லாமிய பயங்கரவாதத்தின் மறுமலர்ச்சி உள்ளது” எனத் தெரிவித்துள்ளார். “இங்கே, நாங்கள் எங்கள் பெல்ஜிய நண்பர்களுடன் ஒற்றுமையை […]

இலங்கை

லெபனானில் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து : இலங்கை பெண் ஒருவர் சிக்கியுள்ளதாக தகவல்!

  • October 17, 2023
  • 0 Comments

லெபனானில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் இலங்கை பெண் ஒருவர் சிக்கியுள்ளதாக அந்நாட்டு தூதரகம் தெரிவித்துள்ளது. குறித்த கட்டடத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்தக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், 05 பேர் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களில் இலங்கை பெண் ஒருவரும் உள்ளடங்குவுதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை

திருகோணமலையில் தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து கிடைப்பதில்லை: இம்ரான் எம்.பி

தமிழ்மொழி பேசுவோர் சுமார் 75 வீதம் வாழ்கின்ற திருகோணமலை மாவட்டத்தில் தமிழ் மொழிக்கு உரிய அந்தஸ்து வழங்கப்படாமை குறித்து மிகவும் கவலையடைகின்றேன் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். கடந்த செவ்வாய்க்கிழமை இடம் பெற்ற திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார். கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம்.அதாவுல்லா, கபில நுவான் அத்துக்கோரள ஆகியோரின் இணைத்தலைமையின் கீழ் நடைபெற்ற இக்கூட்டத்தில் உரையாற்றிய அவர் மேலும் […]

இலங்கை

லெபனானில் பணிப்புரியும் இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

  • October 17, 2023
  • 0 Comments

லெபனானில் பணிப்புரியும் இலங்கையர்களின் பெயர் விபரங்கள் மற்றும் தொலைப்பேசி இலக்கங்களை உடன் வழங்குமாறு பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகம் அவசர அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளது. குறிப்பாக தெற்கு லெபனானில் பணிப்புரியும் இலங்கையர்களின் பெயர் விபரங்களை உடனடியாக வழங்குமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது. இதற்காக விசேட வட்ஸ்அப் இலக்கம் மற்றும் மின்னஞ்சல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 070386754, 071960810 என்ற வட்ஸ்அப் இலக்கம் அல்லது slemb.beirut@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விபரங்களை உடனடியாக அனுப்பி வைக்குமாறு தூதரகம் வலியுறுத்தியுள்ளது.

ஐரோப்பா

சுவீடன் பிரஜைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்!

  • October 17, 2023
  • 0 Comments

பெல்ஜியத்தின் தலைநகரில் இரண்டு ஸ்வீடன் பிரஜைகள் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து, வெளிநாட்டில் உள்ள நோர்டிக் நாட்டின் குடிமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ஸ்வீடன் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. “வெளிநாட்டில் ஸ்வீடன் மற்றும் ஸ்வீடன் நலன்களுக்கு எதிரான அச்சுறுத்தல் ஏற்கனவே அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த திங்கட்கிழமை  பிரஸ்ஸல்ஸில் இரண்டு ஸ்வீடன் பிரஜைகள் கொல்லப்பட்டதால், வெளிநாட்டில் உள்ள ஸ்வீடன் பிரஜைகளுக்கு அதிகரித்த எச்சரிக்கையையும் அதிகரித்த விழிப்பையும் கடைப்பிடிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை

பொலிஸார் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளை செய்ய 118 என்ற அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக மேற்கொள்ள முடியும் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தகவல் அளிப்பவரின் அடையாளத்தை அறிவிக்காமல் அந்த எண்ணின் மூலம் உரிய தகவல்களை வழங்கவும் முடியும என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இலக்கத்தின் ஊடாக நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் நச்சு போதைப்பொருள் தொடர்பான தகவல்களையும் வழங்க முடியும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனூடாக அளிக்கும் தகவல்களின் ரகசியம் […]

ஐரோப்பா

பிரான்சின் வெர்சாய்ஸ் அரண்மனை மூடப்பட்டது!

  • October 17, 2023
  • 0 Comments

பிரான்சின் வெர்சாய்ஸ் அரண்மனை பாதுகாப்பு காரணங்களுக்காக பார்வையாளர்களை இன்று (17.10) வெளியேற்றியுள்ளது. அதேநேரம் குறித்த அரண்மனை மூடப்படும் என சமூகவலைத்தளமான  X இல் Chateau de Versailles தெரிவித்துள்ளது. சமீப நாட்களாக பிரான்ஸ் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட பிறகு உச்சகட்ட பாதுகாப்பிலும், தயார் நிலையிலும் பிரான்ஸ் உள்ளது. இந்நிலையில், லூவ்ரே அருங்காட்சியகம், வெர்சாய்ஸ் அரண்மனை மற்றும் பாரிஸின் கேர் டி லியோன் ரயில் நிலையம் ஆகியவற்றை மூடவேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக […]

மத்திய கிழக்கு

எகிப்தின் முதல் ராணியின் கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்ட 5,000 ஆண்டுகள் பழமையான வைன் !

  • October 17, 2023
  • 0 Comments

எகிப்தின் முதல் பெண் பாரோ (ராணி) என்று நம்பப்படும் பெண்ணின் கல்லறையில் 5,000 ஆண்டுகளுக்கு முந்தைய மதுவின் சீல் செய்யப்பட்ட ஜாடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. வியன்னா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர் கிறிஸ்டியானா கோஹ்லர் தலைமையிலான ஜெர்மன்-ஆஸ்திரியக் குழு, அபிடோஸில் உள்ள ராணி மெரெட்-நீத்தின் கல்லறையை அகழ்வாராய்ச்சி செய்து கொண்டிருந்தனர். அப்போது பெரிய பாட்டில்களில் வைன் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அவை அனைத்தும் சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து ஆய்வாளர்கள் கூறுகையில் “வைன் திரவமாக இல்லை, அது சிவப்பு […]