இலங்கை

அஸ்வெசும திட்டம் குறித்த மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகசாம் நிறைவு!

  • July 10, 2023
  • 0 Comments

அஸ்வெசும சமூக நலத்திட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. முன்னதாக மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்பிப்பதற்கான கால அவகாசம் கடந்த மாத இறுதியுடன் முடிவடையவிருந்தது. எனினும்  பல தரப்பினரின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு கால அவகாசத்தை இன்று வரை நீடிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. அஸ்வெசும சமூக நலன் திட்டத்திற்காக சுமார் 9 இலட்சம் மேன்முறையீடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் இதுவரை சுமார் 12000 ஆட்சேபனைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இலங்கை

இலங்கையை உலுக்கிய விபத்து – கிழக்கு மாகாண ஆளுநர் விடுத்த அதிரடி உத்தரவு

  • July 10, 2023
  • 0 Comments

கதுருவெல, மனம்பிடிய பேருந்து விபத்து குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளருக்கு கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளார். வடமத்திய மாகாண பொலன்னறுவை – கதுருவெல பகுதியிலிருந்து காத்தான்குடிக்கு சென்ற பேருந்தொன்று மனம்பிடிய பகுதியில் விபத்திற்குள்ளாகியுள்ளது. கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பயணிகள் அதிகமானோர் பயணித்த இப்பேருந்து பொலனறுவை மாவட்டத்தில் விபத்துக்குள்ளாகியுள்ள நிலையில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளரை விபத்து இடம்பெற்ற இடத்திற்கு விரைந்து சென்று, […]

இலங்கை

கிம்புல்வானா ஓயாவில் தோட்டாக்கள் அடங்கிய பை மீட்பு!

  • July 10, 2023
  • 0 Comments

குருணாகல் –  கிம்புல்வானா ஓயாவில் 108 தோட்டாக்கள் அடங்கிய பை ஒன்று மீட்கப்பட்டுள்ளது. குறித்த பையில்  ரி-56 ரக 83 தோட்டாக்கள், எம்16 ரக 29 தோட்டாக்கள்,  16 எம்பிஎம்ஜி தோட்டாக்கள் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த தோட்டாக்களை இந்த இடத்தில் விட்டுச் சென்றவர் குறித்து இதுவரை பொலிஸாருக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ள பொலிஸார், இது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.  

வாழ்வியல்

ஞாபக மறதியால் பாதிக்கப்பட்டவரா நீங்கள்? உங்களுக்கான பதிவு

  • July 10, 2023
  • 0 Comments

பொதுவாக வயது முதிர்ச்சி அடைய நமது மூளையில் செல்கள் அழிய தொடங்குவதால் நமக்கு ஞாபகம் வருதே உண்டாகிறது. ஆனால் சிலருக்கு இளம் வயதிலேயே ஞாபக மறதி உண்டாகிறது. இந்த ஞாபக மறதி வியாதிக்கு பல்வேறு வகையான இயற்கை மருத்துவம் உள்ளது. அதனால் மூளைக்கு பழம் சேர்க்கும் சில வகையான உணவுகளை நாம் தெரிந்து கொள்ளலாம். வல்லாரை மூலிகையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஞாபக மறதிக்கு நல்ல பலன் கிடைக்கும். தேனுடன், மிளகை சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஞாபக […]

பொழுதுபோக்கு

ஒரு நிமிடத்துக்கு ஒரு கோடி சம்பளம்… இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் கவர்ச்சி நடிகை

  • July 10, 2023
  • 0 Comments

தி லெஜண்ட் திரைப்படத்தில் சரவணனுக்கு ஜோடியாக நடித்த நடிகை ஊர்வசி ரவ்துலா, ஐட்டம் டான்ஸ் ஆட ஒரு நிமிடத்துக்கு ஒரு கோடி சம்பளம் வாங்கி உள்ளாராம். பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் ஊர்வசி ரவ்துலா. இவர் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டை காதலிப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் ஆவார். இவர் கடந்தாண்டு லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளிவந்த தி லெஜண்ட் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக காலடி எடுத்து வைத்தார். அப்படத்தில் நடிக்க […]

ஆசியா

சீனாவில் பாலர் பாடசாலையில் கத்தி குத்து தாக்குதல் : 06 பேர் உயிரிழப்பு!

  • July 10, 2023
  • 0 Comments

சீனாவில் பாலர் பாடசாலையில் இடம்பெற்ற கத்தி குத்து தாக்குதல் சம்பவத்தில், 06 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவம் இன்று (ஜுலை 10) சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஒரு ஆசிரியர், மூன்று குழந்தைகள் மற்றும் இரண்டு பெற்றோர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த தாக்குதல் சமப்வத்துடன் தொடர்புடைய 25 நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் அறிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொழுதுபோக்கு

நான்கு ஆண்டுகள் கழித்தும் தமன்னா படத்துக்கு இவ்வளவு மவுசா?

  • July 10, 2023
  • 0 Comments

பிரபல நடிகரும் அரசியல் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில், காசி விஸ்வநாதன் படத்தொகுப்பில், யுவன் சங்கர் ராஜாவின் இசையில், சீனு ராமசாமி இயக்கத்தில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் “கண்ணே கலைமானே”. இந்த திரைப்படத்தில் கமலக்கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் உதயநிதி ஸ்டாலின் மிக நேர்த்தியாக நடித்திருந்தார். விவசாயம் படித்து முடித்த ஒரு இயற்கை விவசாயியாக அந்த திரைப்படத்தில் இவர் நடித்திருந்தார். மேலும் இந்த படத்தில் நாயகியாக தமன்னாவும் முக்கிய வேடங்களில் மூத்த நடிகை வடிவுக்கரசி, […]

இலங்கை

இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல்?

  • July 10, 2023
  • 0 Comments

அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். பதுளையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறினார். இந்த ஆண்டு தேர்தல்கள் இல்லை எனவும் 2024 ஆம் ஆண்டின் முதல் தேர்தல் ஜனாதிபதித் தேர்தலாக இருக்கும் எனவும் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார். அதற்காகத்தான் நாங்கள் தயாராகி வருகிறோம் எனக் கூறிய அவர்,  தேர்தலை  நடத்த வேண்டும் என ரணில் விக்கிரமசிங்கவிடம் பரிந்துரைப்பதாகவும் […]

ஐரோப்பா

பிரான்ஸில் விடுமுறையின் போது அமுலாகும் தடை

  • July 10, 2023
  • 0 Comments

பிரான்ஸில் வாணவேடிக்கையின் விற்பனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஜூலை 14ஆம் திகதி தேசிய விடுமுறையின்போது இந்த தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது. அன்று அவற்றை வழங்கவோ வைத்திருக்கவோ கூடாது என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்தது. அங்குப் பதின்ம வயது இளையர் ஒருவர் பொலிஸாரால் கொல்லப்பட்டதால் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. அந்த ஆர்ப்பாட்டங்களில் வாணவேடிக்கைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. பொது ஒழுங்குமுறை பாதிக்கப்படுவதைத் தவிர்க்க ஜுலை 14ஆம் திகதியும் 15ஆம் திகதியும் வாணவேடிக்கைகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த இரு நாள்களும் பிரான்சின் தேசிய நாளாகக் (Bastille […]

ஆசியா

வடகொரியாவிற்கு எதிராக சர்வதேச நாடுகளை அணித்திரட்டும் தென்கொரியா!

  • July 10, 2023
  • 0 Comments

வடகொரியாவின் அணுவாயுதத் திட்டத்தைத் தடுக்க சர்வதேச சமூகம் தெளிவான மற்றும் வலுவான உறுதியை வெளிப்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோல் வலியுறுத்தியுள்ளார். வட கொரியாவின் ஆயுதக் களஞ்சியம் குறித்த நேட்டோ தலைவர்களுடன் விவாதித்த அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார். நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதன் மூலம், இராணுவக் கூட்டணியுடன் உறவுகளை வலுப்படுத்துவதற்கான தென் கொரியாவின் முயற்சிகளை இது எடுத்துக்காட்டுகிறது. வடகொரியாவின் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை அதிபர் யூன் […]

You cannot copy content of this page

Skip to content