ஐரோப்பா

பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட சிறுவன் கைது

பயங்கரவாத தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்ட 16 வயதுடைய சிறுவன் ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாண்டின் ஜூலை மாதத்தில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து, இந்த கைது சம்பவம் இந்தவாரத்தில் Seine-et-Marne மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. திட்டமிடப்பட்ட தாக்குதல் குறித்த விரிவான தகவல்கள் வெளியிடப்படவில்லை. எனினும் தாயேஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு

CWC Update – இன்றைய போட்டிகளில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் வெற்றி

  • October 21, 2023
  • 0 Comments

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. இதில் முதல் போட்டியில் நெதர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. நெதர்லாந்து அணியினர் தொடக்கம் முதலே விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர். அதன்படி நெதர்லாந்து அணி 91 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து ஜோடி சேர்ந்த சைப்ரண்ட் ஏங்கல்பிரெக்ட்- லோகன் வான் பீக் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதியாக நெதர்லாந்து அணி […]

ஐரோப்பா

கனடா-இந்தியா சர்ச்சை: பிரித்தானியாவின் ஆதரவு யார் பக்கம்

வாஷிங்டன்: சீக்கியப் பிரிவினைவாதத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜார், கடந்த ஜூன் மாதம் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையே அரசதந்திரப் பூசல் நிலவிவருகிறது. இதையடுத்து, தனது தூதரக அதிகாரிகள் 41 பேரைக் கனடா மீட்டுக்கொண்டது. இதுகுறித்து அமெரிக்காவும் பிரித்தானியாவும் வெள்ளிக்கிழமை கவலை தெரிவித்துள்ளன. “இந்திய அரசாங்கத்தின் முடிவையடுத்து கனடிய தூதரக அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறியதை ஏற்றுக்கொள்ள இயலவில்லை,” என்று பிரித்தானிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐரோப்பா

இடைத்தேர்தல் தோல்வி: ரிஷி சுனக்கின் தீர்மானம்

இரண்டு வரலாற்று இடைத்தேர்தல் தோல்விகளுக்குப் பிறகு தனது தலைமையின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும் முயற்சியில் ரிஷி சுனக் 5 மில்லியன் அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு வரிக் குறைப்பு மற்றும் முத்திரைக் கட்டணத்தைக் குறைப்பது குறித்து பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிஷி சுனக் இந்த வாரம் இரண்டு இடைத்தேர்தல் தோல்விக்குப் பிறகு டோரி வாக்காளர்களை மீண்டும் வெல்வதற்காக கண்ணைக் கவரும் வரி குறைப்புகளை பரிசீலித்து வருகிறார் . இது ஐந்து மில்லியன் அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்குக் கொடுப்பனவுகளைக் குறைக்கும் […]

இலங்கை

சந்தோஷ் நாராயணின் இசை நிகழ்ச்சியில் இந்திய இராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு மௌன அஞ்சலி

  • October 21, 2023
  • 0 Comments

யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் இன்று இடம்பெற்று வரும் தென்னிந்திய இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் இசை நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இந்திய இராணுவத்தினரால் நடத்தப்பட்ட படுகொலையை மறைக்கவே அதே நாளில் இசை நிகழ்ச்சி நடாத்தப்படுவதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் இசை நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதன் போது,கலையும் கலாச்சாரமும் சிறந்து […]

இலங்கை

திருகோணமலையில் விபத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் பலி

திருகோணமலை- குச்சவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சலப்பையாறு பகுதியில் இன்று (21) மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார் மற்றுமொரு நபர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வீதியோரத்தில் உட்கார்ந்திருந்திருந்த போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதாகவும் மோட்டார் சைக்கிளில் பயணித்த 17 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிய வருகின்றது. உயிரிழந்த இளைஞனின் சடலம் குச்சவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உயிரிழந்தவர் குச்சவெளி- நாவல்சோலை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் […]

இலங்கை

முற்றாக எரிந்து நாசமாகிய மோட்டார் சைக்கிள்!

  • October 21, 2023
  • 0 Comments

கொழும்பு விகாரமஹாதேவி பூங்காவிற்கு அருகில் மோட்டார் சைக்கிள் ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. இரண்டு இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று இன்று (21.10) பிற்பகல் 2.30 மணியளவில் தீப்பற்றி எரிந்தது. அருகில் இருந்த போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் மோட்டார் சைக்கிள் தீப்பிடித்து எரிவதை கண்டு கொழும்பு மாநகர சபையின் தீயணைப்பு பிரிவிற்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர் இரண்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்ததாகவும் அதற்குள் மோட்டார் சைக்கிள் முற்றாக எரிந்து நாசமாகியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ […]

இந்தியா

காதல் விவகாரத்தால் பறிபோன இரு உயிர்கள் : போலீசார் தீவிர விசாரணை

கிளியனூர் பகுதி திண்டிவனம் புதுச்சேரி நான்கு வழி சாலையில் வங்கி ஊழியர்கள் இருவர் காதல் விவகாரத்தால் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் காதலி காருக்குள் கழுத்தில் குத்துப்பட்டு உயிரிழந்தும், காதலன் சாலையில் அடையாளம் தெரியாத வாகனத்தில் விபத்தில் சிக்கி தலை நசுங்கி உயிரழ்ந்திருப்பது தெரியவந்துள்ளது. உயிரிழந்த இருவரின் உடல்களை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ”விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் பகுதி திண்டிவனம் புதுச்சேரி நான்கு வழி சாலையில் ஆண் சடலம் ஒன்று […]

இந்தியா

அரபிக்கடலில் உருவாகியுள்ள தேஜ் புயல் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

  • October 21, 2023
  • 0 Comments

தென்மேற்கு அரபிக்கடலில் தீவிரமான ‘தேஜ்’ புயல் தீவிரமடைந்து தற்போது ஏமனின் சோகோத்ராவில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலானது ஏமன் மற்றும் ஓமன் கடற்கரைகளுக்கு இடையே தேஜ் புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளதாக முன்னுரைக்கப்பட்டுள்ளது. புயல் தாக்கம் காரணமாக எதிர்வரும் 26 ஆம் திகதிவரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை […]

வட அமெரிக்கா

வழக்கில் அதிருப்தி; தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு நேர்ந்த கதி!

  • October 21, 2023
  • 0 Comments

விவாகரத்து வழக்கில் அதிருப்தி அடைந்து அமெரிக்காவில் ஆண்ட்ரூ வில்கின்ஸன் எனும் நீதிபதியை அவரது வீட்டின் முன் சுட்டுக்கொன்ற சந்தேக நபரை பொலிஸார் தேடி வருகின்றனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான 52 வயது நீதிபதி மருத்துவமனையில் உயிரிழந்ததாக மேரிலேண்ட் நகர பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேக நபர் 49 வயது பெட்ரோ அர்கோட்டேயிடம் ஆபத்தான ஆயுதங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது. சந்தேகநபரின் விவாகரத்து வழக்கில் பிள்ளைகளை வளர்க்கும் உரிமை அவரது மனைவிக்கு வழங்கப்பட்டதால் அதிருப்தியடைந்து அவர் நீதிபதியைச் […]