ஐரோப்பா

சுவிட்சர்லாந்து பொதுத் தேர்தல்: வலதுசாரி மக்கள் கட்சி வெற்றி பெறுமா?

சுவிட்சர்லாந்தில் இன்றைய தினம் பொதுத் தேர்தல் நடைபெறுகின்றது 2023 முதல் 2027ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியில் நாட்டை ஆட்சி செய்வதற்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்தல் வலதுசாரி மக்கள் கட்சி வெற்றி பெறக்கூடிய சாத்தியங்கள் அதிகளவில் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. எவ்வாறறெனினும் சுவிட்சர்லாந்து பசுமைக் கட்சி இம்முறை தேர்தலில் பின்னடைவை சந்திக்கும் என கருத்துக் கணிப்பு மூலம் தெரியவந்துள்ளது. கருத்துக் கணிப்பு முடிவுகள் உண்மையானால் இம்முறை பசுமைக் கட்சி அமைச்சரவையில் அங்கம் வகிக்க சாத்தியமில்லை […]

இலங்கை

மட்டக்களப்பில் வாள்வெட்டு : பலர் காயம்!

  • October 22, 2023
  • 0 Comments

நடிகர் விஜய் நடித்து வெளியான லியோ படத்தை பார்க்கச் சென்ற இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு கைலகலப்பாக மாறி வாள் வெட்டில் முடிந்துள்ளது. மட்டக்களப்பு – செங்கலடி திரையரங்கில் இந்த வாள்வெட்டு சம்பவம் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவத்தில் 5 பேர் காயமடைந்துள்ளதுடன், நான்கு பேர் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஒருவர் மட்டக்களப்பு போதானா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பிட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கை

பிரான்ஸ் செல்ல முகவரை நம்பி லெபனான் சிறையில் உள்ள இலங்கையர்.. குடும்பம் விடுத்துள்ள கோரிக்கை

  • October 22, 2023
  • 0 Comments

பிரான்ஸ்க்கு செல்வதற்காக முகவர் ஒருவரை நம்பி சென்ற யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்த ஒருவர் லெபனான் நாட்டின் சிறையில் உள்ளதாகவும் அவரை மீட்டு நாட்டுக்கு கொண்டுவர உதவுமாறும் குடும்பத்தினரால் உருக்கமான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொழும்புத்துறை வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரன் சயந்தன் என்ற இளம் குடும்பஸ்தரே முகவரை நம்பி ஏமாந்துபோய் லெபனான் நாட்டின் சிறையில் சிக்கியுள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவரது மனைவி,பிரான்ஸ் நாட்டுக்கு செல்வதற்கு முகவர் ஒருவரை நம்பி விமானம் மூலம் வெவ்வேறு நாடுகளுக்கு சென்று […]

இலங்கை

வரி செலுத்த வேண்டியவர்களை அரசாங்கம் கண்டுக்கொள்ளவில்லை!

  • October 22, 2023
  • 0 Comments

வரி செலுத்த வேண்டிய மக்களிடம் உரிய முறையில் வரி அறவிடாமல் மின் கட்டணத்தை அதிகரிக்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பொரளை இளைஞர் பௌத்த சங்க கேட்போர் கூடத்தில் நடைபெற்ற 111வது இலங்கை மயான பொதுச்சபை கூட்டத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார். போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனையை பிரபலப்படுத்தும் நோக்கில் அந்த நிறுவனங்களிடம் வரி அறவிடாமல் அரசாங்க அமைச்சர்கள் ஊடாக புதிய மதுபான அனுமதிப்பத்திரங்களை […]

இலங்கை

யாழ் மாணவர்களுக்கான மகிழ்ச்சியான அறிவிப்பு : கணனி அறிவை மேம்படுத்தும் இலவச கற்கைநெறி ஆரம்பம்

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனால் யாழ். மாவட்டத்தில் My Dream Academy ஆரம்பித்து வைக்கப்பட்டது.. யாழ் மாவட்ட கல்வித்தரத்தை மேம்படுத்தி ”மீண்டும் கல்வியில் முதலிடம்” என்ற இலக்கை எட்டும் நோக்கில் My Dream Academy தனது பயணத்தை இன்று முதல் (22.10.2023) ஆரம்பித்துள்ளது. இதன் அங்கமாக, யாழ் மாவட்ட மாணவர்கள், இளைஞர்களின் கணனி அறிவை வளர்க்கும் முகமாக முற்றிலும் இலவசமான Coding கற்கைநெறியின் உத்தியோகபூர்வ ஆரம்ப நிகழ்வு நல்லூர் சங்கிலியன் மன்றத்தில் இடம்பெற்றது. யாழ்,கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் […]

ஐரோப்பா

பிரான்ஸில் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை!

  • October 22, 2023
  • 0 Comments

பிரான்ஸ், தலைநகரைச் சுற்றியுள்ள விமான நிலையங்கள் மற்றும் ரயில்களில் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டதை தொடர்ந்து  பாதுகாப்பை அதிகரிக்க உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார். பாரிஸ் விமான நிலையங்களில் பாதுகாப்பு ரோந்துகள் 40% அதிகரிக்கப்படும் என்றும் தேசிய ரயில்வே நிறுவனமான SNCF இன் ஊழியர்கள் 20% கூடுதல் பாதுகாப்பு அதிகரிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் வடக்குப் பகுதியில் உள்ள அராஸ் நகரில் 20 வயது இளைஞன் ஒரு ஆசிரியரைக் கத்தியால் குத்தியதை அடுத்து, அக்டோபர் 13-ஆம் திகதி முதல் பிரான்ஸ் […]

வட அமெரிக்கா

கனடா- ஒட்டாவாவில் 33 மதத் தலைவர்கள் கூட்டாக இணைந்து பிரகடனமொன்றில் கைச்சாத்து

  • October 22, 2023
  • 0 Comments

கனடாவின் ஒட்டாவாவில் 33 மதத் தலைவர்கள் கூட்டாக இணைந்து பிரகடனமொன்றில் கைச்சாத்திட்டுள்ளனர். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்பொழுது நிலவி வரும் போர் பதற்ற நிலையின் எதிரொலியாக கனடாவில் குரோத உணர்வைத் தூண்டும் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளன.இவ்வறான குரோத உணர்வு குற்றச்செயல்களை கண்டிக்கும் வகையில் இந்த கூட்டு பிரகடனம் கையொப்பமிட்டுள்ளது. இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் யூத மதங்களைச் சேர்ந்த தலைவர்களும் ஏனைய மதத் தலைவர்களும் கூட்டாக இணைந்து இந்த கண்டன பிரகடனத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.அனைத்து வகையிலான வெறுப்புணர்வு நடவடிக்கைகளும் கண்டிக்கப்பட […]

இலங்கை

மயிலிட்டியில் கசிப்பு மற்றும் கோடாவுடன் நபர் ஒருவர் கைது…

  • October 22, 2023
  • 0 Comments

பலாலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலிட்டி வடக்கு பகுதியில் இன்றைய தினம் 120 லீற்றர் கசிப்புடனும் 800 லீற்றர் கோடாவுடனும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டார். காங்கேசன்துறை பிராந்திய சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் இயங்கும் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. மயிலிட்டி வடக்கு பகுதியை சேர்ந்த 37 வயதானவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.இதன்போது கசிப்பு தயாரிக்க பயன்படுத்தும் பொருட்களும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபடும் குறித்த […]

இலங்கை

மட்டு வவுணதீவு பகுதியில் யானைகள் அட்டகாசம்: மக்கள் விசனம்

மடடக்களப்பு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப் பிரிவில் கடந்த ஒரு வாரத்தில் யானைகளினால் 10 வீடுகள் உடைத்துள்ளதுடன் 2 ஆயிரத்துக்கு மேற்றபட்ட தென்னை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளது. தினம் தினம் யானைகளினன் அட்டகாசத்தால் மக்கள் அச்சநிலையால் குடிமனைகளில் இருந்து வெளியேறும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்குமாறு மு.கிழக்கு மாகாணசபை உறுப்பினர், ஈ.பி.ஆர்.எல்.எப் இரா.துரைரெத்தினம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மு.கிழக்கு மாகாணசபை உறுப்பினர், ஈ.பி.ஆர்.எல்.எப் இரா.துரைரெத்தினம் இன்று ஞாயிற்றுக்கிழமை (22) ஊடக அறிக்கை […]

இலங்கை

வலுப்பெறும் காற்றழுத்தம் : மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவிப்பு!

  • October 22, 2023
  • 0 Comments

வளிமண்டலவியல் திணைக்களத்தில், இயற்கை அனர்த்தங்களுக்கான ஆரம்ப எச்சரிக்கை மையம் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு நாளை (23.10) பிற்பகல் 02.30 மணி வரை செல்லுபடியாகும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு மற்றும் அதனை அண்டிய மேற்கு வளைகுடாவில் நீண்டகாலமாக பயணங்களை மேற்கொள்ளும் மீன்பிடி படகுகள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மத்திய-மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகி அடுத்த 24 […]